சாயாசுந்தரம் கவிதைகள் 3

Spread the love

சாயாசுந்தரம்

1.எதுவோ ஒன்று….
——————————

போதும் எல்லாம்
கடந்துவிட வேண்டும் எப்படியாவது
மெல்ல ஆவி கசியும்
தேநீர் கோப்பையின்
வெம்மை ஊடுருவும்
சூனியத்துக்குள் புதையும் முன்
எடுத்து உறிஞ்ச ஆரம்பிக்கலாம்
நான் அதையோ
அது என்னையோ…..

—————————————————————————————————————————————————-
2.
இந்த நொடிகளில்….
நழுவிப்போன நேற்றையப்
பொழுதுகளின் மரணம் குறித்த
கவலையோ…..
எதிர்வரும் நாளைய
ஜனனம் குறித்த
எதிர்பார்ப்போ….
அர்த்தமற்றதாகிப் போகிறது
கரையும் நொடிகளைக்
காப்பாற்றுவது எப்படி
என்ற கவலையில்…

————————————————————————————————————-

3.அப்பா என் வண்ணத்துப் பூச்சி…
————————————————
அவரு பொண்ணுதான
அப்டியே அவர் ஜாடை
இடதுகை பழக்கமுமா
நீளமூக்கு….அகண்ட நெத்தி
அந்த கலர்….யார்யாரோ
சொல்லிச் செல்கிறார்கள்
என் கன்னம் வருடி
உறவினர் வீட்டு
நிகழ்வொன்றில்
என்னையும் அப்பாவையும் இணத்து….
பெருமிதப் பூரிப்பில்
அப்பாவின் தோள்சாய
இறுக என்கரம்
பற்றிக்கொள்ளும்
அப்பாவின் வலியவிரல்கள் எல்லாம்
வண்ணமிகு சிறகுகளாகத்
தெரிகின்றன என் கண்களுக்கு…..

Series Navigationபலவேசம்மயிரிழை