சித்தரும் ராவணனும்

Spread the love

 

லாவண்யா சத்யநாதன்

ராவணன் என்றார் சித்தர் ஒருவர்

ராமநாதன் என்னைச் சுட்டி..

எனக்கிருக்கும் தலை. ஒன்று

எந்த நேரமும் வெடிக்கும் வாய்ப்புகள் நூறு..

ஒருமுகத்தை பத்தாக்கத் தெரியாமல்

வீணாய்ப் போனவன் நான்.

நான்கைந்து கைகளிருந்திருந்தால்

நான் எப்போதோ தலைவனாகியிருப்பேன்.

பக்தி எங்கள் வம்சத்துக்கே அன்னியம்.

வீணையை சரசுவதி படத்தில் பார்த்ததோடு சரி,

காவியென்றாலே எனக்கு ஒவ்வாமை.

தங்கை தம்பிகளில்லை.

இலங்கேசனுக்கு மனைவி மண்டோதரி

துணைவி தான்யமாலினியென இருவருண்டு.

எதற்குச் சொன்னார் சித்தர்

என்னைப் பார்த்து ராவணனென்று.? .

 

 

——லாவண்யா சத்யநாதன்.

 

Series Navigationபிரபஞ்சத்தின் வயது என்ன ?தேமல்கள்