சீனாவின் மறக்கப்பட்ட குழந்தைகள்


கெண்ட் எவிங்

guizhou_dumpster_030 வருடங்களாக தலைதெறிக்கும் வேகத்தில் முன்னேறி வரும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் உபரி சோகக்கதைகளாக, சுற்றுசூழல் சீரழிவு, விஷமாகிவிட்ட உணவு, தலைவிரித்தாடும் ஊழல் ஆகிய சிலவற்றை குறிப்பிடலாம் என்றால், நகரத்துக்கு பிழைப்புக்காகவும் செல்வத்துக்காகவும் செல்லும் கிராமப்புற ஊழியர்கள் தங்களது குழந்தைகளை வயதான உறவினர்களிடமும் சில நேரங்களில் அப்படியே யாருமில்லாத அனாதைகளாக பரிதவிக்க விட்டுவிட்டும் செல்வது மனத்தை கலங்கடிக்கக்கூடிய முக்கியமான உபரி விளைவு எனலாம்.

பெரும்பாலான இப்படிப்பட்ட ஊழியர்கள் வேலைகளை கண்டுபிடித்துவிட்டாலும், அவர்களது பொருளாதார வளமைக்கு கூடவே அவர்களதுகுடும்பத்திற்கு சுமையாகவும் அந்த குழந்தைகள் அனாதைகளாகவும் ஆவதற்கு காரணம் நாட்டின் அமைப்பு முறையே. சீனாவின் ஹுகொ hukou என்றுஅழைக்கப்படும் வீடு பதிவு அமைப்பு கூட்டுக்குடும்பத்தில் வாழும் சீன குடும்பங்களை உடைக்கவே முயல்கிறது.

கிராமப்புறங்களில் வாழும் விவசாயிகளை கிராமப்புறங்களிலேயே வைக்கவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. பழங்கால கம்யூனிஸ அமைப்பின் கீழ், வீடு, சுகாதாரம், கல்வி, ஓய்வு ஊதியம் ஆகியவை அனைத்துமே ஒருவர் எந்த ஊரில் பிறந்திருக்கிறார் என்பதை வைத்தே அமையும். ஆகவே அந்த ஊரை விட்டு வெளியேறுவது என்பது, இந்த வசதிகளை தியாகம் செய்வதுதான் பொருளாகும். ஆகவே, சீனாவின் சுமார் 230 மில்லியன் உதிரி தொழிலாளர்கள், (கிராமத்தை விட்டு நகரத்து சென்று உழைக்க விரும்புபவர்கள்) இரண்டையும் வைத்துகொள்ள விரும்புகிறார்கள். இதனால், குழந்தைகளை வயதான உறவினர்களிடம் விட்டுவிட்டு நகரத்துக்கு சென்று பொருளாதார வசதிகளை அதிகரித்துகொள்ள விரும்புகிறார்கள்.

ஆனால், இத்தகைய கனவுகள் பெரும்பாலும் தீக்கனவுகளாக முடிந்துவிடுகின்றன. குய்ஜோவ் பிரதேசத்தின் பிஜீ என்னும் நகரில் சென்றமாதம் நடந்த நிகழ்ச்சி அதன் விளைவை கூறுகிறது.

நவம்பர் குளிர்கால இரவில், தட்பவெப்பம் ஆறு டிகிரி செல்சியஸுக்கு குறைந்தபோது, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் (9 முதல் 13 வயதுடைய சிறுவர்கள்) ஒரு குப்பை தொட்டிக்குள் ஏறி உடலை சூடாக வைத்துகொள்ள விழைந்தார்கள். அடுத்த நாள் குப்பை தொட்டியை துப்புரவு செய்யவந்த தொழிலாளி அந்த ஐந்து சிறுவர்களும் அங்கே கரியை எரித்து சூடாக்கிக்கொள்ள விழைந்ததில், புகையில் மூச்சு திணறி இறந்து கிடந்ததை கண்டார்.

இந்த சிறுவர்கள் மூன்று சகோதரர்களின் குழந்தைகள். இவர்கள் அனைவருமே ஷென்ஸென் நகரில் உதிரி தொழிலாளர்களாக இருக்கிறார்கள். இது ஹாங்காங்குக்கு அருகே உள்ள நகரம். அந்த குய்ஜோவ் விவசாயி தனது சொந்த மகனை பார்த்துகொள்ள முடியால் தனது சொந்தக்காரர்களிடம் விட்டுச்சென்றதால் வந்த வினை.

China-takes-a-tough-line-on-povertyஅந்த சிறுவர்கள் கார்பன் மோனக்ஸைடு வாயுவால் அந்த நகர்ப்புற குப்பைத்தொட்டியில் இறந்து கிடந்த நாளுக்கு முன்னால் மூன்று வாரங்களாக அந்த சிறுவர்களை குடும்பத்தை சேர்ந்த எவருமே பார்க்கவில்லை. அந்த சிறுவர்களின் பள்ளி ஆசிரியரும் பார்க்கவில்லை. ஆனால், சொந்தக்காரர்களோ அல்லது அந்த பள்ளிக்கூட அதிகாரிகளோ இந்த சிறுவர்கள் ஏன் வரவில்லை என்று ஆராயக்கூட இல்லை. அவர்களை தேடிப்போகவும் இல்லை. இந்த சிறுவர்கள் தெருக்களில் வாழும் சிறுவர் கூட்டத்தில் கலந்துவிட்டார்கள். சீனாவில் 1.5 மில்லியன் சிறுவர்கள் இவ்வாறு தெருக்களில் வாழ்கிறார்கள் என்று யுனிசெப் கணக்கிடுகிறது. உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

அதிகாரப்பூர்வமாக, 58 மில்லியன் குழந்தைகள் (உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்) இப்படிப்பட்ட உதிரி தொழிலாளர்களால் கைவிடப்பட்டிருக்கிறார்கள். இந்த சிறுவர்களை பற்றிய அரசாங்கத்தின் அக்கறையின்மையால், உண்மையிலேயே எத்தனை பேர் இந்த பிஜீ குழந்தைகளை போன்று மறக்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எண்ணி முடியாது.

இந்த சிறுவர்கள் இறந்த அதே வாரத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சி (CCP) மிகுந்த ஆடம்பரத்துடனும் பரபரப்புடனும் பீஜிங்கில் நடத்திய 18ஆவது தேசிய மாநாட்டில் தனது புதிய தலைமையை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது. Xi Jinping என்பவர் Hu Jintao வகிக்கும் சீன கம்யூனிச்டு கட்சி பொதுச்செயலாளர் பதவியில் அங்கீகாரம் செய்விக்கப்பட்டார். மார்ச் மாதம் தற்போது பிரதமராக இருக்கும் வென் ஜியபாவ் இடத்தில் லி கெகிஅங் பதவி வகிப்பார்.

சீனாவின் குடிமக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தையும் நீதி நியாயத்தையும் தரப்போவதாகவும் வாக்குறுதிகள் வழங்கி நீண்ட உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால், சீனாவில் இப்படிப்பட்டமறக்கடிக்கப்பட்ட குழந்தைகளை பற்றி யாரும் பேசவில்லை. ஆகவே, அப்படிப்பட்ட ஆடம்பர உரைகள் பிஜீ நகரத்தின் காதுகளில் விழவில்லை. உலகெங்கும் உள்ள சீனர்கள் தங்களது நாட்டில் இப்படி சிறுவர்கள் யாருமற்ற அனாதைகளாக இறப்பதை கண்டு அதிர்ச்சியையும், துயரத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

இணையவெளியில் பரவலாக காணப்பட்ட இந்த புலம்பல், தற்கால சீன சமுதாயத்தின் விழுமியங்களையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் பற்றிய ஆழ்ந்த சிந்தனை என்றுதான் கூற முடியும். Yue Yue என்ற 2 வயது சிறுவனை காரில் இடித்து கொன்றுவிட்டு ஓடிய சென்ற வருட நிகழ்வும் 21ஆம் நூற்றாண்டு சீனாவின் ஒழுக்க மதிப்பீடுகளை பற்றிய உரத்த சிந்தனையாக இணையத்தில் பேசப்பட்டது.

இரண்டு வயது சிறுமியை ஒரு வேன் இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் ஓடியதை ஒரு வீடியோ காட்டியது. தெருவில் சென்ற யாருமே அந்த சிறுமியை கண்டுகொள்ளவில்லை. தெருவில் கிடந்த அந்த சிறுமியின் மீது ஏழு நிமிடத்துக்கு பிறகு இன்னொரு வேன் ஏறிவிட்டு சென்றது.

யூ யூ ஒரு வாரத்துக்கு பிறகு ஃபோஷான் மருத்துவனையில் இறந்து விட்டாள். இரண்டு டிரைவர்களும் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டனர். ஆனால் ஒரு உயிருக்கான குறைந்த பட்ச மதிப்பு கூட கொடுக்காத அந்த பாதசாரிகளின் நடத்தை, சீன நாட்டின் மனசாட்சியை கேள்விக்குள்ளாக்குகிறது.

இப்போது, மீண்டும் ஒரு முறை, செல்வத்தின் பின்னே ஓடும் சமூகத்தின் ஒழுக்க மதிப்பீடுகளை இந்த குழந்தைகளின் மரணம் மறுசிந்தனை செய்ய வைத்துள்ளது. குடும்ப உறவுகளை உடைக்க உருவான அரசாங்கத்தின் வக்கிரம்பிடித்த ஹோகோ முறையின் அநீதியையும், அதனால் தெருக்களில் நிராதரவாக விடப்பட்ட குழந்தைகள் தெருப்பொறுக்குவதையும் மறு சிந்தனை செய்ய வைத்துள்ளது.

சினோ வைபோ Sina Weibo என்ற சீன மொழி டிவிட்டர் மாதிரி தளத்தில் இந்த நிகழ்ச்சி வெகுவாக பேசப்பட்டது. வழக்கம்போல, பலியாடுகள் நீக்கப்பட்டார்கள். இந்த சிறுவர்கள் படித்திருக்க வேண்டிய பள்ளிக்கூட தலைமையாசிரியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள். இன்னும் சில ஆசிரியர்கள், சில அதிகாரிகள், சில கீழ்மட்ட ஊழியர்கள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், இதையெல்லாம் நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். ஒரு அவமானகரமான விஷயம் வெளியில் வந்ததும், சில பலியாடுகள் பலி வாங்கப்படுகிறார்கள். ஆதாரமான காரணம் அலசப்படுவதில்லை. வாழ்க்கை ஓடுகிறது. சட்ட திருத்தங்களோ அல்லது அமைப்பு மாற்றங்களோ நடப்பதில்லை. சீனாவில் பல்கிப்பெருகும் ஊழலை சிந்தித்து பாருங்கள். அதன் விஷ உணவு பிரச்னையை சிந்தித்து பாருங்கள். அவ்வப்போது சிலர் பலிவாங்கப்படுகிறார்கள். ஏன் சீனாவின் கம்யூனிஸ கட்சி தலைவர் போ க்ஸிலாய்Bo Xilai பிரச்னையை எடுத்து பாருங்கள்.

சோங்பிங் பிரதேசத்தில் தலைமை பொறுப்பில் இருந்தபோது, போ தன்னையும் தன் குடும்பத்தையும் செல்வச்செழிப்புள்ளவராக மாற்றிகொண்டார். அப்படி செய்ததில், கட்சியில் எழுதப்படாத விதிகளைத்தான் அவர் பயன்படுத்தியிருக்கிறார். கட்சியில் மற்றவர்கள் செய்யாத எதையும் அவர் செய்யவில்லை. போவின் பிரச்னைக்கும், பிஜீ குப்பைத்தொட்டியில் இறந்த குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்?

உயர்ந்த நிலையானாலும் தாழ்ந்த நிலையானலும், ஊழலோ, உதாசீனமான அணுகுமுறையோ, அமைப்பு அதன் பலியாடுகளை பெற்றுகொள்கிறது. சிலர் போவுக்காக அழுகிறார்கள். ஏராளமானவர்கள் அந்த குழந்தைகளின் சாவுக்காக இணையத்தில் வருந்துகிறார்கள். அந்த அளவிலாவது நீதி இருக்கிறது எனலாம்.

http://www.atimes.com/atimes/China/NL06Ad02.html

yue yue பற்றிய செய்தி/வீடியோ

Series Navigationதலைநகரக் குற்றம்