சுந்தரி காண்டம் 3. வித்யா ரூபிணி சரஸ்வதி

Spread the love

சிறகு இரவிச்சந்திரன்
0சுந்தரி காண்டம்
3. வித்யா ரூபிணி சரஸ்வதி

வீணை அம்மாளின் இன்னொரு பெண் வித்யா. பத்மாவின் நடவடிக்கைகள் பிடிக்காததாலோ என்னமோ, அந்த அம்மாள் அவளை கொஞ்சம் கட்டுப்பெட்டியாக வளர்த்தாள். பள்ளிக்கூட நாட்கள் முதலே அவள் படிப்பு படிப்பு என்றே இருந்தாள். அதிக படிப்பினால் பள்ளி இறுதியாண்டிலேயே அவள் புட்டி அதாவது கண்ணாடி போட ஆரம்பித்து விட்டாள். சாட்டை போல முடி இருக்கும் அவளுக்கு. அதுவும் அடர்த்தியாக. ஆனால் அதை அவிழ்த்து விட்டு யாரும் பார்த்ததில்லை. எப்போதும் சுருட்டி கொண்டையாக முடிந்து வைத்திருப்பாள் அவளது அம்மா. என்றைக்காவது அவிழ்த்து விட்டால்கூட பழக்க தோஷத்தில் அவை கீழ் நோக்கி நீளாது என்று அங்கிருந்தவர்களது கருத்து.
கல்லூரி போகும் காலத்திலேயே அவளை கலெக்டர் படிப்புக்கும் தயார் நிலையில் வைத்திருந்தாள் அவளது அம்மா. பட்டம் வாங்கிய கையோடு கலெக்டர் பரிட்சை எழுதி தேர்வாகும் திறமை அவளுக்கு இருந்தது.
அவள் உடையணியும் விதமும் பத்மாவுக்கு நேர்மாறாக இருக்கும். கூந்தலைப் பற்றிதான் ஏற்கனவே சொல்லியாகிவிட்டதே. உடை எப்போதும் மங்கலான நிறங்களிலேயே இருக்கும். பல நாட்களில் நாகப்பழக் கலரும் யானைக் கலரும்தான். பாதம் தெரியாத அளவிற்கு பாவாடை நிலத்தில் புரளும். குனிந்த தலை நிமிராது. போர்த்திய தாவணியோ சேலைத் தலைப்போ எங்கும் விலகாதிருக்க சேப்டி பின் ஒன்றுக்கு இரண்டாக குத்தப்பட்டிருக்கும். காடாத் துணி வாங்கி அவளுக்கு பாடி தைத்திருப்பாள் அவளது அம்மா. அதுவும் சமீபத்தில் தைத்தவை அல்ல. அதனால் அதை மூச்சு பிடித்துதான் போடவேண்டும். உள்ளடங்கிய மார்புக்கூடு அப்புறம் விரியவே விரியாது. அதனாலேயே ஒரு வித கூன் முதுகு போட்டு அவள் நடப்பாள்.
அன்றும் அப்படித்தான் அவள் கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தாள். சைதாப்பேட்டையிலிருந்து மாம்பலத்திற்கு பஸ் கிடைக்காததால் அவள் நடந்தே வரவேண்டியிருந்தது. மூணாவது தெரு நாயக்கர் மாந்தோப்பில் காய் பறித்துக் கொண்டிருந்தார்கள். நாயக்கர் மகன் கோபாலு மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏற்கனவே பத்மா மீது ஒரு கண் இருந்தது. ஆனாலும் அவன் வித்யாவை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அவள் நடந்து வருவதைக் கண்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான் அவன்.
தொரட்டி கொம்பால் மாங்காய்களை வளைத்து இழுத்துக்கொண்டிருந்த போது கை நழுவி தொரட்டிக்கோல் செங்குத்தாக கீழே இறங்கியது. தொரட்டிக் கோலின் ஒரு முனையில் வளைந்த கத்தி ஒன்று இருக்கும். அது நேராக இறங்கி நடந்து வந்து கொண்டிருந்த வித்யாவின் பின் பக்க ரவிக்கையின் உள்புகுந்து இழுத்தது. லேசாக ரவிக்கை கிழிய ஆரம்பித்தது. கோபாலு ரத்தக்காயம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வேகமாக இழுக்க முழுதாக ரவிக்கை கிழிபட்டது. கத்தி காடா பாடியையும் கிழித்து போட்டது.
அடக்கி வைக்கப்பட்டிருந்த தனங்கள் திமிறிக் கொண்டு புறப்பட்டன. சேலைத் தலைப்பைத் தாண்டி அவை முன்னேற ஆரம்பித்தன. கோபாலு சுதாரித்துக் கொண்டான். சட்டென்று தலைப்பை இழுத்து விட்டு “ சொருகு “ என்றான். வித்யா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாள். சில வினாடிகள் காத்திருந்த கோபாலு அவள் பதிலுக்கு காத்திராமல் அவனே அவளது இடுப்பில் அழுத்தமாக சேலைத் தலைப்பை செருகிவிட்டான். அவனது முரட்டு கை பட்ட இடம் அவளுக்கு ஏதேதோ உணர்ச்சிகளை தூண்டி விட்டது.
“ சீக்கிரம் வீட்டுக்கு போ. ஏழு மணிக்கு ராமர் கோயிலுக்கு வந்திரு “
முடியாது என்பது போல் தலையசைத்தாள் வித்யா. தொரட்டிக்கோலைக் காட்டியபடியே எச்சரித்தான் கோபாலு. “ எனக்கு தெரிஞ்சது எல்லாருக்கும் தெரியணுமா “ என்று சன்னக் குரலில் கேட்டான்.
சரி என்பதுபோல் தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் வித்யா.
பாண்டிபஜாரில் புத்தகம் வாங்கிவருவதாக அவள் ஆறரை மணிக்கே கிளம்பியதும். ராமர் கோயில் பின்புறம் கோபாலுவை சந்தித்ததும் இந்தக் கதைக்கு அவ்வளவு முக்கியமில்லாத விசயங்கள்.
வித்யாவின் சிந்தனைகள் ஒரு காட்டற்றைப் போல திசை மாறி ஓடிக் கொண்டிருந்தன. என்ன ஆகப்போகிறதோ என்கிற பயமும், அப்படி ஏதாவது ஆனால் அது எப்படியிருக்கும் என்கிற நப்பாசையும் கலந்த ஒரு சிந்தனை ஓட்டம் அது. துவர்ப்பு நெல்லிக்காயை தின்று விட்டு பானைத் தண்ணீர் குடிப்பதைப் போல என்று நினைத்துக் கொண்டாள். யார் நெல்லிக்காய்? யார் பானைத்தண்ணீர்.
முரட்டு கோபாலுவின் கட்டுமஸ்தான தேகமும் புஜங்களும் இழுத்துக் கட்டிய அவனது லுங்கியத் தாண்டித் தெரிந்த அரை நிக்கருடன் கூடிய தொடைகளும் அவளை அநாவசியத்திற்கு நடுக்கத்தைக் கொடுத்தன.
ராமர் கோயில் பழைய மாம்பலத்தில் இருந்தது. பெரியகோயில். சுற்றிலும் ஏகத்துக்கு வெற்றிடங்கள். கோயிலே கவனிப்பாரற்று சிதிலமாகத்தான் இருந்தது. ஒரே ஒரு அரச மரம் நடுவில் இருக்கும். பெருமாள் கோயிலில் அரச மரம் இருக்கலாமோ என்கிற சிந்தனையும் ஓடியது.
கோயிலுக்கு எதிர் வீடு கம்பி வைத்த வராண்டா கொண்ட ஓட்டு வீடு. அவளது ஏதோ ஒரு வழி தாத்தா வீடு என்று அம்மா ஒரு தடவை சொல்லி யிருக்கிறாள். அங்கு யாராவது இருப்பார்களா? அவர்களுக்குத் தன்னை இன்னார் பெண் என்று தெரிந்திருக்குமா?
தாவணியை எடுத்து தலையோடு போர்த்திக்கொண்டாள் வித்யா. வாயைத் துடைப்பது போல் முகத்தை முக்கால் வாசி மூடிக் கொண்டாள். கம்பி வீட்டை நோக்கி முகம் திருப்பாமலே கோயிலுக்குள் நுழைந்தாள்.
“ ஏய் இந்தா.. இந்த லெட்டரை பத்மாகிட்ட குடுத்துடு.. எதுனா பதில் இருந்தா மாந்தோப்பில என்னியக் கண்டா கொடுத்துரணும். நல்லா படி இன்னா? “ என்றவாறே கையில் ஒரு நோட்டு புத்தகக் காகிதத்தைத் திணித்தான். விறு விறுவென்று நடந்து வெளியேறினான்.

முக்கியமான விசயம். வாழ்க்கையில் பல ரசங்களை கோபாலு அவளுக்கு கற்றுக் கொடுத்தான். ஆனாலும் அவளது படிப்பின் மேல் அவன் அளவு கடந்த மரியாதை வைத்திருந்தான். அதனால் அவன் எல்லை மீறவே இல்லை. உரிய வயதில் நாயக்கர் பெண் ஒருவளை திருமணம் செய்துகொண்டு அவன் வேறு ஊருக்கு போய்வ்¢ட்டான்.
பருவ வயதில் ஏற்பட்ட ஏக்கங்களுக்கு வடிகாலாய் கோபாலு இருந்ததால் வித்யாவால் அனாவசிய கற்பனைகளில் மூழ்கி வாழ்க்கையைத் தொலைக்கும் சந்தர்ப்பங்கள் ஏதும் வாய்க்கவில்லை. அவளது அம்மாவின் கனவை நனவாக்குவது போல அவள் கலெக்டர் படிப்பு படித்து தலைமை செயலகத்தில் பெரிய பதவி வகித்தாள்.
கடைசி வரை அவள் திருமணம் செய்து கொள்ளவேயில்லை.

Series Navigationத. அறிவழகன் கவிதைகள்சுதந்திரம் என்றால் என்னவென்று என் பாட்டனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை!