சுவடுகள்

Spread the love

 அருணா சுப்ரமணியன் 

 

1. 

 வழி நெடுக 

முட்களும் மலர்களும்..

பயணத்தின் நடுவே 

திரும்பி பார்த்தேன்..

மலர்களிலும் 

ரத்த சுவடுகள்…


2.  

சுமை ஏதுமின்றியும்  

பாரமாகிறது பயணம் 

ஒட்டிக்கொண்ட 

பாதச்சுவடுகளால்…3.

தத்தித்  தத்தி

பழகிய பறவைக்கு

தாழ் உயரங்களே

வானமாகிறது ….

முளைத்த இறகுகள்

விரிக்காமலே

உதிர்கின்றன

சிறகின் சுவடுகள்

சுமக்க  காத்து

கிடக்குது வானம்…..


– அருணா சுப்ரமணியன் 

 

Series Navigationஅருணகிரிநாதரும் அந்தகனும்திரு.க.பூரணச்சந்திரன் அவர்களுக்கு 2016 ஆண்டு மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி