பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் உண்டாகத் தானாக உருவாகும் பிண்டத் தூசித் திரட்டுகள்

This entry is part 3 of 14 in the series 5 மார்ச் 2017

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ சூரிய குடும்பப்  பின்னலில் ஆப்பம் போல் சுட்டுக் கோள்கள் திரண்ட தென்ன ? சூரிய மண்டத்தில் பூமி மட்டும் நீர்க்கோ ளான மர்மம் என்ன ? நீள்வட்ட வீதியில் நில்லாமல் ஒரே மட்டத்தில் சுற்றுவ தென்ன ? பூமியில் மட்டும் புல்லும், புழுவும், புறாவும் ஆறறிவு மானிடமும் பேரளவில் பெருகிய தென்ன ? அகக்கோள் பாறையாய், புறக்கோள் வாயுவாய் பரிதி சுற்றி வருவ தென்ன ? பிண்டத் […]

கல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)

This entry is part 1 of 14 in the series 5 மார்ச் 2017

சமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற சில மூத்த – இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை, மொழிப்பெயர்ப்பு துறையை, மொழிப்பெயர்ப்பாளர்கள் குறித்தும்குறித்து பேசினார்கள். வெளி ரெங்கராஜன் “விளக்கு” அமைப்பையும்,அதன் நோங்கங்களையும்  பற்றி கூறினார். அரசு நிறுவனங்கள், தமிழின் நவீன எழுத்துக்களையும், எழுத்தாளர்களயும் கண்டு கொள்ளாமல் செல்லும் நிலையில், விளக்கு போன்ற அமைப்புக்கள்தான், அவர்களை கொளரவிக்கவும், நல்ல எழுத்துக்களை வெளியிட்டும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு  ஒரு பாதை அமைத்து தரவேண்டும் என்றார். இந்தாண்டு, ஒரு […]

மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா ( 11-03-2017)

This entry is part 4 of 14 in the series 5 மார்ச் 2017

  கண்காட்சி – கருத்தரங்கு – பட்டிமன்றம் – மெல்லிசை, நடன அரங்கு – ஆவணப்படக்காட்சி.   அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள  அனைத்துலகப் பெண்கள் தினவிழாவில்,  ( அண்மையில் மெல்பனில் மறைந்த ) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களைப்பற்றிய நினைவுரை இடம்பெறும். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் நடத்தும் அனைத்துலகப் பெண்கள் தினவிழா இம்முறை மெல்பனில் – பிரஸ்டன் நகர மண்டபத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி ( […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 5 of 14 in the series 5 மார்ச் 2017

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++ [37] அந்திப் பொழுது அங்காடிச் சந்தையில் குயவன் கரங்கள் ஈரக்  களிமண் பிசையும். எதற்கும் அடங்கா  நாக்கு முணுமுணுத்து, மெதுவாய் தம்பி ! மெதுவாய் எனக்கெஞ்சும்.   [37] For in the Market-place, one Dusk of Day, I watch’d the Potter thumping his wet Clay: And with […]

அட கல்யாணமே !

This entry is part 10 of 14 in the series 5 மார்ச் 2017

      சோம.அழகு         திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு. கூடுதலாக உறவினர்களும் நண்பர்களும் கூடி மகிழ்வதற்கான நல்ல வாய்ப்பு என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் அதை ஆடம்பரமாக்கி பண பலத்தையும் ஆள் பலத்தையும் வெட்கமின்றி வெளிக்காட்டும் ஒரு தளமாக மாற்றும்போது, அந்த எதிர்பார்ப்பு இல்லாதோரிடத்தும் வைக்கப்படுகிறது. இந்நிகழ்வு சமூகத்தை பொருள் இருப்போருக்கே உரியதாக மாற்றுகிறது. அதற்கான கண்டனத்தை இப்படியும் பதிவு செய்யலாமே !   பெண் பார்க்கும் படலம் : இதுதான் முதல் படி என்பதால் […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! -2

This entry is part 6 of 14 in the series 5 மார்ச் 2017

  (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 2. மறு நாள். கிஷன் தாசின் பங்களாவின் சாப்பாட்டுக் கூடத்தில் அழகிய பெரிய கருங்காலி மர மேஜைக்கு முன்னால் அவரும் பிரகாஷும் அமர்ந்திருக்கிறார்கள். சமையல்காரர் நகுல் இருவருக்கும் முன்னால் தட்டுகளையும் கோப்பைகளையும் கொண்டுவந்து வைக்கிறார் தந்தையும் மகனும் சிற்றுண்டியைச் சுவைக்கத் தொடங்குகிறார்கள். நகுல் நாகரிகத்துடன் சமையல்கட்டு வாசற்படிக்கு நகர்ந்து சென்று நிற்கிறார். ஆவி பறக்கும் இட்டிலி, சட்டினி, சாம்பார் வகையறாக்கள் அவர்கள் நாவுகளில் உமிழ்நீர் துளிக்கச் செய்கின்றன. சாம்பாரில் தோய்த்த இட்டிலித் […]

கவியெழுதி வடியும்

This entry is part 7 of 14 in the series 5 மார்ச் 2017

    இலையிருளில் இருந்தவண்ணம்   எனையழைத்து ஒருபறவை பேசும்   இதயத்தின் கனத்தையெல்லாம்   இதமாகச் செவியறையில் பூசும்   குரலொலியில் மனவெளியைத்   தூண்டிலென ஆவலுடன் தூவும்   குரலினிமை குழலினிமை   கொஞ்சும்மொழித் தேனாக மேவும்      துயில்கின்ற மனமானோ   துள்ளலுடன் கனவாடை கலையும்   கனவாடை கலைந்தாலும்   கவிவாடை தானாக விளையும்   பொருள்புரியா  மொழிகேட்டு   புலர்காலை ஏக்கமுடன் விடியும்   புள்ளினத்தின் மனமறியாப்   பொங்குமனம் கவியெழுதி […]

கிழத்தி கூற்றுப் பத்து

This entry is part 8 of 14 in the series 5 மார்ச் 2017

    கிழத்தி என்பது தலவியைக் குறிக்கும். கிழவன் என்னும் தலைவனுக்கேற்ற தகுதியை உடையவள் இவள். இப்பத்துப் பாடல்களும் புறத்தொழுக்கம் பேணிய தலைவன் தம் இல்லம் வந்தபோது தலைவி ஊடல் கொண்டு கூறியனவாகும். கிழத்தி கூற்றுப் பத்து–1 நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம் நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம் கைவண் மத்தி கழாஅர் அன்ன நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே [நறுவடி=நறுமணமுள்ள மா வடுக்கள்; நற்றிணையிலும் “நறுவடிமா” என்று வரும்-[நற் 243]; மத்தி=கழாஅர் […]

தொடுவானம் 160. பட்டமளிப்பு விழா

This entry is part 9 of 14 in the series 5 மார்ச் 2017

  ஆவலோடு எதிர்பார்த்திருந்த !தேர்வு முடிவுகள் வந்தன. யாருமே தேர்வு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கமாட்டார்கள். பயத்துடன்தான் காத்திருப்பார்கள். ஆனால் எனக்கு முடிவுகள் நேர்முகத் தேர்விலேயே தெரிந்துவிட்டதால் நான் ஆவலுடன்தான் காத்திருந்தேன். எதிர்பார்த்தபடியே நான் இரண்டு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன்! இனிமேல் நான் எந்தத் தேர்வுக்கும் இரவு பகலாக படிக்கவேண்டியதில்லை. சிங்கப்பூரில் 1954 இல் ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய படிப்பை 1971 இல் முடித்துள்ளேன். இந்த கால கட்டத்தில் நான் எத்தனையோ தேர்வுகளை எழுதியிருப்பேன். படிப்பதும் தேர்வுகள் எழுதி […]

குடைவிரித்தல்

This entry is part 11 of 14 in the series 5 மார்ச் 2017

நிலாரவி ஒரு மழை நாளில் அவனும் குடை விரித்து நிற்கின்றான் கருப்பு நிறத்தில் குடைகளுக்கான எல்லா அடையாளங்களுடன் தானிருந்தது அவனதுகுடை அதன் முனை உச்சியை நோக்கி உயர்ந்து நின்ற மாதிரி இருந்தது குடைவிரித்த வண்ணமே நிற்கின்றான் அவன் கடந்து சென்ற பாதசாரிகளின் கவனம் சில நொடிகள் களவாடப்பட்டு மீட்க்ப்படுகிறது அவன் நின்று கொண்டிருந்த சாலையை கூட நிராகரித்து செல்கின்றன சில வாகனங்கள் சில சந்தேகங்களும் தயக்கங்களும் சில கைவிரிப்புக்ளும் அவனை நனையவிட்டு நகர்ந்தன சாலையோரம் குடைபிடித்த சில […]