சுவீகாரம்

Spread the love

பொத்தி பொத்தி

வளர்த்தாள்

ஒன்று தறுதலையாகும்

இன்னொன்று தமிழ் வளர்க்கும்

என்று

நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்

அவளுக்கு வேண்டுமென்று

ஒரு கவளை சோற்றையாவது

தட்டில் எடுத்து வைத்ததில்லை

நாங்கள்

வளர வளர

சுமையை பகிராமல்

மேலும் பாரமானோம் அவளுக்கு

இரத்தத் திமிரில்

வம்பை வீட்டுக்கு கொண்டுவர

ஒரு நாளும் எங்களுக்கு

பரிந்து பேசாமல்

இருந்ததில்லை அவள்

எந்த வேலையிலும் நிலைக்காது

சொந்தமயாய் தொழில் வைத்தோம்

ஒரு காசு வட்டியில்

அசலையும் வட்டியையும்

சேர்த்து சுமந்தாள்

வாழ்க்கை

யார் காலையும்

வாராமல் விட்டதில்லை என்பாள்

உணர்ந்து சொல்கிறாள்

என்று உணராமல்

வயிறு வளர்த்துக் கொண்டிருந்தோம்

நாங்கள்.

Series Navigationதேவலரி பூவாச காலம்வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு – அணிந்துரை