சூட்சுமம்

 

 

என் வீட்டின் அடுத்தமனை

காலிமனை
வீடு அங்கு எழும்பாதவரை
தேவலாம் எனக்கு
வீசி எறிய நித்தம்
சிலதுகள் என் வசம்
ஆகத்தான் வேண்டும்
காலி மனை 
மாமரம் ஒன்றுடன்
தென்னை மரமொன்று
வளர்ந்தும் நிற்கிறது
அக்காலி மனையில்.
நல்ல காரியம் சுற்றுப்பட்டில்
யார் வீடாயிருந்தாலும்
மாமரத்துக்கிளை இலைகள்
மொத்தமாய் ஒடிபடும்
வண்டி ஏறிப்போகும்.
யார் வீட்டு எழவோ
பச்சை மட்டை
இத்தென்ன தருவதுதான்
காய்கள் காய்த்தும்
தென்னை மரத்துக்குப்
போணி மட்டும் ஆகவில்லை
பாடைகட்ட விட்ட
மரக்காய்கள் சாமி
படைக்கச் சரிப்படாதாம்
அடுத்த ஊர்
தேங்காய்க்காரன்
சேதி சொல்லி
வெட்டிக்கொண்டுபோகிறான்
அவ்வப்போது.
 
 
Series Navigationஅ. முத்துலிங்கம் எழுதிய  “ ஐந்து கால் மனிதன்  “  வாசிப்பு அனுபவம்மலர்களின் துயரம்