சூம்

Spread the love

முகத்துக்கு நேரே

முகம் பார்க்கும் கண்ணாடி

இது என்ன

இடமாறு தோற்றப் பிழை

சுயம் உள்ளே

பிம்பம் வெளியே

சிறகு முளைத்தது

பிம்பத்துக்கு

பொம்மையானது சுயம்

பிம்பங்கள் சேர்ந்து

தேசம் கண்டது

அது ‘சூம்’ என்றானது

சூமின் கைதியாய்

சுயம் ஆனது

பாலைவனமானது சுயம்

கானல்நீரானது விடுதலை

கண்ணாடி பார்த்தது சுயம்

அங்கே பிம்பம் காணவில்லை

‘ஏய் நீ எங்கே போனாய்’

‘லண்டனில் பேசிக்

கொண்டிருக்கிறேன்’

‘நான் என்ன செய்வது’

‘தூங்கு’

அமீதாம்மாள்

Series Navigationஎக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4