சூரிய ஆற்றல்.

அ.சுந்தரேசன்.

காலையில் எழுந்ததும் சூரியனை வணங்குவது நம் வழக்கங்களில் ஒன்று.அச்சூரியன்,நமக்கு வெறும் ஒளியைமட்டும் கொடுக்கவில்லை; ஏராளாமான ஆற்றலையும் அளிக்கிறது.சூரியன் இன்றேல் நம் உலகு இல்லை!
புவிக்கு வெகு அருகாமையில்,சராசரியாக 1.496×1011 மீட்டர் தொலைவில் வெப்பமிகு அடர்த்தியான வாயுக்களான ஒரு கோளமே சூரியனாகும்.அதில் 73%ஹைட்ரஜன் வாயுக்களும்,25%ஹீலியம் வாயுக்களும்,1%க்கு குறைந்த அணு நிறை மிகுந்த தனிமங்களும் நிறைந்துள்ளன.
சூரியனானது பலகோடி ஆண்டுகளாக குளிர்ச்சியடையாமல்4x1026Js-1வேகத்தில் கதிர்வீச்சாற்றலை வெளியிடுகிறது.அதற்கு சூரியனில் தொடர்ந்து நிகழும் அணுக்கரு இணைவு வினைகளே காரணம். இவ்வினையில், ஹைட்ரஜன் அணுவின் உட்கருவான 4 புரோட்டான்கள்,சூரியனின் மிகு வெப்ப பகுதியில் ஒன்றிணைந்து ஹீலியம் உட்கரு உருவாகவும்,மிகுந்த ஆற்றலுடன்கூடிய வெப்பக்கதிர்கள் ஏற்படவும் முழுக்காரணமாகிறது. இத்தொடர்வினையினால் சூரியன் தன் மேற்பரப்பில் ஏராளமான சூரிய ஆற்றலை வெளிப்படுத்துகிறது. பூமியின் மேற்பரப்பு 174 பெட்டா வாட்
(peta watt )(174×109) ஆற்றலை சூரிய ஒளியிலிருந்து பெறுகிறது.
சூரிய ஆற்றலை நாம் பல்வேரு வழிகளில் பயன்படுத்தமுடியும் என்றாலும்,அதனை கீழ்கண்ட இரண்டு வழிகளில்தான் அதிகமாக உபயோகப்படுத்தி வருகிறோம்.
1)சூரிய வெப்ப ஆற்றல்(Solar thermal energy)
2)சூரிய ஒளி மின் அழுத்த ஆற்றல்(Solar photo voltaic energy)
…..2

2
1)சூரிய வெப்ப ஆற்றல்(Solar thermal energy)
நீரை சூடேற்ற,சமையல் செய்ய,பொருட்களை உலரவைக்க, நீரிலிருந்துஉப்பைப் பிரித்தெடுக்க போன்றவைக்கு சூரிய வெப்ப ஆற்றல் பயன்படுகிறது.
2)சூரியஒளி மின் அழுத்த மின் ஆற்றல்(Solar photo voltaic energy)
சூரிய மின் பலகைகளை சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் விழுமாறு அமைப்பதன் மூலம் சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றமுடியும்.
மரபு சார்ந்த எரிபொருள்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்போது சுற்றுசூழலைப்பாதிப்பதோடு,எரிபொருள்கள் இருப்பும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது!அத்துடன் இந்தியாவில் சராசரியாக 250- 300 நாட்கள் சூரிய ஒளி கிடைப்பதால்,சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் மின்சார அளவு ஆண்டொன்றிற்கு 500டிரில்லியன் யூனிட் என மதிப்பிடப்படுகிறது.இது நமது மொத்தத்தேவையை விட மிக அதிகம்.அதனால்,படிப்படியாக நாம் சூரியஒளி மின்சாரம் உற்பத்திக்கு ஆக்கமும்,ஊக்கமும் கொடுக்கவேண்டும்!

Series Navigationசொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்