சென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி. நாள்: 22-12-2013, ஞாயிறு

சென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி.

நாள்: 22-12-2013, ஞாயிறு.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கல்கி நகர், கொட்டிவாக்கம் KFC உணவகம் அருகில்.
நேரம்: மாலை 5 மணிக்கு.

Contact: 9840698236

நண்பர்களே சென்னையில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவில், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவிருக்கிறது. இதில் தேர்ந்த வாசகர்களுக்கும், புதிதாக படிக்க வரும் ஆர்வலர்களுக்கும் இருக்கும் பெரும்பிரச்சினை, எந்த புத்தகத்தை வாங்குவது, அதை ஏன் வாங்க வேண்டும் என்பதுப் போன்ற கேள்விகள்தான். இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு துறை சார்ந்து, என்னென்ன புத்தகங்களை வாங்கலாம், அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பதுப் போன்ற கேள்விகளுக்கு தமிழ் ஸ்டுடியோவின் “படிப்பது சுகமே” நிகழ்ச்சி வழிகாட்டவிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் தேர்ந்த வல்லுனர்கள், தொடர்ச்சியாக, என்ன மாதிரியான புத்தகங்களை வாங்கலாம் என்பது குறித்து, பேசவிருக்கிறார்கள். எதிர்வரும் ஞாயிறு அவசியம் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள்.

புத்தக அறிமுகம் செய்யவிருக்கும் ஆளுமைகள்.

மாலன் (எழுத்தாளர் & பத்திரிகையாளர்) – இலக்கியம்

விஜயஷங்கர் (FrontLine ஆசிரியர் ) – அரசியல் / ஆங்கில புத்தகங்கள்.

அம்ஷன் குமார் (ஆவணப்பட இயக்குனர்) – சினிமா

ஆர்.ஆர். சீனிவாசன் (பூவுலகு பத்திரிகையாசிரியர்) – சுற்றுசூழல் & சினிமா

தமிழ்மகன் (எழுத்தாளர் & பத்திரிகையாளர்) – அறியவியல் புனைவு & காமிக்ஸ் & அறிய புத்தகங்கள்

தம்பி மில்லர் – திரைப்பட ஆவணங்கள் தொடர்பான புத்தகங்கள்.

சண்முகானந்தம் – சுற்றுசூழல்

அனைவரும் வருக.. அனுமதி இலவசம்…

(குறிப்பு: பேப்பர் பேனாவுடன் நிகழ்விற்கு வரவும். நிகழ்வு சரியாக 5.10 மணிக்கு தொடங்கிவிடும்)

Series Navigation