மருமகளின் மர்மம் 8

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா   ‘என்ன, லூசி, இது? நாம பழகத் தொடங்கிக் கொஞ்ச நாளுக்குள்ளே இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்றே?’ என்ற ரமேஷ், ஏமாற்றத்துடன் அவளையே பார்த்தபடி இருந்தான். ‘என்னங்க செய்யிறது, ரமேஷ்? நான் வெறும் ஸ்டெனோதான். இப்ப ஒரு சீனியர் பி.ஏ. விலகிட்டதால எனக்கு அந்தப் பதவியைக் குடுத்து பாம்பேக்குப் போன்றாங்க. இப்ப ப்ரொமோஷன் வேண்டாம்னு சொல்றேன்னு வைங்க. அப்பால எனக்கு இன்னும் பல வருஷங்களுக்கு அது கிடைக்கவே கிடைக்காதுங்க. பாம்பேல எங்க சொந்தக்காரக் […]

சைனா அனுப்பிய முதல் சந்திரத் தளவூர்தி நிலவில் தடம் வைத்து உளவு செய்கிறது.

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  http://www.space.com/23792-china-moon-probe-off-and-flying-video.html http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aYwAdHJjiAY   சைனாவின் இரண்டாம் விண்ணுளவி சந்திரனைச் சுற்றியது ! மூன்றாம் ஏவுகணை முதலாக நிலவில் இறக்கிய தோர் தள உளவி ! அதிலிருந்து  நகர்ந்திடும் தளவூர்தி  ! ஆசிய முன்னோடியாய்ச் சைனாவின் இரு தீரர் அண்டவெளிப் பயணம் செய்ய விண்வெளியில் நீந்தி வெற்றி மாலை சூடி மண்மீது கால் வைத்தார் மறுபடியும் ! அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் போல் விண்சிமிழில் ஏறி வெண்ணிலவில் தடம் வைக்க […]

இயற்கையைக் காப்போம்

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

கௌரி சிவானந்தன்,திருச்சி. அழகிய இயற்கையைப் பாடி மகிழ்வோம்-அதன் அற்புதப் புதிர்களைத் தேடித் தெளிவோம்! பழகிய உறவுகள் கைவிட்டாலும்-நம்மை படைத்தநல் இயற்கைதான் கா்ப்பாற்றுமே! குறுகிய உளம்தனில் கொள்கையினால்-கொண்ட கூர்மதி குறைவதால் கெடுதல் செய்வார், இளகிய மனங்களை இசையச் செய்தே-எழில் இயற்கையின் வளங்களை என்றும் காப்போம்! பஞ்சமும் பிணியும் பாரினிலே-கொண்டு பாழாகும் மானுடம் பாராயோ, நெஞ்சமும் நிதம் நிதம் தான் நொந்ததே-உடல் நாளையை நினைத்தேதான் நலிவுற்றதே! பறவைகள் மிருகங்கள் பதை பதைக்க-காட்டை பாவிகள் வேரோடு கருவறுக்க, உறைவிடம் இன்றியே பறி […]

தேவயானியும் தமிழக மீனவனும்…

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

இந்தியப் பாராளுமன்றத்தின் வகை தொகையில்லாமல் பல கட்சி எம்பிக்கள், மந்திரிகள் எல்லாம் கொந்தளித்துப் போனார்கள்.. ஏன்..? இந்தியத் தூதர் அவமானப்படுத்தப்பட்டார், பொதுவெளியில் கைவிலங்குப் போடப்பட்டு கூட்டிச்செல்லப்பட்டார். கேவிட்டி தேடலுக்கு உட்படுத்தப்பட்டார்.. என்று. ராகுலும், கூகுல் பண்ணி தேவயானி பற்றிச் சரியாக பார்க்காமல், தன்னை சந்திக்க வந்த அமெரிக்க காங்கிரஸ் குழுவை சந்திக்க மறுத்தார். இளவரசர் செய்தாச்சு… பேரரசர் சும்மா இருப்பாரா..? மோடி டிவீட் செய்தார், “இந்தியாவின் அசைக்க முடியா ஒத்தும நிலைப்பாட்டிற்காக தானும் சந்திக்க மறுத்ததாக. அரவிந்த் […]

டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். அம்மா….நீ சொல்ல வந்ததை மங்களத்துக்கிட்ட சரியாவே கேட்கலை….அதான் மங்களத்துக்கு அவ்ளோ… தர்மசங்கடம். மங்களம்,நீங்க என்னைப் பார்த்து அப்படிக் கேட்டா மாறி, நான் உங்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டால் என்னவாக்கும்?னு நினைச்சாக்கும் அம்மா, அப்படியொரு கேள்வியக் உங்கிட்டக் கேட்டாள், சரி சரி…இந்த கேள்விக்கு நீங்க போய்ட்டு வந்து பதில் சொல்லுங்கோ போதும். ஒண்ணும் அவசரமில்லை…அதுவரைக்கும் இந்த பிரசாதத்தை….சாரி…சாரி….இந்த பிரசாத்தை யாரும் தூக்கிண்டு போயிட மாட்டா என்று கேலி செய்து சிரித்துக் கொண்டே கௌரி, […]

பாசத்தின் விலை

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

பவள சங்கரி ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன் நண்பன் ஆராவமுதன் தன் இனிய குரலில் பதிவு செய்து அனுப்பிய பட்டினத்தடிகளின் பாடலை மெய்மறந்து, உடன் முணுமுணுத்துக்கொண்டே ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சபேசன். “ஏண்ணா.. ஏண்ணா, நான் […]

அதிகாரி

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

நேற்று கனவில் ஆயிரக்கணக்கான தோழர்களிடையே திரு. சம்பத் சார் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தார். யாரும் கைத்தட்டவில்லை. அருகில் ஒரு பையன் சோடா பாட்டிலை வைத்துக் கொண்டு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பேச்சு அனல் பறந்தது. “அதிகாரிகளால் அதிகாரிகளுக்காக, அதிகாரிகளாக சேர்ந்து கண்டுபிடித்த விஷயம்தான் பஞ்சுவாலிட்டி. ஆனால் அந்த பஞ்சுவாலிடி அதிகாரிகளுக்கு மட்டும் இல்லை என்பதில் அந்த அதிகாரிகள் தெளிவாக இருப்பார்கள். அதிகாரத்தை ஒரு இடத்தில் நிலைநிறுத்துவதற்கு தன்னிலிருந்து மற்றவர்களை தாழ்த்தி பிரித்து வைப்பதற்கு, ஒரு அதிகாரி […]

மேடம் ரோஸட் ( 1945)

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

புனைக்கதை மன்னன் ரோஆல்ட் டாஹ்ல் { ROALD DAHL}- சிறகு இரவிச்சந்திரன் இதுவரை கேள்விப்படாத, ஆசிரியரின் பெயரில் வெளிவந்த, 20 புனைக்கதைகள் கொண்ட பாக்கெட் பதிப்பு எனக்குக் கிடைத்தது. ஜெ•ப்ரி ஆர்ச்சர், ஹிட்ச்காக் என பயணித்த என் ஆங்கில வாசிப்பு, கொஞ்சம் சந்தேகத்தோடு இதற்குள் நுழைந்தது. ஆனால் நடையின் சரளமும், பாசாங்கில்லாத விவரிப்பும் என்னைக் கட்டிப்போட்டது. ஒவ்வொன்றாக, படிக்க படிக்க, தமிழுக்கு தருவதாக ஒரு எண்ணம் வலுப்பெற்றதன் வடிவமே இந்த முயற்சி. ரொஆல்ட் நார்விஜியன் பெற்றோர்களுக்கு பிறந்தவர். […]

அன்பு மகளுக்கு..

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

– சுப்ரபாரதிமணியன்., நேரு தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் “ கண்டுணர்ந்த இந்தியா “. (டிஸ்கவரி ஆப் இந்தியா ) இன்று நீ கண்டுணர்ந்த இந்தியா, கண்டுணரும் இந்தியா என்று நான் குறிப்பிடும் விசயங்கள் கசப்பானவை. ஆனாலும் பகிர்ந்து கொள்ளத்தானே வேண்டும். ” மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ- இந்தப் பாரில் அறங்கள் வளரும் ,அம்மா “ ( கவிமணி தேசிக விநாயகம் ) ” […]

தாகூரின் கீதப் பாமாலை – 94 வசந்த காலப் பொன்னொளி .

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. உன் ஆத்மாவோ டிணைந்துளது என் ஆத்மா பாடல் பின்னல்களில் ! உன்னை நான் கண்டு பிடித்தது உனக்கே தெரியாது, அறியாதன வற்றை அறியும் முறைப்பாட்டில் ! போகுள்* பூக்களின் நறுமணத்துடன் புதைந்து கொண்டது அம்முயற்சி ! கவிஞனின் தாள இசையுடன் கலந்து கொண்டது ! உனக்குத் தெரியாமல் உன் பெயரை முலாம் பூசினேன் பன்னிறத் தொனி வண்ணத்தில் ! உன் வடிவற்ற தோற்றத்தை வெளிப் […]