வால்ட் விட்மன் வசனக் கவிதை – 54 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) காத்திருக்கிறாள் எனக்கோர் மாதரசி ..!

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 54 ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
காத்திருக்கிறாள் எனக்கோர் மாதரசி ..!

walt-whitman

(1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

காத்திருக் கிறாள் எனக்காகக்
காரிகை ஒருத்தி !
எல்லாம் உள்ளது அவளிடம் !
இல்லையென அவள் எதுவும்
இழக்க வில்லை!
காமசக்தி இல்லையேல் மாந்தரிடம்
காணாது போகும் எல்லாம் !
அல்லது
தகுதி வாய்ந்த மனித
ஈர்மை
இல்லாமல் போயின் !
காம சக்தி
மானிடத்துக் கெல்லாம் அளிப்பது;
மேனி உடம்பு, ஆத்மாவை
ஆளுவது.
அர்த்தம், நிரூபணம், காவியம்,
அறிவிப்பு, விளைவு
தூய்மை, மென்மை, பெருமை,
தாய்மை மர்மம்,
உடல் நலம், நம்பிக்கை,
காதல் உணர்ச்சி, மன இச்சைகள்,
வனப்பு, புவித்தளச் சுகங்கள்,
அனைத்தும் அடங்கும் அங்கமாய்
காம சக்தியில்,
அல்லது
அதன் காரணத்தில் !

ஒளிமறை வின்றி
நான் பேணும் ஆணும் அறிந்து
ஏற்றுக் கொள்வது
காமம் தரும் நலத்தை !
ஒளிமறை வின்றி
நான் விரும்பும் மாதரும் அறிந்து
ஏற்றுக் கொள்வது
காமம் தரும் சுகத்தை !
நழுவிச் செல்வேன் நானுடனே
அன்பு உணர்வற்ற
நங்கையரை விட்டு விலகி !
எனக்காகக் காத்திருக்கும்
வனிதை யோடு நான் வசிப்பேன்.
கணப்பு உதிரம் ஓடும்
காரிகை யோடு நானிருப்பேன் !
என் தகுதிக் கேற்ற
பெண்ணுடன் நான் தங்குவேன்.
என்னைப் பிறர் புரிந்திட
முன் வருவேன்.
என்னை மறுக்காத மாதருடன்
இருக்க விழைவேன்.
ஏற்றவரா அவர் எனக்கென்று
சோதிப்பேன்.
அம்மாத ருக்கு ஏற்ற
உடற்கட்டு உள்ள பதியென்று
உண்மை சொல்வேன்.

+++++++++++++++++
தகவல்:

1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]

4. Encyclopedia Britannica [1978]

5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [December 18, 2012]

****************

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *