டி.கே.துரைசாமியை படியுங்கள் !

நேதாஜிதாசன்

ராமச்சந்திரனா என கேட்பார்
எந்த ராமசந்திரன் என்றும் கேட்பார்
சாவிலும் சுகம் உண்டு என்பார்
சுசிலா அழகு என்பார்
அது ஏன் என்றும் தெரியவில்லை என்பார்
இந்த மனதை வைத்து எதுவும் செய்யமுடியாது என்பார்
தனிமையில் தனிமையோடு தான்
இருந்தார்
மஞ்சள் நிற பூனையை பற்றி சொல்வார்
நினைவுப்பாதையில் நிழல் பட வாக்குமூலம் சொல்லி நாயோடு சென்றவர்
அவர் இப்போது இல்லை
இருந்தால் ஏன் நான் இல்லை
என கேட்டிருப்பார்
தயவு செய்து நகுலனை விட்டுவிடுங்கள்
நவீனனை பேசவிடுங்கள்
டி.கே.துரைசாமியை படியுங்கள்
திருமதி.சுசிலாவை விட்டுவிடுங்கள்
கோட்ஸ்டாண்ட் தொங்கி கொண்டிருக்கிறது
மூன்று ஒன்று இரண்டுக்கு அப்புறம் இருக்கிறது
தயவு செய்து நகுலனை விட்டுவிடுங்கள்
நவீனனை பேசவிடுங்கள்

Series Navigationஇன்னா இன்னுரை!சாமானியனின் கூச்சல்