தடயம்

 

 

மழை ஈரத்தில்

பூமி பதிந்துகொண்ட

பாத அடையாளங்கள் போல

எல்லா நினைவுகளும்

காலத்தில் தேங்கி நிற்கவில்லை.

 

ஜெட் உமிழ்ந்துவிட்டுச் சென்ற

உறைந்த வெள்ளைப் புகை

உருவாக்கின ஒற்றையடிப்பாதையை

சூரியன் உருகிக்

கரைத்துவிடுவதுபோல

 

என் வாழ்க்கை வனாந்தரத்தின்

ப்ரத்யேக ஸ்வரங்களைத்

தொடுத்து விடுமுன்னர்

கலைத்துவிடுகிறது காலம்.

 

கர்ப்ப வாசம் தேடி

இப்போது அலையும் மனமும்

விட்டுச் செல்லவில்லை

எந்தச் சுவட்டையும்.

 

 

—  ரமணி

Series Navigationதங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..