தமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்

// இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினைகளில் எடுக்கப்படும் நிலைப்பாடுகள் பல சமயங்களில் பெரிதும் சுயசார்புகளை மையமாகக்கொண்டிருக்கின்றன. இவை ஒருபிரச்சினையின் ஆதாரமான கேள்விகளை பலவீனமடையச் செய்துவிடுகின்றன. பாதிக்கப்படும் நபர்களின் பின்புலங்கள் முரண்பாடுகளைக் காட்டிலும் முக்கியமானவை ஒரு சமூகத்தில் அரசு எந்திரத்தின் அதிகாரத்திற்கும் சிவில் உரிமைளுக்கும் இடையிலான பிரச்சினைகள். இந்த உரிமைகளை நாம் ஒருமுறை பாதுகாக்கத் தவறினால் அவற்றை மீண்டும் அடைவது கடினம். இங்கு பத்திரிகையாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பல சயங்களில் இரட்டை நிலைப்பாடுகளே இருக்கின்றன. ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகளில் குறைந்த பட்ச அளவில்கூட பொதுக் கருத்துக்கள் எட்டப்படுவதில்லை.//

உயிர்மை ஆசிரியரும், ஜெயமோகன் போன்றவர்களால் அறிவுஜீவி என்று கொண்டாடப்படுபவருமான மனுஷ்ய புத்திரன் பிபிஸி தமிழ் சேவையில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதனை இந்த பக்கத்தில் கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/01/120124_manushyaputhiran.shtml
… இந்த பேட்டியில் முதன்பகுதியில் சல்மான் ருஷ்டிக்கான தடை தவறு என்றும், அரசாங்கம் சல்மான் ருஷ்டிக்கு பாதுகாப்பு கொடுக்காமல் அவரை தடை செய்தது, இந்திய குடிமகனான தனக்கு பெரிய அவமானம் என்று கூறுகிறார். இது ஒரு ஓட்டு வங்கிக்காக இப்படிப்பட்ட நாடகம் ஆடுகிறது என்று குற்றம் சாட்டுகிறார். இஸ்லாமியர்கள் மீது உலகம் முழுவதும் ஒரு களங்கம் சுமத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் வன்முறையாளர்கள், விவாதத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்ற களங்கம் சுமத்தப்பட்டிருக்கிறது என்கிறார்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் இப்படிப்பட்ட எதிர்ப்பு இஸ்லாமியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிற குற்றச்சாட்டை உண்மையாக்குகிறது; இது இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையாகத்தான் பார்க்கிறார். “இஸ்லாமியர்களை வேட்டையாடக்கூடிய அமெரிக்க அதிபர்” இந்தியாவுக்கு வந்தால் அதனை எதிர்த்து போராடுவீர்களா என்று கேட்டாராம். எழுத்தாளர்களுக்கு கருத்துரிமையைவிட முக்கியமானது பொறுப்புரிமை என்று அறிவுரை தருகிறார். கருத்துரிமையை விட சமூகத்தின் நல்லிணக்கம் மிகவும் முக்கியம் என்று கூறுகிறார். அதற்காக எழுத்தாளர்கள் தங்கள் கருத்தை திரும்பபெற்றுகொள்ள வேண்டும் என்று கூறினார்.

தஸ்லிமா நஸ்ரினும் சல்மான் ருஷ்டியும் தங்கள் கருத்துக்களை திருப்பிப்பெறவேண்டும் என்று மனுஷ்ய புத்திரன் கோரினால், பெரியாரையும் அம்பேத்காரையும் தடை செய்யலாமா என்று பேட்டியாளர் கேட்டார். அதற்கு மென்று விழுங்கினார் மனுஷ்ய புத்திரன்.

அதாவது எம்.எப் உசேனை வைத்து இந்துத்துவா அமைப்புகள் பலம் பெறுமென்றால், அதனை தடுப்பதற்காக, அப்போது எம்.எப் உசேனை விட்டுக்கொடுக்க தயங்கமாட்டேன் என்றார். மக்கள் ரத்தம் சிந்துவதை தடுப்பதை விட கருத்துசுதந்திரம் முக்கியமில்லை என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டதாக கூறி பேட்டி முடிவடைகிறது.

இப்போது சிக்கல் உங்களுக்கு புரிந்திருக்கும். முதலில் சல்மான் ருஷ்டிக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காக இந்திய அரசை விமர்சித்தவர், இறுதியில் இந்திய அரசின் நிலைப்பாட்டையே எடுத்து, சல்மான் ருஷ்டி தனது கருத்துக்களை திரும்ப பெற்றுகொள்ள வேண்டும். சல்மான் ருஷ்டிக்கான கருத்து சுதந்திரம் முக்கியமில்லை. அவருடைய கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பதால், ரத்தம் சிந்தப்படுமெனில் அவரது கருத்து சுதந்திரம் தடுக்க பட வேண்டும் என்ற நிலைப்பாடுக்கு வந்துவிடுகிறார். பேட்டி எடுத்தவருக்கு என் பாராட்டுகள்.

வன்முறை வெடிக்கும் என்ற அச்சுருத்தலை முன் நிறுத்தி இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கைகள் வைக்கும்போது அதனை ஒப்புக்கொள்வதுதான் அந்த அமைப்புகளை பலமிழக்க வைக்கும் என்ற தலைகீழ் வாதத்தினை வைக்கிறார் மனுஷ்ய புத்திரன். தங்களது வன்முறை மிரட்டல் ஒப்புக்கொள்ளப்படும்போதெல்லாம் இந்த இஸ்லாமிய அமைப்புகள் மேலும் மேலும் பலமடைகின்றனவே தவிர பலமிழக்கின்றனவா? சரி, சல்மான் ருஷ்டியை உள்ளே விட்டால் வன்முறை வெடிக்கும் என்று இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டுகின்றன. அவர்கள் யாருடைய ரத்தத்தை சிந்துவார்கள்? சொந்த முஸ்லீம்களின் ரத்ததையா அல்லது சுற்றியிருக்கும் இந்துக்களின் ரத்தத்தையா?

பெரியார், அம்பேத்கார் பற்றிய கேள்விக்கும் மென்று விழுங்குகிறார் மனுஷ்யபுத்திரன். அவர் எளியதாக சொல்லியிருக்கக் கூடிய பதிலை அவர் ஏன் சொல்லவில்லை என்ற காரணத்தையும் அலசலாம்.

பெரியார் அம்பேத்கார் தங்களது கடுமையான இந்து மத எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்தபோது யாரும் அவர்கள் மீது வன்முறை தொடுக்கவில்லை. வன்முறை வெடிக்கும் என்று எந்த இந்து அமைப்பும் அறிவிக்கவில்லை. சொல்லப்போனால், இந்துக்களில் பெரும்பாலானவர்களே அவர்களின் ஆதரவாளர்களாகவும் இருந்தார்கள். இந்து மதத்தை பற்றிய விமர்சனத்தால் நாடெங்கும் கலவரம் நடக்கவில்லை. தலித்துகளில் தனது ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்களோடு பௌத்தமதத்தை தழுவியபோது கூட இந்துக்கள் அவர்கள் மீது எந்த விதமான வன்முறை தாக்குதலையும் தொடுக்கவில்லை. இன்றைக்கும் கூட தன்னை நாத்திகவாதி என்று கூறிக்கொள்ளும் எந்த இந்துவும் குடும்பத்தால் விலக்கி வைக்கப்படுவதில்லை. அதே போல தன்னை நாத்திகவாதி என்று கூறிக்கொள்ளும் ஒரு முஸ்லீம் அவருடைய குடும்பத்தாலும் சமூகத்தாலும் எப்படி நடத்தப்படுவார் என்பதற்கு மனுஷ்யபுத்திரன் உதாரணம் தரலாம்.

மனுஷ்ய புத்திரன் எளியதாக சொல்லியிருக்கக்கூடிய பதில், “இந்து மதத்தின் மீதான விமர்சனங்களுக்கு இந்துக்கள் எப்போதுமே வன்முறையை பதிலாக எடுக்கவில்லை. அவர்கள் எப்போதுமே விவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகையால் பெரியார் அம்பேத்கார் போன்றவர்களின் எழுத்துக்களை தடை செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் யாரும் தடை செய்ய கோரவில்லை” ஆனால் அவர் அதனை சொல்லவில்லை. ஏன்? அப்படி சொன்னால், இஸ்லாமியர்கள் தங்களது மதத்தின் மீதான விமர்சனங்களை வன்முறை மூலமாகவே சந்திக்கிறார்கள். அவர்கள் விவாதங்களில் நம்பிக்கையில்லாதவர்கள் என்று ஒத்துகொள்வது போல. அந்த கேள்வியை உடனே பேட்டி எடுப்பவர் கேட்டிருப்பார். அதனால்தான் அந்த பதிலை மனுஷ்ய புத்திரன் சொல்லவில்லை.

இஸ்லாமியர்கள் எப்போதுமே தங்கள் மதத்தின் மீதான விமர்சனங்களை விவாதத்தின் மூலமாக சந்தித்ததில்லை. அதன் இன்றைய நிரூபணமாகவும் இருப்பது கடைய நல்லூரும், சவுதி அரேபியாவும்.

சமூக நல்லிணக்கம் என்ற பொய்மானை தேடுவதற்காக கருத்து சுதந்திரத்தை பலிகொடுக்கலாம் என்ற உயரிய மனுஷ்யபுத்திரனின் கருத்துக்கு எளிய பதில் இருக்கிறது.

நான் மனுஷ்ய புத்திரன் நடத்தும் உயிர்மை பத்திரிக்கை மத நல்லிணக்கத்தை குலைக்கிறது என்று கருதுகிறேன். அப்படி கருதும் ஒரு ரவுடி கும்பல் ஒன்று சேர்ந்து, உயிர்மையை தடை செய். இல்லையேல் வன்முறை வெடிக்கும் என்று அறிவித்தால், மனுஷ்ய புத்திரன் தனது பத்திரிக்கையை மூடிவிட்டு இதே மாதிரி பேசுவாரா என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

உயிர்மை என்னுடைய மத நம்பிக்கையை பாதிக்கிறது, மத நல்லிணக்கத்தை கெடுக்கிறது என்று அதன் மீது யார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். அது மட்டுமல்ல, இஸ்லாமிய கிறிஸ்துவ பத்திரிக்கைகள் எல்லாவற்றின் மீதும் அதே வகையில் வழக்கு தொடரலாம். அது சரியானது என்று மனுஷ்ய புத்திரன் கருதுவாரா?

^^

கடைய நல்லூர்.ஒர்க் தளத்தில்

http://kadayanallur.org
இந்த செய்தி இருக்கிறது. படித்து பாருங்கள்.

சுருக்கமாக விஷயம் இதுதான்.

மக்கட்டி துராப்ஷா என்ற மனிதர் தனது பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாமை விமர்சிக்கும் ஒரு பக்கத்தின் சுட்டியை கொடுத்திருக்கிறார். அதற்காக, அவர் மீது கடையநல்லூரில் உள்ள முஸ்லிம் தலைவர்கள், பொது ஜனங்கள் கோபம் கொண்டு அவரை விசாரணை செய்ய முடிவு செய்கிறார்கள். இஸ்லாமை விமர்சித்ததற்காக அவரை காபிர் என்று அறிவிக்கிறார்கள். இறுதியில் அவர் மன்னிப்பு கேட்டு இஸ்லாத்தை மீண்டும் கலிமா சொல்லி ஏற்றுகொண்டிருக்கிறார்.

ஒரு சிலர் அவரை அங்கஹீனம் செய்யபோவதாக இருந்தது என்று சொல்கிறார்கள். ஒரு சிலர் அவரை காபிர் என்று ஆக்கியதால் அவரது மனைவி கட்டாய விவாகரத்து செய்யப்படும் படி நிர்பந்திக்கப்பட்டார் அதுவல்ல நான் சொல்வது.

அதில் உள்ள அதிகாரப்பூர்வ காகிதத்தை பாருங்கள். தமிழ்நாடு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட காஜி அவர். ஆக தமிழ்நாடு அரசின் அதிகாரத்துடன் அவர் செயல்படுகிறார். இதே போல ஒரு இந்து குருக்கள் இந்து மதத்திலிருந்து ஒருவருக்கு விலக்கமும், அவரது மனைவி விவாகரத்து செய்யப்படுகிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மனித உரிமை காவலர்கள், முக்கியமாக மனுஷ்ய புத்திரன் என்ன சொல்வார் என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

%%%
ஹம்ஸா கஷ்காரி என்ற சவுதி அரேபிய ப்ளாக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மிலாது நபி திருநாளன்று சில ட்விட்டுகளை செய்தார். இந்த அரபி ட்விட்டுகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு இவை “On your birthday, I will say that I have loved the rebel in you, that you’ve always been a source of inspiration to me, and that I do not like the halos of divinity around you. I shall not pray for you,” he wrote in one tweet.

“On your birthday, I find you wherever I turn. I will say that I have loved aspects of you, hated others, and could not understand many more,” he wrote in a second.

“On your birthday, I shall not bow to you. I shall not kiss your hand. Rather, I shall shake it as equals do, and smile at you as you smile at me. I shall speak to you as a friend, no more,” he concluded in a third.

http://www.theblaze.com/stories/saudi-bloggers-tweets-about-muhammad-has-some-calling-for-his-execution/

இதற்காக அவரது தலையை துண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை சவுதி அரேபியாவில் பலமாக எழுந்தது. அதிர்ச்சி அடைந்த ஹம்ஸா உடனே தன் ட்விட்டுகளை நீக்கிவிட்டு மன்னிப்பு கோரினார். ஆனாலும், அவரது தலையை துண்டிக்க கோரிய குரல்கள் அடங்கவில்லை. இதனால், ஹம்ஸா கஷ்காரி நியூசிலாந்துக்கு ஓடி தஞ்சமடைய விரும்பினார். சவுதி அரேபியா அவரது பெயரில் ரெட் லெட்டர் நோட்டீஸை இண்டர்போல் அமைப்புக்கு கொடுத்து அவரை எங்கிருந்தாலும் கைது செய்யவேண்டும் என்று கோரியது. அவரது விமானம் மலேசியாவில் நின்றபோது, மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சவுதி அரேபியாவுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆமாம். இண்டர்போல் என்ற உலகளாவிய போலீஸ் அமைப்பு இஸ்லாமிய ஷரியாவின் நீளும் கையாக செயல்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய மதத்தில் பிறந்துவிட்ட மனிதர்கள் தங்களது குரல்வளைகளை தாங்களே நெரித்துகொள்ள வேண்டும் என்று மனுஷ்ய புத்திரன் கூறுகிறார். மத நல்லிணக்கம், ரத்தம் சிந்துதல் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக கருத்துரிமை பற்றி பேசுபவர்களின் ரத்தத்தை மட்டும் சிந்தலாம் என்று கேட்கிறார்.

இஸ்லாம் ஒரு மதம்.

மதம் என்பது ஒரு கொள்கை.

(இந்து மதத்திலிருந்து வெளியேறியவர்கள் இந்து பயங்கரவாதிகளுக்கு பயப்படுகிறார்களா? இந்து ஜாதியிலிருந்து வெளியேறி மற்றொரு ஜாதியில் திருமணம் செய்துகொண்டவர்கள் தங்கள் சொந்த ஜாதி பயங்கரவாதிகளுக்கு பயப்படுகிறார்களா? ஆனால், ஒரு ஜாதி என்பது ஓரளவு இன ரீதியானது. அது பொது பேச்சில் இழிவு படுத்தப்படும்போது அது இன ஒடுக்குமுறையாகிறது. அதற்கு எதிராக தலித்துகள் பொங்கி எழுவதோ வன்னியர்கள் பொங்கியெழுவதோ சரியானது. ஆனால், இஸ்லாம் இந்து மதம் கிறிஸ்துவம் ஆகியவை இன ரீதியானவை அல்ல. அவை மதங்கள். அவை ஒரு கொள்கையை அடிப்படையாக கொண்டவை. இந்த மதங்கள் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டு போன்ற கொள்கை ரீதியானவை. அந்த கொள்கையை ஒப்புகொள்பவரே அதில் இருக்கலாம். திமுவிலிருந்தோ அல்லது அதிமுகவிலிருந்தோ கம்யூனிஸ்டு கட்சியிலிருந்தோ கொள்கை பிடிக்காமல் வெளியேறுபவரை கொல்வது போன்ற கொடுமையானதுதான் ஒரு மதத்திலிருந்து வெளியேறுபவரை கொல்வது)

விமர்சிக்கப்படவே முடியாத ஒரு கொள்கை என்று ஒன்றுமே இருக்க முடியாது. இஸ்லாம் என்ற கொள்கை மட்டுமே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்ற முஸ்லீம் தலைவர்களின் கோரிக்கைக்கு மனுஷ்ய புத்திரன் கூறும் வாதத்தை வைத்து உலகளாவிய நாடுகள் தலையாட்டுகின்றன. மத நல்லிணக்கம், ரத்தம் சிந்துதல்.. ஆமாம்.

அதற்காக இண்டர்போலை கூட ஷரியாவின் கரமாக ஆக்க தயாராகும்போது, தமிழ்நாடு அரசு மட்டுமே எப்படி தனியாக நிற்க முடியும்? அதனால்தான் தமிழ்நாடு அரசே, முஸ்லீம் குடும்பத்தில் பிறந்துவிட்ட ஒரு மனுஷரின் மன்னிப்பை ஏற்று அவர் காபிர் அல்ல, அவர் முஸ்லீம் என்று அறிவிக்கிறது. என்ன செய்வது? மத நல்லிணக்கம், ரத்தம் சிந்துதல்… இந்துத்துவா அமைப்புகளை ஒடுக்குதல்தானே மிக முக்கியம்?

இடதுசாரிகள் வெகுகாலத்துக்கு முன்னரே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் apologist ஆகிவிட்டார்கள் என்பது இன்று பலரும் வைக்கும் ஒரு விமர்சனம். நான் அதனையும் தாண்டி ஒரு விஷயத்தை கருதுகிறேன் இன்று பல ”சிறுபான்மையின”: அறிவுஜீவிகள் இந்துமதத்தையும் இந்துத்துவாவையும் திட்ட இடதுசாரி முகமூடியை அணிந்துகொள்கிறார்கள் என்பது நான் கண்டது. அ மார்க்ஸ், இன்குலாப், எஸ் வி ராஜதுரை வரிசையில் இன்று மனுஷ்யபுத்திரனையும் வைத்து பார்க்க ஆரம்பிக்கிறேன்

ஆனால் விஷயம் அவ்வளவு எளியதும் அல்ல. இதே பேட்டிக்கு ஒரு இடதுசாரி (இந்து என்று நினைக்கிறேன்) ஒருவர் ”இஸ்லாமியர் இதயங்களை ரணமாக்கிய மனுஷ்யபுத்திரன்..” என்று எழுதியிருக்கிறார். என்ன காரணம். அதே மேற்கண்ட பேட்டியின் முதல் பகுதியில் சல்மான் ருஷ்டியை இந்தியா வரவிடாமல் செய்த இந்திய அரசாங்கத்தை கண்டித்ததுதான் காரணம். தனக்கு பிடிக்கவில்லை என்பதால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் மனுஷ்யபுத்திரனை காட்டிகொடுக்கும் வேலை. நெருங்கி கேட்டால் நான் இந்து அல்ல நாத்திகன் என்று தைரியமாக சொல்லிகொள்வார்கள். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த நாத்திகர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் பயப்படுவது நிஜமானது. நாத்திகர்கள் இந்து பயங்கரவாதிகளுக்கு எதிரியாக காட்டிக்கொள்வது ஈஸியானது. இல்லையா? கடையநல்லூரில் செய்தது போலவா இந்து பயங்கரவாதிகள் செய்யப்போகிறார்கள்? அல்லது சவுதி அரேபியா செய்தது போல இந்து பார்ப்பன பயங்கரவாத இந்தியா இவர்களை இண்டர்போல் மூலம் தேடப்போகிறதா?

இஸ்லாம் ஒரு பிரச்னை என்று எனக்கு தோன்றவில்லை. இஸ்லாமிய தலைவர்கள் இஸ்லாமை தங்களுக்காக உபயோகப்படுத்திகொள்கிறார்கள். இஸ்லாமை யாருமே கேள்வி கேட்க முடியாது என்ற கருத்தை உலகம் முழுவதும் உறுதிப்படுத்துவன் மூலம் இந்த தலைவர்களுக்கு எதிராக எழும் எந்த குரலையும் “இஸ்லாமிய எதிர்ப்பு குரலாக” காட்டுவது எளிது. நம்பவும் வன்முறையில் இறங்கவும் ஆட்கள் இருக்கும்போது, எந்த ஒரு அரசியல் எதிர்ப்பையும் இஸ்லாமுக்கு எதிராக குரலாக காட்டுவது மிக மிக எளியது. அதனாலேயே இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் மிக எளிதில் சர்வாதிகாரத்துக்கு இடம் கொடுக்கின்றன.

2005இல் ஒரு அறிவுஜீவி இதனை எழுதினார்

இஸ்லாமிய அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் இஸ்லாமியர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகயுமே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செலுத்தக்கூடியது என்பதை நான் பல அரங்குகளில் முன்வைத்திருக்கிரேன். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பத்தற்கோ, ஹிந்த்துத்வாவை எதிர்ப்பத்தற்கோ இஸ்லாமிய பயங்கரவாத்தை மறைமுகமாகவோ, ரகசியமாகவோ ஆதரிப்பது மிகவும் ஆபத்தானது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறேன். ஷாபானு ஜீவானாம்ச வழக்கில் நான் ஷாபானுவை ஆதரித்து எழுதிய கட்டுரைக்காக அடிப்படை வாதிகளால் மிரட்டப்பட்டேன். கவிஞர் ரசூலின் கவிதைத் தொகுப்பை அடிப்படை வாதிகள் எதிர்த்து இயக்கம் நடத்தியபோது அவரை ஆதரித்து நான் எழுதிய கட்டுரை என்னுடை ‘காத்திருந்த வேளையில்’ தொகுப்பில் இருக்கிறது.

எழுதியது மனுஷ்ய புத்திரன் 2005இல்

Series NavigationKalachuvadu to publish a collection ancient Chinese poems in Tamilசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54