தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு

Spread the love

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் தமுஎகச சார்பில் வரவேற்புக்குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கவிஞர் ச.சிவக்குமார் தலைமை வகித்தார். கவிஞர் கவிவாணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர் சோ.முத்துமாணிக்கம், ஆர்.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சு.தண்டபாணி, துணைத்தலைவர்கள் சக்திவேல்,நிலக்கோட்டை ஊராட்சிகளின் கூட்டமைப்பின் தலைவரும், பழைய வத்தலக்குண்டு ஊராட்சி மன்ற தலைவருமான ஆர்.தனபாலன், கவிஞர் ராஜராஜன், கவிஞர் ஜெயதேவன், ரா.இளையராஜா, நிலவை திருநாவுக்கரசு, வழக்கறிஞர் சண்முகம், மகுடபதி, துணைத்தலைவர் வசந்தமுகில், வதிலை வெங்கடேஷ், நிலவை முருகேசன், வைகை முத்து, லெட்சுமணன். காசிராஜன், கணேசன், ரகுபதி, முருகேசன், சின்னையா, இரமேஷ் பாண்டியன், எம்.எம்.செல்வராஜ், வதிலை சக்திவேல், பாடகர் கண்ணன், செந்தில், விஜயவேல், நாகபாண்டி, உதயகுமார், அலெக்சாண்டர், கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சுதந்திரப்போராட்டத்தியாகிகள் மற்றும் மறைந்த எழுத்தாளர்கள் சுப்பிரமணிய சிவா, ராஜம் அய்யர், பி.எஸ்.ராமய்யா, சி.சு.செல்லப்பா ஆகியோரை நினைவிபடுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை அனைவரும் மேற்கொள்ளவேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602

Series NavigationInterstellar திரைப்படம் – விமர்சனம்