டாக்டர் ஜி. ஜான்சன் பால்ய நண்பன் பால்பிள்ளை என் அளவுக்கு வளர்ந்திருந்தான். அவன் என் பக்கத்துக்கு வீடுதான். எதிர்வீட்டு மண்ணாங்கட்டி என்ற கலியபெருமாள் திரும்பி வரவேயில்லையாம். நான் சிறு வயதில் சிங்கப்பூர் சென்றபோது வீட்டை விட்டு ஓடிப்போனவன். அவனுடைய அப்பாவைப்போலேவே அவனும் காணாமல் போய் விட்டான். அவனுடைய தாயார் கண்ணமாவும் இறந்து விட்டார். பால்பிள்ளை என்னுடன்தான் மூன்றாம் வகுப்ப வரைப் படித்தான்.அதன்பின்பு ஆறாம் வகுப்புக்குமேல் அவனால் படிக்க முடியவில்லை.வசதிக் குறைவால் சிதம்பரம் சென்று கல்வியைத் தொடர முடியவில்லை. […]
காட்சி 4 காட்சி 4 காலம் காலை களம் உள் வீடு. சுவர்க் கடியாரம் அடிக்கிறது. நாயகியின் அண்ணன் ரத்னவேலு (வயது 60) கூடத்தில் நுழைந்து நிற்கிறான். கையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிபன் பாக்ஸ். நாயகி உள்ளிருந்து வருகிறாள் ரத்னவேலுவைப் பார்த்து அவள் முகத்தில் அதிர்ச்சி, மகிழ்ச்சி. நாயகி: என்ன அண்ணே, திடுதிப்புனு வந்திருக்கீங்க? அம்மா, நீங்க எலோரும் சௌக்கியம் தானே? ரத்னவேலு: ஏதோ இருக்கோம்மா.. பாரு.. கூத்துலே கோமாளி மாதிரி திடீர்னு வந்து சிக்கறேன்.. என்னாலே […]
வணக்கம். சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் 6ஆவது பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் எதிர்வரும் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ளது. இதன் அழைப்பு இணைப்பில் உள்ளது. தமிழ் அன்பர்களின் வாழ்த்தினை வேண்டுகிறோம். தங்கள் உண்மையுள்ள, முனைவர் தி.நெடுஞ்செழியன் தலைவர், இதழியல் கழகம் தமிழ் இணைப்பேராசிரியர் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி-620 002.
வையவன் இடம்: ஆனந்தராவ் வீடு. உறுப்பினர்: ராஜாமணி, கங்காபாய், ஆனந்தராவ். நேரம்: மணி மூன்றரை (சூழ்நிலை: ஆனந்தராவ் ஈஸிசேரில் படுத்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கிறார். நடுவில் இரண்டு மூன்று முறை தும்மி விடுகிறார். வெளியே மிளகாய் அரைக்க, முறத்தில் மிளகாயைக் கொட்டிக் காம்புகளை அகற்றி கொண்டிருக்கிறாள் கங்காபாய்) கங்காபாய்: சின்னக் கொழந்தை மாதிரி பிடிவாதம் பிடிச்சேள்! மழை வர்றாப்பில மானம் மூடிண்டிருக்கு, வாண்டாம் வாண்டாம்னேன் கேட்டேளோ? பழையதிலே தயிர் போட்டு சாப்பிட்டுத்தான் ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சேள், சாயங்காலம் […]
குழந்தைக்கவிஞர் அழ வள்ளியப்பாவின் குழந்தைக் கவிதைகளின் ரசிகை நான். அதே போல் நடைவண்டி என்ற குழந்தைக் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாலசுப்ரமணியம் முனுசாமி வெளியிட்டிருக்கிறார். இவை இரண்டும் குழந்தைகள் பாடும் பாடல்கள். குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் மென்மையை மேன்மையைப் பற்றியும் அதே சமயத்தில் வாழ்வின் ஆத்ம விசாரங்களையும் தான் எதிர்கொண்ட நிகழ்வுகளையும் அழகான கவிதைகளில் ரசனையோடு கொடுத்துள்ளார் ராமலெக்ஷ்மி. இரண்டு விருதுகள் இவரது முதல் கவிதைத் தொகுதிக்குக் கிடைத்துள்ளன. அதுவே இத்தொகுதியின் சிறப்பைக் கூறும். முதல் கவிதை […]
பூ.அ ரவீந்திரன் (தலைவர் , தமிழ்ச்சிற்றிதழ் சங்கம், கோவை ) “ இலக்கியப் படைப்புகள் சமூக மனிதனை , அவனது உயிர் வாழ்க்கையின் பல்வேறு கோலத்துடன் அவனது உணர்வுகளுக்கும் சிந்தனைக்குமுள்ள முரண்பாடுகளும், சமூகத்துடனான அவனது உறவுகளும் அவனது அக வாழ்க்கையையும் புற நடத்தைகளையும் சித்தரிக்கின்றது.இவற்றுள் தனி மனிதனுக்குள்ளும் அவனது வாழ்க்கையும் வரலாற்றுச் சமூக சூழ்நிலையில் பண்பாட்டைக்காட்டுபவை கதைகள் “ என்ற கார்த்திகேசு சிவத்தம்பியின் வாசகங்கள் ( தமிழில் இலக்கிய வரலாறு, என்சிபிஎச் வெளியீடு ) சுப்ரபாரதிமணியனின் “ […]
என். செல்வராஜ் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகி யது. 135 ஆண்டு கால நாவல் வரலாற்றில் பல்லாயிரக்கணக்கில் நாவல்கள் வந்துள்ளன. இதுவரை வெளிவந்த நாவல்களில் சிறந்த 150 நாவல்களைக் கண்டறிய நான் எடுத்துக் கொண்ட முயற்சியே தலை சிறந்த நாவல்கள் ஒரு பார்வை, சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்-1 , சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்-2 ஆகிய மூன்று கட்டுரைகளாக வந்தன. இவை திண்ணை இணைய இதழில் வெளிவந்தன. இந்த மூன்று […]
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & ஜூன்1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் […]
ஆத்ம கீதங்கள் – 6 ஓயட்டும் சக்கரங்கள் .. ! [கவிதை -4] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முழு நாளும் சக்கரங்கள் சுற்றி இரைச்ச லிட்டு முகத்திலே சுடுங் காற்றை வீசும் நெஞ்சு துடித்து தலை சுற்றும் வரை, சுற்றுச் சுவர்கள் இடம் விட்டு நகரும் வரை ! வானுயர் ஜன்னலும் வெற்றிட மாய்ச் வற்றும். நீள் விளக்கொளி சுவரின் கீழ் நிழலாய் வீழ்ந்து விடும். […]
வைகை அனிஷ் தமிழகத்தில் அந்நிய நாட்டு கலாச்சாரம் நுழைந்தாலும் இன்றும் பாரம்பரியமிக்க சுவடுகளாக பல கிராம மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மாறிவரும் கலாச்சாரத்தால் மண்பாண்டத்தொழில் மண்ணோடு மண்ணாகி வருகிறது. தேனி மாவட்டத்தில் புல்லக்காபட்டி, கள்ளிப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி உள்பட பல இடங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இந்தத்தொழிலை செய்து வந்தனர். மண்பானை, மண்ணால் ஆன குதிர், மண்சட்டி, மண்அடுப்பு, மண் கலயம், கார்த்திகை சுட்டி, கோயில்களில் மண்சுட்டிகளில் திரிஏற்றுதல் என மண்ணால் செய்யப்பட்ட பொருள்களையே நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். […]