தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2017 – (குறும்படங்களுக்கு மட்டும்)

author
0 minutes, 3 seconds Read
This entry is part 10 of 12 in the series 9 ஏப்ரல் 2017
நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. நான்காம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறவிருக்கிறது.
விருதுத் தொகை:
 
ரூபாய் 25000/-
தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.
கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும்.
 
விதிமுறைகள்:
* பாலுமகேந்திரா விருதுக்கு குறும்படங்களை அனுப்ப நுழைவுக் கட்டணம் ரூபாய் 250/- “PADACHURUL” என்கிற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க DD யாக, கீழ்க்கண்ட முகவரிக்கு படங்களோடு சேர்த்து அனுப்ப வேண்டும். காசோலை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நேரில் பியூர் சினிமா புத்தக அங்காடியில் படத்தை கொடுக்க விரும்புபவர்கள், 250 பணத்தை கொடுத்து அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.
* குறும்படங்கள் (Short Films) எந்தக் கருப்பொருளிலும் எடுக்கப்பட்டிருக்கலாம்.
* குறும்படங்கள் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
* குறும்படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி. யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
* இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம், இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.
* குறும்படத்தின் கதைச் சுருக்கம் (Synopsis), முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Still Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
* முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் முன்னிலையில் சென்னையில் திரையிடப்பட்டு விருதுக்குரிய குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
* குறும்படங்கள் 01.01.2012 க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும். ஒருவர் எத்தனை குறும்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் ஒரு குறும்படத்திற்கு 250 ரூபாய் நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
* விருது தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள், அலைப்பேசி அழைப்புகள் அனுமதிக்கப்படமாட்டாது.
* ஆவணப்படங்கள் (Documentary Films) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
* பரிசுகள் பாலுமகேந்திரா பிறந்த தினமான மே 19ஆம் தேதி, (மே 19 வேலை நாளாக இருந்தால், அதற்கடுத்து வரும் வார இறுதிநாளில் வழங்கப்படும்)
* விருதுக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : மே 03, 2017
 
* குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
 
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600026.
Series Navigationவிண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார்.தூங்கா மனம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *