வெகு நாட்க ளுக்கு முந்தி
இருண்ட பல
நடுநிசிகளில் முணுமுணுத்தேன்
நானுன் காதிலே
பல்வேறு சம்பவங்கள்;
பற்பல ரகசியப் பாடல்கள் நான்
படைத்து வைத்தவை !
“நினைவில் உள்ளதா அவை ?” யென்று
வினாவ மட்டும் தான் நான்
வந்துள்ளேன் மீண்டும் .
இந்த நள்ளிரவின் இதயத்திலே
இரண்டறப் பின்னி நிலைத் துள்ளன
எனது பாடல்கள் !
ஆதலால் காலை எழும் போது எனது
காதில் பாடலைக் கேட்கிறேன்
என் பலகணி வழியே !
அணைந்து போனது என் விளக்கு !
கனவுக் காட்சியில் ஈரக் காற்று என்னைக்
கலக்கி அடிக்குது இக்கணம் !
மீண்டும் புயல்களில் பாடல் கேட்கும் !
சரமாறிப் பொழியும் பேய்மழை
அரவத்தின் ஊடே கேட்கும் !
சதுப்பு நில வாடைப் பூத மரங்களின்
சல சலப்பில் கேட்கும் !
ஈர மண்ணின் வாசனையில் வெளிவரும் !
திடீரென அவை அனைத்தும்
ஓடிவரும் என் நினைவில் !
+++++++++++++++++++++++++
பாட்டு : 73 தாகூர் 61 வயதினராய் இருந்த போது 1922 நவம்பரில் அவரது மனைவி மிரினாளினி தேவி (1873-1902) மரித்து 20 ஆவது மரண நினைவாண்டு நிறைவில் எழுதியது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] November 27 , 2012
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை.
- இலக்கு
- தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….
- மரண தண்டனை- நீதியின் கருநிழல்
- தாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … !
- பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்
- நாம்…நமது…
- மரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்
- நீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.
- தளபதி .. ! என் தளபதி ..!
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38
- நினைவுகளின் சுவட்டில்(104)
- நதியும் நானும்
- விருப்பும் வெறுப்பும்
- நம்பிக்கை ஒளி! (9)
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 47) ஓர் உடன்படிக்கை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -5
- அக்னிப்பிரவேசம்-12
- கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா
- ஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு!
- அடங்கி விடுதல்
- ஆமைகள் புகாத உள்ளம் …!
- நம்பிக்கை என்னும் ஆணிவேர்
- சன் ஆப் சர்தார் ( இந்தி )
- கவிஞர் சிற்பியின் சில படைப்புகள்
- குரு
- என்னைப் போல் ஒருவன்
- பிஞ்சு மனம் சாட்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு
- நன்னயம் – பின்னூட்டம்
- மரபும் நவீனமும் – வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’
அன்பின் திரு.ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,
இந்தக் கவிதை….ஒரு சோகத்தை சுகமாகச் சொல்கிறது..
“நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே…நீந்கிடாத துன்பம் பெருகுதே..
அணைந்த தீபமாய் ஆகிப் போனதேன்….உடைந்து போன சிலையானதே..!”
இந்தப் பாடலின் இறுதி வரிகள் வரை நினைவுக்கு இழுத்து வந்தது இந்தக் கவிதை…!
அழகான மொழியாக்கம். மிக்க நன்றி.
திண்ணையில் அநேகமாக அனைத்துத் தலைப்பிலும் தங்களின் படைப்புகள்
பளிச் பளிச் சென்று மின்னுகிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
அன்புமிக்க ஜெயஶ்ரீ,
அணைந்த விளக்கில் மீண்டும் வெளிச்சம் உண்டாகும். ஒரே கல்லில் பல மாங்கனிகள் விழ வைத்ததற்குப் பாராட்டு, நன்றிகள்.
சி. ஜெயபாரதன்