தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் !

This entry is part 28 of 33 in the series 3 மார்ச் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 54

என் மனதில் இருப்பதை அறிபவன் !

 

Tagore

 

 

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

எனது மனதில் இருப்ப தென்ன

உனக்குத் தெரிந்தி ருக்கு மென்று

எனக்குத் தெரியும் !

உன்னிட மிருந்து அதை

ஒளித்து வைக்க விழைகிறேன் !

அதைக் கவர்ந்து கொண்டன

அந்தக் கண்கள் !

அப்படி இல்லை யெனின் நான்

செப்புவ தொன்றும்

அர்த்தம் வேறொன் றாய்ப் போகும் !

அடிக்கடி வெகு தொலைவுக்கு

அப்பால் செல்கிறேன் !

அங்கு தங்கிக் கொள்கிறேன்

தெரு ஓரத்தில் என்

தினப் பொழுதைக் கழிக்கிறேன் !

 

நீ வருகிறாய் ! போகிறாய் !

என் உள்ளத்தில் என்ன இருக்கு தென்று

உன் ஓரக் கண்ணால்

ஒருபுறம் பார்த்துக் கொண்டு !

இரவுக் காரிருளில் எப்போதும்

நிலைத்திருக்கும்

எனது வழிபாட்டுக் கோயில் தளம் !

நீ ஊடுருவிச் செல்வாய்

அந்தக் காரிருளையும்

புன்னகை மின்னல் கனல் வீசி !

 

ஏகாந்த நிலையில் கழியும்

எனது இரவுகளும் பகற் பொழுதுகளும்

தனித்த ஒரு மனப்பாங்கின்

எதிரொலிப்பாய் !

கான இசை பாடுவேன் அப்போது

கால நேரம் தெரியாமல் !

கடந்து செல்வாய் அருகில் நீ

சில சமயம், என் மனதில்

உள்ள தென்ன வென்று கேட்டுத்

தெரிந்து கொள்ள !

 

+++++++++++++++++++++++++

பாட்டு : 74 1926 பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தாகூர் 64 வயதில் அகர்டாவிலிருந்து கொல்கத்தாவுக்கு ரயில் பிரயாணம் செய்த போது எழுதிப் பின்னர் பிரபாசியில் [Pirabasi in Badra 1333 BS] வெளியானது.

+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road, Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] February 26, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationகவிதைகள்போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *