“தாயைக்காக்க தனயன்களே புறப்படுங்கள் ,தமிழைக்காக்க தமிழர்களே புறப்படுங்கள்………!”

 

                                                             தலைவர்.வே.ம.அருச்சுணன்
        இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் சரிவை கண்டுள்ளதைக் கண்டு தமிழ்மொழி வளர்ச்சி மீது அக்கறையும் மொழிமீது உயிரையே வைத்துள்ள உண்மையான தமிழர்களுக்கு அதர்ச்சியும் வேதனையும் தந்துள்ளன. இந்நிலை இனியும் தொடருமானால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளே இந்நாட்டில் இல்லாமல் அழிந்து போய், தமிழ்ப்பள்ளிகள் தேசிய பள்ளிகளாக மாற்றம் கண்டு தமிழ் மாணவர்கள் அனைவரும் மலாய் மொழியிலேயே கல்வி பயில வேண்டிய கட்டாய  நிலை  ஏற்படும். இதனால்,எதிர்காலச் சந்ததியினர் தமிழ்மொழியைப் பயிலும் அரிய வாய்ப்பை மலேசிய அரசியல் சட்டம்  வழங்கிய போதும் அதனை தமிழ் இனம் முறையாகப் பயன் படுத்திக் கொள்ளத் தவறினால் தமிழ்மொழியப் பயிலும் வாய்ப்பை இழக்க நேரிடும். இது, ‘யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப்போட்டதற்கொப்பாகும்’.
        தமிழ் ஆரம்பப்பள்ளிகளில், அறிவியல்,கணிதமும் ஆகிய இரு பாடங்களும் ஆங்கில மொழிகளில் போதிக்கப்பட்ட போது, தமிழ்ப்பெற்றோர்களிடையே ஓர் எழுச்சியைக் காண முடிந்தது. தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தபோது தமிழ் பற்றாளர்களின் உள்ளங்கள் குளிர்ந்து போனது! இந்த மகிழ்ச்சி நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை! அறிவியல்,கணிதம் மீண்டும் தமிழ் மொழியில் போதனை தொடங்கிய போது தமிழ்ப்பள்ளிகளில் மீண்டும் அதர்ச்சி தரும்வகையில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிவை ஏற்படுத்தி இந்நாட்டில் தொடர்ந்து வாழுமா? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளதைக் காணும் போது, பெரும் பாலானா தமிழர்களிடையே தமிழ்ப் பற்று இல்லாத சுயநலப்போக்கையே வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இந்நிலை,இந்நாட்டுத் தமிழர் அனைவருக்கும் ஏற்பட்ட தலைக்குனிவாகும்.தமிழை அழித்த பாவம் இவர்களை வந்து சேரும்.
         தோட்ட மக்களும்,பட்டணத்தில் வாழும் நகராண்மைக் கழக சாதாரண ஊழியர்களும்,மற்றும் சாதாரண நிலையிலுள்ள மக்கள்  மட்டுமே தமிழை வளர்க்கும் கடமைபட்டவர்கள் அல்லர்,மாறாக ‘இந்தியக் கோட்டாவில்’ குளிர்காயும் மெத்த படித்தவர்களும்,பணவசதி படைத்தோர்களுர்களுக்கும் இந்நாட்டில் ‘குற்றுயிரும் குலையுருமாக’ உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ்மொழியைக் காப்பது கடமை உண்டு என்பதை உணரவேண்டும்.
‘தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்’ என்றார் புரட்சிகவிஞர் பாரதிதாசன். தமிழைப்புறக்கணிப்போரும்,தன் சொந்த தாயைப் பறக்கணிப்பது போலாகும். கண் கெட்ட பின் சூரிய வணக்கம் ஏன்? சீன சமூகத்தை கூர்ந்து பாருங்கள்,அவர்களுக்குள்ளும் பல பிரிவுகளும்,சண்டைச் சச்சரவுகளும் பிணக்குகளும் இருந்தாலும், தங்களின் தாய்மொழியை வளர்ப்பதில் 100% ஒத்துழைப்புவழங்கி  மொழியை வளர்க்க உதவுகின்றனர். ஆனால்,தமிழர்களிடையே மட்டும் 49% தமிழ்ப்பள்ளிகளுக்கும், 59% தேசிய பள்ளிகளுக்குப் பிள்ளைகளுக்கு அனுப்பி தமிழ்மொழிக்கு நிரந்தரமாக சமாதி கட்ட எண்ணுகின்றனர்.
      தமிழர்கள் அனைவரும் தங்களின் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி நம் உரிமையைக் காக்க வேண்டும். இதன் மூலமே நமது கலை மற்றும் கலாசாரம் காக்க முடியும். ஒரு சிலர்கூறுவது போல், தேசிய பள்ளிகளில் தமிழ்மொழியை கட்டாயமாக்குவதால் மொழி காக்கப்படும் என்ற கூற்று, தமழ்மொழிக்கு நிரந்தரமாகச் சாவுமணி அடிப்பது என்றாகிவிடும்.
    வழிகாட்ட நல்ல தலைவர்கள் அமையாமல் போனது தமிழ் சமுதாயத்திற்கு ஏற்பட்ட சாபக்கேடு!   தமிழர்களே……! நாம் அனைவரும் தமிழ் மொழிக்காக ஒன்றுபடுவோம்.விரைந்து தாய்த்தமிழைக் காப்போம்! என்று கடந்த 30.12.2012 ஆம் நாள்,மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில், முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த 2012 ஆம் ஆண்டு யூபிஎஸ் ஆர்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு,பரிசும் பாராட்டுகளும் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அதன் தலைவரும்,சிலாங்கூர் மாநிலத் தலைவருமான திரு. வே.ம.அருச்சுணன் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
                                        ****************************
V.M.AROJUNAN, 60,Jalan Nagasari 36/1B, Desa Latania, 40470 SHAH ALAM.
Hp; 012 6152537

 

Series Navigationதவம்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வ காலத்துப் பூமத்திய ரேகை ஒரு சமயம் வடதுருவத்துக்கு அருகில் இருந்ததைக் காட்ட பூர்வப் படிவுகள் [Fossils] ஆதாரம்