கட்டாயக் காதலும் கற்பழிப்பும்!

This entry is part 1 of 34 in the series 6 ஜனவரி 2013

 

ஜோதிர்லதா கிரிஜா

 

    விரட்டி விரட்டித் தன்னைக் காதலித்த ஓர் இளைஞனை ஒரு பெண் மறுதலித்தாள்.  அதன் பிறகும் அவன் தொல்லை தாங்க முடியாத எல்லையைத் தொட்டதால் தன் தந்தையிடம் அவனைப்பற்றி அவள் கூற நேர்ந்தது.  அவள் அப்பா அவனை எச்சரித்த பிறகும் அவனுடைய தொந்தரவு தொடரவே, காவல் துறையினரிடம் அவனைப் பற்றி அவள் தந்தை புகார் கொடுக்கும்படி ஆயிற்று.  காவல்துறை அதிகாரி அவனை யழைத்து எச்சரித்த பிறகு, அவனது நச்சரிப்பு அப்போதைக்கு நின்று போனது.  ஆனால் அவனது எரிச்சலும் ஏமாற்றமும் மேலும் அதிகரித்தன. தன்னை நிராகரித்த அவளைப் பழி தீர்க்க அவன் காத்துக்கொண்டிருந்தான்.

 

    அவளுக்கு வேற்றூர் ஒன்றில் வேலை கிடைத்தது. தந்தையின் துணயுடன் அவள் ரெயில் ஏற நடந்துகொண்டிருந்த போது அந்தக் கயவன் அமிலத்தை அவள் மீது ஊற்றி அவள் முகத்தை உருத்தெரியாதபடி சேதப் படுத்திவிட்டான்.  அவளுக்குக் கண்களின் பார்வையும் போய்விட்டது.  கஷ்டப்பட்டு அவளைப் படிக்கவைத்து அவளை நம்பியும் இருந்த அவள் ஏழைத்தகப்பன் இப்போது அழுது மாய்ந்துகொண்டிருக்கிறார். அந்தப் பெண்ணோ, ‘அப்பா! கண் பார்வையை இழந்து உங்களுக்குச் சுமையாகிவிட்ட என்னைக் கொன்றுவிடுங்கள்!” என்று கதறிக்கொண்டிருக்கிறாளாம். இத்தகைய கயவர்களுக்கு அதேபோன்ற அமிலத்தை ஊற்றிக் கண்களை அவிப்பதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.

 

    காதல் என்பதைப் பெரும்பாலான இளைஞர்கள் தப்பாகப் புரிந்துகொண்டிருப்பதோடு, பெண் என்பவள் தனக்கு உடன்பட்டே தீர வேண்டியவள் எனும் அதிகாரக் கருத்துக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து, அவள் அழகால் கவரப்பட்டு, அவளை யடைய உடலில் எழும் கிளர்ச்சியையே காதல் என்பதாய்த் தப்பர்த்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

 

    காதல் மனித வாழ்வில் இயல்பானதுதான். இன்றியமையாததுதான்.  எனவே, எல்லா ஊடகங்களுமே காதலைப் பற்றியே மிக அதிக அளவில் பேசவும், எழுதவும், ஒளிபரப்பவும் செய்கின்றனவே எனும் குற்றச்சாட்டு மிகவும் தவறானது.  காதலை இவை தப்புத் தப்பாய்ச் சித்திரித்து இளைஞர்களைத் தவறான பாதையில் வழி நடத்திக்கொண்டிருக்கின்றன என்பதே சரியான குற்றச்சாட்டாக இருக்கும்.. மனத்தின்பாற்பட்ட உயர்ந்த காதலை இளைஞர்கள் புரிந்துகொள்ளூம் முறையில் ஊடகங்கள் செயல்பட்டால் இது போன்ற கொடூரங்கள் அறவே போகாவிட்டாலும், பெருமளவு குறைய வாய்ப்பு  உண்டு.  உடலுக்கும் உடல் சார்ந்த மிருகத்தனமான எழுச்சிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நம் ஊடகங்கள் இளைஞர்களைத் தவறான பாதையில் வழிநடத்திக்கொண்டிருக்கின்றன.

 

இந்த உலகம் இப்படிச் சீரழிந்துகொண்டிருக்கிறதே என்று (போலிக்) கண்ணீர் சிந்தி, தங்களைப் பெரிதும் சமுதாயப் பொறுப்பு உள்ளவர்கள் போல் மக்களிடம் காட்டிக்கொள்ளுவதற்கு ஒரு வார இதழையும், மதம், பக்தி ஆகிய இரு அபினிகளாலும் மக்களை மயக்கித் தங்கள் வருவாயைப் பெருக்கிக்கொள்ள ஓர் இதழையும், நடிகைகளின் முக்கால் நிர்வாணப் படங்களை வெளியிட்டு இளைஞர்களிடம் உடல் வெறியைத் தூண்டிவிட்டு அவர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி, அதன் விளைவாகப் பெண்களையும், ஆபத்துக்குட்படுத்தி, இவற்றின் மூலம் காசு பண்ண ஓர் இதழையும், ஆபாசப்படங்களை வெளியிடும் இதழ்களால் விளையும் தீங்குகளைப் பட்டியலிட்டு அங்கலாய்த்து முதலைக் கண்ணீர் உகுக்க மற்றும் ஓர் இதழையும் வெளியிட்டு ஒரே முதலாளி போடும் வேடங்கள்தான் என்னே!

    சரிகா ஷா போன்று ‘அடக்கமாக’ உடுக்கும் பெண்கள் பெண்சீண்டலால் உயிரிழக்க நேரும்போது தங்கள் பத்திரிகையில் ஒரு நீலிக்கண்ணீர்த் தலையங்கம், அதற்கு அடுத்த பக்கத்திலேயே பெண்சீண்டலைத் தூண்டும் வகையில் பெண்களின் ஆபாச முக்கால் நிர்வாணப் புகைப்படங்கள் / ஆபாச எழுத்துகள் என்று இவை போடும் இரட்டை வேடத்தை நாம் எப்போது கண்டிக்கப் போகிறோம்? தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை முன்போ, பாராளு மன்றத்தின் முன்போ கூச்சலிடும் மக்கள் ஏன் பெண் சீண்டலுக்கும், கற்பழிப்புக்கும் காரணமாகும் இவற்றின் அலுவலகங்கள் முன்போ, திரைப்படக் கொட்டகைகள் முன்போ ஆர்ப்பாட்டம் செய்வதில்லை?

 

    பத்திரிகைகள், சினிமாப் படல்கள் – posters –  ஆகியவற்றில் ஆபாசம் தலை காட்டக்கூடாது என்பதற்கான சட்டங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. காவல்துறை அவற்றைச் செயல்படுத்த மறந்தே போய்விட்டது என்பதே உணமையாகும்.  அல்லது, கண்டும் காணாதது மாதிரி இருக்கக் கையூட்டுப் பெற்றுக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ! யார் கண்டது?

 

    மருத்துவக் கல்லூரரி மாணவர்கள் எதிர்த்து ரகளை செய்த கற்பழிப்புகள் போல் ஆயிரக்கணக்கில் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.  கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை இந்தியாவில் தலித் பெண்களுக்கும் ஏனைய பெண்களுக்கும் ஆயிரக்கணக்கில் நேர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. யாரும் கண்டுகொள்ளுவதில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.  எத்தனை ஊர்களில் ஆண்கள் தங்களுக்குள் உள்ள பகைமையை எதிரிகளின் வீட்டுப் பெண்களை அவமானப்படுத்திப் பழி தீர்த்துக்கொள்ளுகிறார்கள்!

 

    ஒரு பெண் ஆபத்தில் இருக்கும் போது அவள் கற்பைக் காப்பாற்ற அவள் அருகில் இருக்கும் ஆண்கள் தங்கள் உயிரைத் துச்சமாய்க் கருதி ஜடாயு போல் வீரத்துடன் செயல்பட வேண்டும் என்று தாம் எழுதிய ராமாயணத்தில் ராஜாஜி கூறுகிறார்.

     ஆனால், இங்குள்ள ஆண்பிள்ளைகளோ, பாஞ்சாலியைத் துகிலுரித்த போது அதை வேடிக்கை பார்த்தவாறு செயலற்று, மனச்சாட்சியற்று, வெறும் பொம்மையாய் நின்றிருந்த மகாபாரதப் பீஷ்ம பிதாமகர்களைப் போலன்றோ செயல்படுகிறார்கள்! அது மட்டுமா? சில வேளைகளில் கூட்டுக் கற்பழிப்பாகவன்றோ ஒரு வன்செயலை மாற்றியும் விடுகிறார்கள்!

 

    எனினும் தில்லி மாணவியின் கற்பழிப்பைக் கண்டித்த போராட்டத்தில் இத்தனை ஆண்கள் கலந்து கொண்டதே ஆறுதலான விஷயம்தான். ஆனால், இது கண நேரத்து ஆவேசமாய் நின்று விடக்கூடாதுதானே?

 

    தங்கள் கல்லூரி மாணவி என்கிற அபிமானத்தில் அம் மாணவர்கள் கலந்துகொண்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்றெனினும், இதே மாணவர்கள் பிற பெண்களிடம் எப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்பதற்கான விடை யாவரும் அறிந்ததே.

 

    கற்பழிப்புக்குத் தண்டனையாய்க் குற்றவாளியைத் தூக்கில் போடுவதோ அவனது ஆண்மையைச் சிதைப்பதோ சரியான தீர்வாகாது.  கற்பழிக்கப்படும் பெண் பின்னாளில் தங்களை அடையாளம் காட்டிவிடக் கூடாது என்பதற்காக அவளைக் கொன்று விடுவார்கள்.. மேலும்,  ஆண்மை சிதைந்த நிலையில் கசப்பும் காழ்ப்புமுற்று இந்த ஆண்கள் தங்கள் கைகளாலும் கால்களாலும்  வன்முறைத்தனமான வேறு பல குற்றங்களை இழைப்பார்கள்.  எனவே வன்னுகர்வுக் குற்றவாளளிகளின் இரு கைகளையும், கால்களையும் வெட்டிவிடுவதே அவர்களுக்குச் சரியான தண்டனையாக இருக்கும்.  போனால் போகிறதென்று ஒரு கையை மட்டும் விட்டுவைக்கலாம்.

நிறைய எண்ணிக்கையில் காவல் துறை ஊழியர்களை ரோந்து சுற்ற விட்டால் பெண்கள் பாதுகாப்பாக இரவில் வீடு திரும்புவார்கள் என்று சொல்லப் பரடுகிறது.  இதே காவல்துறையினரே பெண்களைக் கற்பழிக்க மாட்டர்கள் என்பது என்ன நிச்சயம்? காவ்ல் நிலையங்களில் நிகழாத கற்பழிப்பா!

 

    எனவே, பெண்கள் அனைவருக்கும் தற்காப்புக் கலைப் பயிற்சி தரவேண்டும்.  இதற்கும் காலம் பிடிக்கும்.

 

சரியான கல்வி முறை, வளர்ப்பு, சுற்றுச்சூழல் ஆகியவை ஏற்பட்டு, இவற்றின் விளைவாக ஆண்கள் ஓரளவேனும் திருந்துவதற்கு இன்னும் பல்லாண்டுகள் ஆகுமாதலின், அந்த நாள் வுரும் வரையில் பெண்கள் இரவு நேரப் பயணம், நடமாட்டம் போன்றவற்றைத் தவிர்ப்பதே அவர்களுக்குப் பாதுகாப்பானது.    வேறு வழி ஏதும் தற்சமயம் இருப்பதாய்த் தெரியவில்லை.

                            jothigirija@live.com

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -4 பாகம் -10 [முடிவுக் காட்சி]

12 Comments

  1. Avatar ஷாலி

    //இத்தகைய கயவர்களுக்கு அதேபோன்று அமிலத்தை ஊற்றிக் கண்களை அவிழ்ப்பதுதான் சரியான தண்டனையாக இருக்கும்….
    வன்புணர்வு குற்றவாளிகளின் இரு கைகளையும், இரு கால்களையும் வெட்டி விடுவதே அவர்களுக்கு சரியான தண்டனையாக இருக்கும்.போனால் போகிறதென்று ஒரு கையை மட்டும் விட்டு வைக்கலாம்.// கட்டுரை ஆசிரியையின் ஆதங்கமும்,ஆவேசமும் புரிந்து கொள்ளக்கூடியதே!ஆனாலும் “கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல்” என்று கூறும் ஆபிரகாமிய அடிப்படைவாதிகள் லிஸ்டில் உங்களையும் சிலர் சேர்த்துவிட வாய்ப்பிருப்பதை மறந்து விடாதீர்கள். மற்றபடி சிறப்பான கட்டுரை.நன்றி!

  2. “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும் காயங்களுக்குச் சமமான காயங்களாகவும் நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும், ஒருவர் பழி வாங்குவதை தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த வேதக் கட்டளைப்படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!” (அல்குர்ஆன் 05:45)

    கட்டுரையாசிரியரும் இதை யொட்டியே கருத்தை வைக்கிறார். நிரந்தர தீர்வும் இதில்தான் உள்ளது.

  3. அம்மா தங்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்விற்காகநாவல்களில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறோம்.குறுநாவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. நாவல்கள் எங்கு கிடைக்கும்? பதிப்பக முவரி அனுப்பி உதவிட வேண்டுகிறேன்.

  4. அம்மா நாங்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்விற்காக தங்கள் நாவல்களில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறோம்.குறுநாவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. நாவல்கள் எங்கு கிடைக்கும்? பதிப்பக முவரி அனுப்பி உதவிட வேண்டுகிறேன்.

  5. Dear Smt. Vj. Premalatha,

    I am replying on behalf of Ms. Jothirlata Girija, as she has been moving to a new home as of today. She is thanking you for your Research Project initiative of her literary works both in Tamil and in English and will reply to you in a weeks time.

    PLease send your Email address, if you wish.

    With Kind Regards,
    S. Jayabarathan

  6. Avatar punaipeyaril

    பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்விற்காக–> ஏன் பெரியார் கற்பு பற்றி சொன்னதையும், சினிமாவில் பெரியாரின் மனைவியாக குஷ்பு கற்பு பற்றி சொன்னதையும், பெரியார் கண்ணகி பற்றி சொன்னதையும் ஒப்பீடு செய்து முனைவர் பட்டம் வாங்கலாமே… இந்தியாவில், கலைமாமணியும் டாக்டர் பட்டமும் ஈஸியாக கிடைக்கிற தள்ளுபடி சமாச்சாரமாயிருச்சு…

  7. Avatar ஜோதிர்லதா கிரிஜா

    Dear Ms. Vj. Premalatha,

    I am replying on behalf of Ms. Jothirlata Girija, as she has been moving to a new home as of today. She is thanking you for your Research Project initiative of her literary works both in Tamil and in English and will reply to you in a weeks time.

    PLease send your Email address, if you wish.

    With Kind Regards,
    S. Jayabarathan

  8. piyupremsurya90@gmail.com அன்புள்ள ஜெயபரதன் சார் மன்னிக்கவும். நான் திண்ணைக்கு வர சில மாதங்கள் ஆகிவிட்டதால் தங்கள் கடிதத்தை படிக்கவில்லை. நூலகத்தில் அம்மாவின் நூல்களைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அம்மா என் மாணவியிடம் தொடர்புகொண்டு உதவுவதாகத் தெரிவித்துள்ளார். 8 நாவல்கள்தான் கிடைத்துள்ளன. மற்றவை தேவை. தங்களுக்கு நான் கிடைத்த நாவல்களின் பெயர்களைப் பின்னர் அனுப்புகிறேன்.

  9. வணக்கம் சார். திண்ணையில் இம்மெயில் முகவரி கிடைத்ததால்தான் முன்பே அம்மாவிடம் தொடர்பு கொண்டோம்.கனிவோடு உதவுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் உடனே உதவ முடியாத நிலையைத் தெரிவித்தார்.கீழ்வரும் நாவல்கள் உடனே தேவை.

    சாதி இரத்தத்தில் ஓடுகிறது – இமயப் பதிப்பகம், நாகை

    இல்லாதவர்கள் ”
    இதயம் பல விதம் – பராசக்தி பப்ளிகேஷன்ஸ், சென்னை 33
    வாழத்தான் பிறந்தோம் பி.எஸ். பதிப்பகம், சென்னை 33
    நாங்களும் வாழ்கிறோம் – வளர்மதி, சென்னை 78
    மரபுகள் முறிகின்ற நேரங்கள்:- கலைஞன், சென்ன படிதாண்டிய பத்தினிகள்
    அவசரக் ோலங்கள் ”
    அலைகள் ஓயக் காத்திருந்தால்!
    புதிய யுகம் பிறக்கட்டும் – வானதி, சென்னை
    மறுபடியும் பொழுது விடியும் – வானதி, சென்னை
    தனிமையில் இனிமை கண்டேன் போன்றவை கிடைக்கவில்லை. பிரதி இருப்பின் பெற உதவவும்.

  10. Avatar paandiyan

    பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்விற்காக அங்கே இது எல்லாம் இல்லையா? தமிழ் தமிழ் என்று கூவிகின்றார்கள், இது கூட இல்லையா? இல்லை வேறு option அவர்கள கொடுக்கவில்லையா? அது சரி காட்டுமிராண்டி மொழி என்று விட்டு விட்டார்கள் போல

  11. Avatar சு.இளந்தமிழன்

    அம்மா நான் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் படிக்கின்றேன் . உங்களுடைய படைப்பான “வாழத்தான் பிறந்தோம்” என்ற புதினத்தை ஆய்வு செய்து கட்டுரை ஒன்றை ஒப்படைக்க இருக்கிறேன் . அதனால் அந்த நாவல் எந்த பதிப்பகத்தில் கிடைக்கிறது என்பதை பற்றிய விளக்கம் தேவை அம்மா உதவ முடியுமா ? நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *