மதுரை என்றாலே அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான் நினைவுக்கு வரும். ஆனால் மதுரை மாநகரம் ஸ்ரீவைஷ்ணவம் சார்ந்த திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திருக்கூடல் எனும் பெயரில் திகழ்ந்துகொண்டுள்ளது. பாண்டிய நாட்டின் பதினெட்டுத் திவ்யதேசங்களில் அதுவும் ஒன்றாகும்.
ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ எனும் பெயரில் வழங்கும் மரபு ஒன்று உண்டு. இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும் மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர். தொண்டை நாட்டுப் பகுதியில் சேயாறு, பாலாறு, கம்பையாறு ஆகியவை கூடும் இடத்திற்கு முக்கூடல் என்று பெயர். அதுபோல தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி ஆகியன கூடும் இடமும் முக்கூடல் எனும் பெயர் பெற்றது. பள்ளு இலக்கியத்தில் மிகப்புகழ்பெற்ற ‘முக்கூடற்பள்ளு’ எனும் நூல் இவ்வூரைப் பற்றியே எழுந்தது. ’கிருதமாலா’ எனும் பெயர் கொண்ட ஆறு மதுரை மாநகரை இரு பிரிவுகளாகச் சுற்றி வந்து மீண்டும் ஒன்றாகக் கூடுவதால் அந்நகருக்குக் கூடல் எனும் பெயர் வந்ததாம்.
இங்கே பெருமாள் கிழக்குத் திசை நோக்கியவாறு வீற்றிருந்த கோலத்தில் கூடலழகர் எனும் திருநாமத்துடன் காட்சியளிக்கிறார். தாயாருக்கு மதுரவல்லி நாச்சியார், வரகுணவல்லி, மரகதவல்லி, என்னும் திருநாமங்கள் உண்டு. இங்குள்ள தீர்த்தம் ஹேமபுஷ்கரிணி, கிருதமாலா எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலின் விமானம் அட்டாங்க விமானம் எனும் எண்கோண விமானமாகும். பிருகு முனிவர், வல்லபர், பெரியாழ்வார், ஆகியோருக்குக் கூடலழகர் காட்சியளித்துள்ளார்.
கூடற் புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியன இத்திவ்யதேசம் பற்றி விளக்குகின்றன. நான்கு யுகங்களிலும் இத்திவ்யதேசம் விளங்கி இருப்பதாகப் பல புராணங்கள் கூறுகின்றன. கிரேதாயுகத்தில் பிரம்ம தேவனின் மகன் பெருமாளை வழிபட விஸ்வகர்மாவின் மூலம் இத்திருக்கோயில் அமைத்தானாம். இதேயுகத்தில் உமாதேவியை மணம் புரிய சிவபெருமான் இத்திவ்யதேசத்தில் தவம் செய்தாராம்.
திரேதாயுகத்தில் பிருது மன்னன் ஒருமுறை விமானத்தில் பறந்து சென்றபோது இங்குள்ள அட்டாங்க விமானத்தின் சக்தியால் மேலே பறக்க முடியாமல் போக அவன் இங்கே இறங்கி இத்திவ்யதேசத்தின் கூடலழகரை வழிபட்டு இங்கேயே தங்கியிருந்து பரமபதம் அடைந்தானாம். துவாபரயுகத்தில் அம்பரீஷன் எனும் மன்னன் இங்கு வழிபட்டு நற்பேறு பெற்றான்.
இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் புருரவன் எனும் மன்னன் இங்கே எழுந்தருளி உள்ள கூடலழகர் பெருமாளுக்குக் கைங்கர்யங்கள் செய்து மோட்சம் பெற்றான். அவனுடைய மகனான இந்திரத்யுமன் என்பவன் இப்பெருமாளை வழிபட்டு நற்கதி அடைந்தான். அவனது மகனே மலயத்துவசப் பாண்டியன் எனும் பெயரில் புகழ் பெற்றான். அவன் பெருமையைப் பெரியாழ்வார்,
”பருப்பத்துக் கயல் பொறித்த பாண்டியர்”
என்று போற்றுவார். அதாவது அவன் வடநாட்டின் மீது படையெடுத்து அங்கிருந்த அரசர்களை வென்று அத்துடன் இமயமலையில் தம் மீன் கொடியை நாட்டினான். அத்துடன் தம் சின்னமான மீன் முத்திரையையும் அங்கே பொறித்தான் என்பதைப் பெரியாழ்வார் இவ்வாறு உணர்த்துகிறார்.
இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இதே கலியுகத்தில் பாண்டிய நாட்டை வல்லப தேவன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். ஒருநாள் அவனுக்கு முக்தியை அளிக்கக் கூடிய பெருந்தெய்வம் எது? எனும் சந்தேகம் தோன்றியது. தன் அவையில் இருந்த அனைத்து ஆன்மீக அறிஞர்களையும் அழைத்து விளக்கம் கேட்டான். யாருக்கும் விடை தெரியவில்லை. பல மதத்தைச் சார்ந்தவர்களிடமும் கேட்டும் பதில் தெரியவில்லை.
வல்லபதேவன் தன் அரண்மனை வாயிலில் ஒரு பொற்கிழி ஒன்றைக் கட்டுவித்தான். முக்தி அளிக்கும் பரம்பொருளை எப்பொழுது யார் எனக்கு நிரூபணம் செய்து காட்டுகிறர்களோ அப்பொழுது இப்பொற்கிழி தானாகவே அவர் கைகளில் வந்து விழட்டும் என்று முரசறைந்து தெரிவிக்க மன்னன் ஆணையிடுகிறான். அந்த மன்னனின் அரசவையில் செல்வநம்பி எனும் பெயரில் ஓர் அரண்மனைப் புரோகிதர் ஒருவர் இருந்தார். அவர் கனவில் கூடலழகர் எழுந்தருளி “நீர் சென்று திருவில்லிபுத்தூர் சென்று அங்கே இருக்கும் பெரியாழ்வாரை அழைத்து வாரும். அவர் வந்து திருமாலே பரம்பொருள், ஸ்ரீவைஷ்ணவமே அனைவருக்கும் முக்தி அளிக்கும் சமயம் என்று நிலைநாட்டுவார்” என்று உரைத்தார். செல்வநம்பி சென்று அழைக்க பெரியாழ்வாரும் கூடல் நகரை வந்தடைந்தார்.
பாண்டிய மன்னனின் அவைக்களத்திற்கு வந்த பெரியாழ்வார் இதிகாசம், புராணங்கள், வேதம் ஆகியவற்றிலிருந்து நிறைய எடுத்துக்காட்டுகள் கூறி திருமாலே அனைவர்க்குமான பரம்பொருள், மேலும் ஸ்ரீவைஷ்வணவமே முக்தி அளிக்கக்கூடிய மதம் என்று நிரூபணம் செய்தார். அக்கணமே பொற்கிழி அறுந்து தானாகக் கீழே விழுந்தது.
பெருவியப்படைந்த பாண்டிய மன்னன் பெரியாழ்வாரைப் புகழ்ந்து பணிந்தான். மேலும் அவரை யானைமேல் ஏற்றித் தான் அவரைப் பின்தொடர்ந்து வந்தான். இக்காட்சியைக் காண்பதற்காகக் கூடலழகர் தம் பிராட்டியான திருமகளோடு கருட வாகனத்தில் விண்ணில் எழுந்தருளினார்.
பெருமாளையும் பிராட்டியையும் ஒரு சேரக் கண்ட பெரியாழ்வார்,
”எம்பெருமானே! பெருமாளே! இந்தக் கலியுகத்தில் தாங்கள் இவ்வாறு காட்சி அளிக்கலாமா? தங்களுக்குக் கண்ணேறு பட்டுவிடுமே”
என்று எண்ணிப்
“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாண்டு’ என்று பல்லாண்டு பாடினார். இந்தத் திவ்ய தேசத்தில் பெரியாழ்வார் அருளிச் செய்த பல்லாண்டுதான் எல்லாத் திவ்யதேசங்களிலும் முதலில் பாடுவதாக அமைந்துவிட்டது.
”வானார் எழிலி மழைவளம் நந்தத்
தேனார் சிமய மலையின் இழி தந்து
நான்மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வாநின்
திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே”
இந்தப் பாடல் அடிகள் பரிபாடலில் வருகின்றன. ‘இருந்தையூர் அமர்ந்த செல்வா’ என்ற சொற்றொடர் இந்தத் திருக்கூடலில் எழுந்தருளி உள்ள பெருமாளையே குறிக்கிறது. இந்தத் திவ்யதேசம் உள்ள பகுதியானது சங்க காலத்தில் ‘இருந்தையூர்’ என்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இருந்தையூர் கருங்கோழி மோசி என்னும் பெயரில் ஒரு புலவர் இங்கே வாழ்ந்திருக்கிறார். அவரைப் பற்றி நக்கீரனாரின் களவியல் உரையில் குறிப்பு காணப்படுகிறது. இங்கே எழுந்தருளி உள்ள பெருமான் சங்க காலத்தில் ”இருந்த வளமுடையார்” என்னும் திருநாமத்தால் வழங்கப்பட்டுள்ளார். காரணம் இங்கே பெருமாள் இருந்த கோலத்தில் எழுந்தருளி உள்ளார். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அரும்பத உரைகாரரும் அவ்வாறே கூறுகிறார்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பாண்டிய அரசன் இப்பெருமாளுக்குப் பல உற்சவங்கள் எடுத்துள்ளான். குறிப்பாக ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் பெரிய திருவிழா நடத்தி உள்ளான். மாங்குடி மருதனார் எனும் புலவர் தாம் எழுதிய மதுரைக் காஞ்சியில் ‘மாயோன் மேய ஓண நன்னாள்” என்று அதைக் காட்டுகிறார்.
புலவர்கள் சங்கம் அமைத்துத் தமிழ் ஆய்ந்த போது இக்கூடலழகர் ’துவரைக் கோமான்’ எனும் பெயர் தாங்கி சங்கப் புலவராக வீற்றிருந்தார் என்று கூறப்படுகிறது. கூடலழகர் எனும் திருநாமம்தான் வடமொழியில் ’வ்யூக சுந்தர ராஜன்’ என்று வழங்கப்படுகிறது.
வாமனனாக வந்த திருமால் மூன்றடி மண் கேட்டு ஓங்கி உளகளந்த திருவிக்ரம அவதாரம் எடுத்தபோது அவரின் திருப்பாதம் மேலே சத்யலோகம் வரை சென்றதாம். அதைக்கண்ட பிரமன் மனம் மகிழ்ந்து அப்பாதங்களைத் தன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் திருமஞ்சன நீராட்டினார். அந்த நீரின் சிறுதுளிகள் இம்மண்ணுலகில் வீழ்ந்தன. அவையே வைகை ஆறாகப் பெருகின. அந்த ஆறு இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒரு மாலைபோல் மதுரை மாநகரைச் சுற்றிக் கொண்டு ஓடியது. ஒரு பிரிவு வகை என்றும் மற்றொன்று கிருதமாலா என்றும் பெயர் பெற்றன. அந்தக் கிருதமாலா நதிக்கரையில்தான் இக்கூடலழகர் எழுந்தருளி உள்ளார்.
பாண்டிய மன்னர்களுக்கு மீன் லச்சினையாக அமைந்ததற்கும் இக்கூடலழகர்க்கும் தொடர்புபடுத்தி ஒரு வரலாறு உண்டு அதாவது சத்தியவிரதன் எனும் பெயர் கொண்ட பாண்டிய மன்னன் ஒருவன் இக்கூடலழகர்பால் மிக்க பக்தி கொண்டு கடும் விரதம் மேற்கொண்டான். அவன் ஒரு நாள் மாலை வேளையில் அவன் நீர்விட்டு தர்ப்பணம் செய்யும்போது அந்த நீரில் பெருமாள் மச்சாவதராமாய் மீனாக எழுந்தருளினார். அவனுக்கு அருள் செய்தார் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அதன் பிறகுதான் பாண்டிய மன்னர்கள் அனைவரும் மீனைத் தங்கள் கொடிகளில் மீனையே லச்சினையாக ஏற்றனராம்.
இந்த மதுரை நகருக்கு அருகில் கொந்தகை என்னும் ஊர் ஒன்று உள்ளது. அங்குதான் 1307-இல் திருவாய்மொழிப்பிள்ளை என்பவர் அவதரித்தார். அவர் சில காலம் பாண்டிய நாட்டின் முதலமைச்சராய்ப் பதவி வகித்தார். இந்தத் திவ்ய தேசத்திற்கு முஸ்லீம்கள் படையெடுத்தபோது எந்த ஊறும் ஏற்படாமல் அவர்தான் பாதுகாத்தார். அவரது சீடர்தான் ஸ்ரீமத் மணவாள முனிகள் ஆவார். அந்த மணவாள முனிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும் இது. மேலும் இங்கு பல்லாண்டு பாடப்பட்டதால் இதை ஸ்ரீமத் இராமானுஜர் பரமபதத்திற்கு ஈடாகக் கருதினார்.
வில்லாண்ட வடவரையான் மணம் புணர
அட்டாங்க விமான மென்னும்
இல்லாண்டு புயன் கனகன் காசிபனார்
பிருகு அம்பரீடன் கூடல்
தொல்லாண்ட புருவரசு மலயகேதனன்
முதலோர் தொழப் புத்தூரான்
பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட
தோளனடி பணிதல் செய்வாம்
எனும் பாடல் மூலம் கூடலழகரை
வேண்டிப் பேறு பெற்றவர்களை அறிய முடிகிறது
இத்திருக்கோயில் மூன்று அடுக்குகளாலானது. மூன்று அடுக்குகளிலும் பெருமாள் இருந்த நின்ற, கிடந்த கோலங்களில் எழுந்தருளி அருள் செய்கிறார் மேலும் நவக்கிரங்களும் இக்கோயிலின் உள்ளே அமைந்துள்ளது மற்றோர் சிறப்பம்சமாகும்.
மதுரையை நான்மாடக்கூடல் எனும் பெயரிலும் வழங்குவது ஒரு வழக்காகும். ஒரு காலத்தில் இம்மண்ணுலகெங்கும் பெருமழை கொட்டித் தீர்த்தது. அப்போது அடியார்கள் அனைவரும் இத்திவ்யதேசத்துப் பெருமாளிடம் வந்து வழிபட அவர் நான்குத் திசைகளிலும் நான்கு மேகங்களை ஏவி அவைமேலே ஒன்று சேர்ந்து மழையைத் தடுத்தனவாம். எனவே இந்நகருக்கு நான்மாடக்கூடல் எனும் பெயர் வந்தது என்று கூறுவர்.
வைகை ஆற்றுக்கு வேகவதி என்று ஒரு பெயரும் வழங்கப்படுவதுண்டு. வேகமாக ஓடியதால் அப்பெயர் வந்தது. விண்ணுலகத்திலிருந்து இவ்வையத்திற்கு வந்ததால் வையை எனும் பெயர் பெற்றதாம். அந்த ஆறு இரண்டு பிரிவாகப் பிரிந்து மாலைபோல மதுரைச் சுற்றியதால் அதற்கு கிருதமாலா எனும் பெயர் ஏற்பட்டது. இதனைக் கீழ்க்கண்ட புராணப்பாடல் விளக்குகிறது.
”வேகமாதலின் வேகவதி என்றும்
மாகம் வாய்ந்ததனால் வையை என்றும்—தார்
ஆகலால் கிருதமலையதாம் என்றும்
நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ”
இக்கோயில் அஷ்டாங்க விமானத்தைக் கொண்டது. இந்த அஷ்டாங்க விமானத்தின் நிழல் தரையில் விழாது என்று கூறுவர். மேலும் இவ்விமானத்தை நாள்தோறும் 11 சுற்றுகளாக 45 நாள்கள் தொடர்ந்து சுற்றினால் அவர்கள் எண்னிய செயல் நிறைவேறும் என்பது சிலரின் கூற்றாகும்.
சிலப்பதிகாரத்தில் வரும் மாதுரி எனும் இடையர் குலப்பெண் ஆய்ச்சியர் குரவை வழிபாடு நிறைவுபெற்றதும் இத்தலப் பெருமாளை வழிபடச் சென்றதை அறிய முடிகிறது. இங்கு எழுந்தருளி உள்ள பெருமாளை சிலப்பதிகாரத்தில் நெடுநீர் வையைப் பெருமாள் என்று இளங்கோவடிகள் போற்றுகிறார்.
”ஆயர் முதுமகள் ஆடிய சாயலால்
பூவும் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
தூவித் துறை படியப் போயினாள்.”
என்பது சிலப்பதிகார அடிகளாகும்.
பெரியாழ்வார் பரம்பொருளை நிலைநாட்டிப் பொற்கிழி அறுத்த இடத்தை மெய்காட்டும் பொட்டல் என்று கூறுவர். அது நாளடைவில் சிதைந்து இன்று மேங்காட்டுப் பொட்டலாயிற்று. இன்றைக்கும் மார்கழி மாதம் பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளில் கூடலழகர் கருட வாகனத்தில் மேங்காட்டுப் பொட்டலுக்கு எழுந்தருளுகிறார்.
நாயக்க வம்ச அரசர்கள் இம்மதுரையை ஆண்டபோது இக்கோயிலுக்கு நிறைய திருப்பணிக் கைங்கர்யங்கள் புரிந்துள்ளனர். கோயிலில் உள்ள 557,558,559 ஆகிய எண்ணுள்ள கல்வெட்டுகள் அவற்றைத் தெரிவிக்கின்றன.
ஸ்ரீபாகவதத்தின் 11-ஆம் அத்தியாயத்தில் தாமிரபரணி மற்றும் கிருதமாலா ஆற்றங்கரைகளில் ஸ்ரீவைஷ்வணத்தை பாரெங்கும் பரப்பும் மகான்கள் அவதரிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படியே தாமிரபரணி நதிக் கரையில் நம்மாழ்வாரும் இங்கே கிருதமாலா ஆற்றங்கரையில் பெரியாழ்வாரும் தோன்றினர்.
ஒருவகையில் பூலோக வைகுந்தம் என்றும் பெரிய கோயில் என்றும் போற்றப்படுகின்ற திருவரங்கத்தைப் போல இத்திவ்யதேசமும் இரண்டு ஆறுகளுக்கு இடையே உள்ளதாகும். திருவரங்கம் காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் நடுவில் உள்ளது என்றால் இக்கூடல் வையைக்கும் கிருதமாலாவிற்கும் இடையில் உள்ளது.
இத்திருக்கோயிலின் உள்ளே 108 திவ்யதேசங்களின் பெருமான்கள் எங்ஙனம் அந்த அந்தத் திவ்யத் தேசங்களில் எழுந்தருளி உள்ளனரோ அப்படியே வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப் பெற்ற திவ்யதேசமாதலால் இக்கூடலில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஆண்டாளின் சன்னதி மிகவும் சக்தி பெற்றதாகும்.
சிலப்பதிகாரத்தில் வரும் “உவணச் சேவல் உயர்ந்தோன் நியமும்
மேழிவலவன் உயர்த்த வெள்ளை நகரமும்”
என்ற அடிகளின் மூலம் உவணச் சேவல் எனும் கருடக்கொடியை உடைய திருமால் கோயிலும், மேழி எனும் கலப்பையை உடைய பலராமன் திருக்கோயிலும் மதுரையில் இருந்தன என்பது தெரிய வருகிறது. இந்த அடிகளில் மதுரை நகரம் வெள்ளை நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு எப்பொழுதும் வெண்ணிற மேகங்கள் சூழ்ந்திருக்குமாம்.
திருமங்கையாழ்வார் திருநாகைக்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யப்பெருமாளின் அழகைக்கண்டு மனம் பறி கொடுக்கிறார். ”இத்தகைய அழகுடையவரை நான் இதற்கு முன்னம் பார்த்ததில்லையே?” என்று இவர் அழகைக் கண்டு வியக்கிறார். அவரைப் போற்றி மங்களாசாசனம் செய்யும்போது திருக்கூடல் பற்றியும் போற்றுகிறார். இதோ அந்தப் பாசுரம்:
”கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவல ரேயொப்பர்; குன்ற மன்ன
பாழியந் தோளுமோர் நான்கு டையர்
பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழிய ரோஇவர் வண்ண மெண்ணில்
மாகடல் போன்றுளர்; கையில் வெய்ய
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி
அச்சோ ஒருவர் அழகியவா!”
[பெரிய திருமொழி—2-9-5]
இதன் பொருள் :
உறையூரையும், கூடல் என்னும் தென் மதுரையையும் இருப்பிடமாகக் கொண்ட கண்ணபிரான் போன்றே இவர் இருக்கிறார். மலை போன்ற நான்கு திருத் தோள்களை உடையவராகவும் இருக்கிறார். இவரை நாம் முன்பு பார்த்ததில்லை. இவர் பல்லாண்டு வாழ்க. மேலும் இவர் கடல் வண்ணன் போலே இருக்கிறார்.ஒரு திருக்கையில் சுடர்விடும் சக்கரத்தை ஏந்தியும், மற்றொன்றில் சங்கைத் தரித்துக் கொண்டும் உள்ளார். அச்சோ இவர் அழகை என்னென்பேன்?
இப்படித் திருமங்கையாழ்வாரால் மட்டுமே ஒரே ஒரு பாசுரம் கொண்டு மங்களாசாசனம் பெற்ற திவ்யதேசம் இது.
ஆனால் ஒரு சிலர் நான்முகன் திருவந்தாதியின் கீழ்க்கண்ட 39- ஆம் பாசுரத்தினை எடுத்துக் காட்டி அதுவும் இந்தக் கூடலைத்தான் குறிக்கிறது என்பார்கள்.
”அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண
இழைப்பன் திருக்கூடல் கூட—மழைப்பேர்
அருவி மணிவரன்றி வந்திழிய யானை
வெருவி அரவொடுங்கும் வெற்பு”
இப்பாடலில் ‘திருக்கூடல்’ என்று வருவதால் இப்பாசுரம் திருக்கூடல் பற்றித்தான் எழுந்ததென்பர். ஆனால் இதில் வரும் திருக்கூடல் என்னும் சொல்லின் பொருளே வேறாகும்.
அதாவது தலைவியைப் பிரிந்திருக்கும் தலைவி தன் தலைவன் வருவானா மாட்டானா என்பதை அறிய குறி பார்ப்பது போலாகும் இது. தலைவி மணலில் கண்ணை மூடிக் கொண்டு ஆள்காட்டி விரலால் வட்டம் போட முயற்சி செய்வாள். அந்த வட்டம் நிறைவு பெற்றால் தலைவன் வருவான் என்று மகிழ்வாள். இந்நிகழ்ச்சிக்குத்தான் கூடலிழைத்தல் என்பது பொருளாகும்.
இப்பாசுரத்தைப் பொருத்தமட்டில் திருவேங்கமுடையானைக் கண்ணால் சேவிக்கவும், அவன் எழுந்தருளி உள்ள திருமலையை சென்று அடையவும் எண்ணிய தலைவி தான் கூடல் இழைப்பது பற்றிக் கூறுகிறாள். எனவே இப்பாசுரம் திருக்கூடல் பற்றி அன்று என முடிவு செய்யலாம்.
ஆதலால் இத்திவ்யதேசம் திருமங்கை மன்னனால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்ய தேசமாகும்.
இத்தகைய பேரும் பெருமையும் பெற்ற மதுரையின் சிறப்பு நினைக்க நினைக்க இன்பம் பயப்பதாகும்.
- ஆத்ம கீதங்கள் –15 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! முடிந்தது நம் காதல்
- சீஅன் நகரம் -2 யுவான் சுவாங்
- சோசியம் பாக்கலையோ சோசியம்.
- அந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்
- வைரமணிக் கதைகள் – 2 ஆண்மை
- பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)
- நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு
- புது டைரி
- Caught in the Crossfire – another English Book – a novel
- கோசின்ரா கவிதை
- வாய்ப்பு
- தொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.
- மூன்றாம் பரிமாணம்
- யாமினி கிருஷ்ணமூர்த்தி (5)
- விடாது சிகப்பு
- நகைகள் அணிவதற்கல்ல.
- வேறு ஆகமம்
- தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு
- மருத்துவக் கட்டுரை – இடுப்பு வலி
- கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்
- திருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]
- மிதிலாவிலாஸ் -1 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
- மரபு மரணம் மரபணு மாற்றம்
- இலக்கிய வட்ட உரைகள்: 13 அட்டன்பரோவின் திரை மொழி-பதிவுகள்
Please read my article on this divya dEsam here:
http://narada-therealmofreligion.blogspot.com/2015/01/thirukkudal-madurai-divya-desam.html
//வீற்றிருந்த திருக்கோலம்// என்றெழுதுகிறார். வீற்றிருந்த என்றால் அமர்ந்திருந்த. ஆனால் இங்கு நின்ற திருக்கோலம். (Standing pose). வளவ துரையந்தான் விளக்கவேண்டும்.
கிருதமாலா ஆற்றங்கரையில் இருப்பதாக எழதுகிறார். அப்படி ஒரு ஆறு கோயிலுக்குப் பக்கத்திலே இல்லை. வைகையோ இரு மைல் தொலைதூரத்தில் உள்ளது. ஆனால் கிருதமாலா ஆறு இன்று ஓடுகிறது மதுரையில் அது பக்கத்தில் இல்லை. எப்படி கூவம் ஆறு சென்னையில் ஓடுகிறதோ அப்படி. அதைவிட மோசம். ஏனென்றால் கூவம் சில இடங்களில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் கிருதமாலா இன்று சாக்கடைக் கழிவுகளைக்கொண்ட ஒரு சிறு நீரோட்டம். கிருதமாலா ஆற்றின் கரையோரத்தில் இருப்பவை அருந்ததியர் சேரிகள் மட்டுமே. இருக்கும் மற்றவிடங்கள் பணமுதலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஒரு பிரபலம் ஆக்கிரமித்து ஒரு பொறியியல் கல்லூரி அமைக்க அதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காததால் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது.
வைகை தெய்வத்தால் படைக்கப்பட்டதென்றெழதுகிறார். ஆனால் இன்று மதுரையில் ஓடும் அதன் நிலை மோசம். முதலில்; ஆற்றில் இலக்கணமான நீரே அங்கில்லை. இரண்டாவது; இருக்கும் சிறிது நீரும் சாக்கடை. மழைநீர் தேக்கமே. வைகை மதுரையில் தோன்றவில்லை. தெய்வத்தால் மேற்குமலைத்தொடரில் படைக்கப்பட்டு அனுப்பப்பட்டதெனலாம். ஆனால் மதுரையை மையமாக வைத்து வைகையைப் பேசுகிறார்கள் ! கட்டுரையாளரும் அரக்கபரக்கப் பேசுகிறார் அப்படி.
மதுரைக்குள் நுழையும்போதும், வைகைப்பெண் தன் கற்பை இழந்து கண்ணீரும் கம்பலையுமாக ஓடும் பரிதாபநிலையில் இருப்பவளே. மதுரை மக்கள் அவளின் கற்பை இன்னும் சூறையாடுகிறார்கள். பலவிடங்களில் வைகையைக் காணோம். மதுரையின் குடிநீர்ப்பஞ்சம் தாங்க முடியாமல் மக்கள் வேறூர்களை நாடுகிறார்கள்.
கட்டுரை முழுவதும் கோயிலைப்பற்றிய புராணவழிக் கதைகள். அவை இன்று மக்களால் எப்படி எடுத்துக்கொள்ளப்படமுடியுமோ அப்படி எடுக்கப்படும். அதாவது ஸ்தலபுராணங்களில் மனிதர்கள் வந்தார்களென்றால் மட்டுமே சிறப்புடன் நோக்கப்படும். புராணக்கதைகளை வைத்து ஓவர் பில்டப் கொடுத்தால் அக்கோயிலுக்கு சிறப்பு வரும் என நினைப்பது தவறு.
//கூடலழகர் எழுந்தருளி “நீர் சென்று திருவில்லிபுத்தூர் சென்று அங்கே இருக்கும் பெரியாழ்வாரை அழைத்து வாரும். //
என்பது எப்படி வரும்? அவர் மதுரைக்கு வந்து செல்லுமுன் பெரியாழ்வார் என்ற நாமம் அவருக்கிடப்படவில்லை. அது பிறகாலத்தில் கொடுக்கப்பட்டது. அவரின் இயற்பெயர் விட்டுச்சித்தர். கூடலழகர் விட்டுச்சித்தரை அழைத்துவாரும் என்றுதான் சொல்லியிருப்பார்.
//இத்தகைய பேரும் பெருமையும் பெற்ற மதுரையின் சிறப்பு நினைக்க நினைக்க இன்பம் பயப்பதாகும்.//
இதுதான் கட்டுரையின் இறுதிச் சொற்றொடர். அல்லது முடிவு. மதுரையின் சிறப்பைச் சொல்ல எழுதுகிறாரா, அல்லது கூடலழகரின் சிறப்பைச் சொல்ல எழுதுகிறாரா? இவர் சைவர் போலும். அவர்களுக்கு இயற்கையான திருமால் பத்தி இருப்பது இல்லை.
//இத்தகைய பேரும் பெருமையும் கொண்ட கூடலழகர் என்ற திவ்யதேசத்தின் சிறப்பை நினைக்க நினைக்க இன்பம் பயப்பதாகும்// என்றே முடித்திருப்பார் ஒரு வைணவர்.
மதுரையின் சிறப்பு இத்திவ்யதேசத்தால் வந்தது. இத்திவ்ய தேசத்தின் சிறப்பு மதுரையால் வரவில்லை.நினைவில் வைக்கவும் பெரியவரே.
BS:
There are 3 levels in this temple. Seated, reclining and standing postures are found in the three levels. The sitting posture is for KUDalazhagar in the first level. Read what I have written in my article from which I quote, “The temple premises cover an area of 2.5 acres. The front portal tower is a five- tiered structure. The temple is built on three levels featuring the lord in three different postures. On the first level the presiding deity KUDalazhagar is seen in the seated posture under the canopy of AdisEshan. Twenty steps above the first level lord Ranganatha is seen in the reclining posture. Another ten steps above finds SUryanArAyaNan in standing posture.”
This is factually correct.
மூன்று திருக்கோலங்கள். நின்றான்; கிடந்தான்; இருந்தான். நாங்கள் சென்ற போது வரிசையில் நின்று உள் சென்றதும் கண்டது அர்ச்சனை பண்ணியது அனைத்தும் நின்றானையே. அஃது உத்சவர் என்று தெரிகிறது. போன நாள் ஒரு விழாக்கால நாள். அஃது உத்சவருக்கிருக்கலாம். மூலவரை வைத்துதான் கோயிலென்றால், இருந்த திருக்கோலமே முதன்மையாகும்.
I think BS is nitpicking on certain items in the article. The article emphasizes the greatness of Madurai which is currently known the world over for the Meenaakshi amman temple. The antecedents of the KUDalazhagar temple enhance the greatness of Madurai. Yes, one should travel thousand years backward to appreciate how it would have looked like. Over the hundreds of years the damage to the two rivers has been done by the humans. I can imagine the glory of that place thousand years ago when water was flowing in Vaigai touching the banks on both sides. The same situation is seen with KAvEri river in ThamizhnADu when it is all sand most of the year. Yes, it is past glory alright. But still it has to be reminisced. Past culture and civilization has been continuously eroded. But that erosion “reputation” belongs to the people who sullied it. Let us forget the current status of the city away from the two prominent temples and dwell on the temple sites alone. Pl take the salient features of the sthala purANam as they were thought to exist in the past and do not judge the greatness of the divya dEsam by the current status of its environs, which is regrettably man-made.
>>மதுரையின் சிறப்பு இத்திவ்யதேசத்தால் வந்தது. இத்திவ்ய தேசத்தின் சிறப்பு மதுரையால் வரவில்லை.நினைவில் வைக்கவும் பெரியவரே<<
I would brand the above statement as an example of religious extremism. I am a "shaivite" but please read my article whose URL is given in my first comment and see if I have introduced any shaivite tilt in it. If we promote divisions within our own religion no wonder other relgionists exploit it.
திண்ணை மதங்களைப் பற்றிய கட்டுரைகள் அனுமதிக்கலாம். ஆனால் அவை கண்டிப்பாக அம்மதத்தவரை நோக்கி எழுதப்படுபவையாக இருக்ககூடா. எல்லாருமே அம்மதத்தைப்பற்றித் தெரிய – ஆனால் மதமாற்றத்திற்காகன்று- ஒரு அறிவுத்தாகத்தைத் தணிக்கவே (இன்டலக்சுவல் கூரியாசிட்டி) அக்கட்டுரைகள் போடப்படுகின்றன.
இங்கு போடப்படும் கட்டுரைகளைப்படித்து ஒருவர் தன் ஆன்ம நிலை உயர்த்துக்குச் சென்று பரவசமடைந்தேன் எனச் சொல்வது ஒரு கோமாளித்தனமான நாடகம். உண்மையில் ஆன்மிகநிலையை உயர்த்துவிரும்புவோருக்கென்று மதசம்பந்தமான நூல்களும் தளங்களும் வலைபதிவுகளும் இருக்கின்றன. அங்கு போகலாம். படிக்கலாம். சிறப்படையலாம். மேலும், உபய்ந்யாசங்களைக்கேட்கலாம் ஒருவர் திண்ணையில் கட்டுரை எழுத இன்னொருவர் அரோஹரா என்றாலோ, அல்லது ஆமென் என்றாலோ, அல்லேலுயா என்றாலொ, அல்லாஹூ அக்பர் என்றாலோ, அவை. வேஷங்களாகும். கோயில், மசூதி, தேவாலயங்கள் என்று இருக்க, எவரும் உணவு விடுதியில் போய் சாமி கும்பிட மாட்டார்.
இத்தளம் அறிவார்ந்த கருத்துக்களை பரிமாறவும் அப்படிப்பட்ட சர்ச்சைகளுக்குமான தளமென்றே நினைக்கிறேன். உண்மையான பக்தன் ஆடம்பரமாக தன்னைப்பிறர் பார்த்து வியக்கவேண்டுமென தன் தெய்வத்தை வணங்க மாட்டான். தான் என்ற உணர்வை அழிக்கவே பக்தி. தான் என்ற முனைப்புடன் ஞானவேல் முருகனுக்கு அரோஹரா போட முடியுமா? அல்லாஹீ அக்பர் எனச்சொல்ல முடியுமா? வாழ்க்கையில் அம்முனைப்பை நீக்குவது கடினம். சில நேரங்கள் அந்நீக்கல் நமக்கு எதிராகவும் போகலாம். எனவே ஓரேயொரு இடமே நமக்கு எஞ்சி இருக்கிறது: அஃது இறைவன் முன்னால் நாம் நிற்கும்வேளை மட்டுமே. அங்கும் வேஷமா? அதற்கு வளவ துரையன் கட்டுரைகளை கருவிகளாகப்பயன்படுத்தி நகைச்சுவையைக் கிளற வேண்டுமா?
மதம் பற்றிய கட்டுரைகள் வரட்டும். அவை அறிவுப்பூர்வமான சிந்தனையைத் தூண்டவே பயன்படுத்துவோம்.
பேரன்பிற்குரிய ஸ்ரீமான் வளவ.துரையனார் அவர்களது ஸ்ரீ வைஷ்ணவம் சார்ந்த வ்யாசங்கள் மனதிற்குப் பெரு நிறைவைத் தருகிறது.
மிக நீண்ட வ்யாசம். வாசிக்க வாசிக்க சுவையாய் உள்ளது. ஒரு சேர கூடலழகரையும் கூடலழகரைச் சேவித்துப் பெரும் பேறு பெற்ற ஆழ்வார் மற்றும் எண்ணிறந்த பாகவதோத்தமர்களை நினைவு கூர்ந்தமை அருமை. புராணாந்தரங்களிலிருந்தும் இந்த திவ்ய தேசத்தின் பெருமைகளை விசாரம் செய்தமை இன்னமும் அழகு.
ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தினர் உபயவேதாந்தி என தமிழ் சம்ஸ்க்ருதம் என்ற இரு மொழிகளிலும் பாரங்கதம் உடையவர்களாக இருப்பர்.
அப்படிக்கான சம்ப்ரதாய மணம் கமழுகிறது உங்கள் வ்யாசத்தில்.
ஆழ்வார் ஆசார்யர்களது அருளிச்செயல்களை இவ்வண்ணம் தொடர்ந்து பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.
அருமை.
ஆழ்வார் திருவடிகளே சரணம். அடியேன் சரணம்.
\\ கிருதமாலா ஆற்றங்கரையில் இருப்பதாக எழதுகிறார். அப்படி ஒரு ஆறு கோயிலுக்குப் பக்கத்திலே இல்லை. வைகையோ இரு மைல் தொலைதூரத்தில் உள்ளது. ஆனால் கிருதமாலா ஆறு இன்று ஓடுகிறது மதுரையில் அது பக்கத்தில் இல்லை \\
பெருமாளே!!!!!!!! ரெவ ரெண்டு ஜோ அவர்களது சமூஹம் விளங்கிக்கொள்ள வேண்டியதாகப்பட்டது………….
வ்யாச கர்த்தர் செய்த விவரணம் கூடல் நகரத்தைப் பற்றியது.
கூடல் நகரின் இருபுறமும் வேகவதி எனும் வைகையும் க்ருதமாலா என்ற நதியும் ஓடுவதாகத் தான் வ்யாச கர்த்தர் சொல்லியுள்ளார்.
கோவிலைச் சுற்றி இரு நதிகளும் ஓடுவதாக வ்யாச கர்த்தர் சொல்லாததைச் சொல்லுவதாக அவர்கள் சொல்வது அன்னாருடைய பூர்வாவதார தோஷம் தொடர்வதால்.
அவதார வரிஷ்டாய தோஷாரோபிதாய மங்களம். ஆமீன்.
\\ கட்டுரை முழுவதும் கோயிலைப்பற்றிய புராணவழிக் கதைகள். அவை இன்று மக்களால் எப்படி எடுத்துக்கொள்ளப்படமுடியுமோ அப்படி எடுக்கப்படும். அதாவது ஸ்தலபுராணங்களில் மனிதர்கள் வந்தார்களென்றால் மட்டுமே சிறப்புடன் நோக்கப்படும். புராணக்கதைகளை வைத்து ஓவர் பில்டப் கொடுத்தால் அக்கோயிலுக்கு சிறப்பு வரும் என நினைப்பது தவறு. \\
சம்ப்ரதாயத்தை அனுஷ்டிப்பவர் செய்ய வேண்டிய வேலை ஸ்தல புராணங்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது.
*புராணக்கதைகளை வைத்து ஓவர் பில்டப் கொடுத்தால் அக்கோயிலுக்கு சிறப்பு வரும் என நினைப்பது தவறு* என்ற சொற்றொடர் நிச்சயமாக ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை அனுசரிக்கும் அல்லது அதன் மீது மரியாதை வைக்கும் ஒருவரால் எழுத என்ன கற்பனை கூடச் செய்ய முடியாத சொற்றொடர்.ஸ்ரீ வைஷ்ணவத்தை நிந்தனை செய்யப்புகுவோர் ஏன் அப்படிச் சொல்லுகிறார்கள் என்பதற்கு ராக்கெட் சயின்ஸ் வாசிக்க வேண்டாம்.
ம்………… மண்டபத்துல த்ராவிட டம்ளர்கள் யார் யாரெல்லாமோ எசகு பெசகா சொல்லிக்கொடுத்ததை சம்ப்ரதாயம் என்று கதைக்க முனைகிறார் என்பது சித்தமாகிறது.
வ்யாசம் எடுத்துக்கொள்ளாத விஷயம் கூடல் நகரின் இன்றைய நிலை. அல்லது வைகை மற்றும் க்ருதமாலா நதிகளின் இன்றைய நிலை. அதைப்பற்றி சொல்வதற்கு அடிப்படைத் தகுதி கடைசீ பக்ஷமாக மண்வெட்டியெடுத்து ஒரு பிடி மண்ணையாவது தூர் வாருவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும். சேலத்துல ஏரிகளையும் குளங்களையும் அப்படி சுத்தம் செய்ய முயற்சி செய்திருக்கிறோம் ஸ்வாமின். இப்போது அப்படிப்பட்ட முயற்சி திருவினையாகியிருக்கிறது. ஏரி குளங்கள் புனர்வாழ்வு பெற்றிருக்கின்றன. விருந்தாவனத்தில் அப்படி முயற்சி செய்து பல குளங்களை மீட்டிருக்கிறோம்.
தட்டச்சுப்போராளிகளாக மாத்ரு ஸ்தானத்தில் இருக்கும் நதிகளின் கற்பை வாய்க்கு வந்த படி ஏசும் களப்பிணியை செய்து அமையும் அவலத்தில் சேலமாநகர் வாசிகளோ விருந்தாவனத்து வாசிகளோ தர்சனார்த்திகளோ இல்லை.
வேகவதியையோ க்ருதமாலாவையோ …………. அதில் சேரும் மாசுகளை விலக்க …………… ஒரு பிடி மண்ணையாவது தேவரீர் தூர் வாரியிருதால்………….. அல்லது அப்படி தூர் வாருபவர்களுக்கு பணத்தாலோ சொற்களாலோ உபகாரம் செய்திருந்தால் தேவரீர் திருவடித் தூளி எம் சென்னியதே.
போங்க………… நதியை ஏசிய வாயைக் கழுவி அதைக் காக்க என்ன செய்ய முடியும் என்று எழுத முயற்சி செய்யுங்க.
ஸ்தல புராணங்கள் எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. ஒரு கோயிலுள் சென்று வணங்குவாருக்குக் கண்டிப்பாகத் தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. தெரிந்தாலும் ஏற்கவேண்டுமென்று கட்டாயமில்லை. ஒதுக்கிவிடலாம்.
எம்மதமும் – வைணவமோ, கிருத்துவமோ, இசுலாமோ, எம்மதமாகட்டும் – அது நம் விமர்சனத்துக்குள்ளாக்கபபடவேண்டும். சிந்தனைக்காக, சிந்தனையைப்பெருக்க, இங்கு வருகிறோம். சாமி கும்பிட இல்லப்பா. கண்ணை மூடிக்கொண்ட பக்தி போலி. அவன் ரொட்டித்துண்டுக்காக மதம் மாறுவான்.
மனிதர்கள் வாரா வெறும் புராணக்கதைகள் நிறைந்த ஸ்தலபுராணங்களை நான் எடுப்பதேயில்லை. ஸ்தல புராணங்கள் ஒரு நற்கருத்தை விதைக்கவே எழுதப்பட்டிருக்கின்றன. எளிய மக்களுக்கு அவை தேவையென்று நினைக்கிறார்கள்.
வளவ துரையன் நீட்டியெழுதும் ஸ்தலபுராணங்களினாலேயே கூடலழகர் சிறந்தாரெனெறால், மதுரை மாநகரத்தால் அவர் சிறந்தார் என்பதும் ஒன்றே. கூடலழகர் ஸ்தலபுராணத்தில் பெரியாழ்வார் வருகிறார். அக்கதை மட்டுமே சிறப்பு.
என் மதம் தனிப்பட்ட வகையில் நானே எனக்குச் சீரமைத்துக்கொண்டது. அநாவசியமாக ஏதோ ஒரு மதத்தில் என்னை இணைக்க வேண்டாம். என் வழி, தனி வழி. சுதந்திர சிந்தனையாளன்.
சிலர் சிந்தித்து வாழ்வர்; சிலர் சிந்திப்போரை நிந்தித்து வாழ்பவர்.
அருணகிரியாரின் திருப்புகழையும் தாண்டி விட்டது எமது அருமை சகோதரர் திரு. கிருஷ்ண குமாரின் கொடுந்தமிழ்.
சதாசிவ பண்டாரத்தாரின் கூற்றின்படி (தமிழ் இலக்கிய வரலாறு 17ம் நூற்றாண்டு) அண்ணமலைப்பலகலைக்கழகம்), அருணகிரிநாதரின் கொடுந்தமிழ் காலத்தின் கொடுமையே ஒழிய, அவராக விரும்பித்திணித்ததல்ல. ஹௌசால்யர்கள் தமிழகத்தைப்பிடித்து திருவண்ணாமலை வரைக்கும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். தங்கள் கன்னட மொழியையே அரசு மொழியாக்கினர். தமிழ்ப்புலவர்கள் நூலகளை தமிழில் யாத்தலைக்குறைத்துக்கொண்டதால், தமிழ் இலக்கியம் வளராமல் தேங்கியது. எழுதியோர் தமிழில் வடமொழியை அளவுக்கு மீறி கலக்கும்படியாயிற்று. அவர்களால் ஒரு சில நூல்கள் தமிழில் எழுதப்பட்டன. சிற்றிலக்கியம் அங்கொன்றும் இங்கொன்றுமாக உயிரைப்பிடித்துக்கொண்டு கிடந்தது. இக்கால கட்டத்தில் தோன்றியவரகளும் திருவண்ணாமலையிலே பிறந்தவர்களும் வளர்ந்தவர்களுமான இருவருள் ஒருவர் அருணகிரிநாதர். இன்னொருவர் வில்லுப்புத்துரார் (வில்லி பாரதம் எழுதியவர்) பேர் வில்லுப்புத்தூரார் பிறந்து ஊர் திருவண்ணாமலை. வில்லிபுத்தூரில் வந்து குடியேறினவர். இருவருக்கும் போட்டி நடந்ததாகவும் அதில் வைணவரை சைவர் தலைகுனிய வைத்ததாகவும் சைவர் கட்டிய கதையொன்று உண்டு.
ஆனால், வில்லிபாரதம் அளவுக்கு திருப்புகழின் தமிழ் அழகைப் பெறவில்லை. படித்துப்பாருங்கள்.
ஆக, அருணகிரிநாதரின் திருப்புகழ் கொடுந்தமிழையே (அதாவது வடமொழியின் அளவுகடந்த கலப்பு) கொண்டது காலத்தில் அலங்கோலமே தவிர அவரின் விருப்பத்தால் விழைந்ததன்று என்கிறார் பண்டாரத்தார். விளைவு: பாமரமக்களைப்போய் திருப்புகழ் சேரமுடியாமற்போனது.
கிருஷ்ணகுமாருக்கு வேண்டியது வடமொழி கலப்பு. அதை திருப்புகழ் தாராளமாகச்செய்ததால் முருகனும் அருணகிரிநாதரும் அவருக்கு வேண்டியவராகிவிட்டார்கள். குமரகுருபரரின் முருகன் பிள்ளைத்தமிழைப்பற்றி கேள்வியே பட்டிருக்க மாட்டார். அது தமிழாச்சே? முருகனாவது கந்தனாவது? நமக்கு வேண்டியது வடமொழி. அதைப் பேயே வந்து கொட்டினாலும் இனிக்கும். தமிழை குமரகுருபரரே வந்து நமக்குக் காட்டி முருகனை வணங்கச்சொன்னாலும் கசக்கும்.
இது தலைப்பைப்பற்றி விலகியதென்றாலும் ஓரிரு சொற்கள் சிறிது விளக்கம் தரும். இல்லாவிட்டால் தவறான புரிதல்கள் தொடரும்.
கொடுமை+தமிழ் = கொடுந்தமிழ்.
இது படிப்போருக்குப் புரியாத, அல்லது புரிய கடும் முயற்சி செய்யும்படியான தமிழ் என்று பொருள்பெறும்.
ஆனால், இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.
அதாவது, மூவகைத்தமிழ் நமக்கு. 1. செந்தமிழ் – புலவர்கள் பயன்படுத்துவது. 2. எழுத்துத்தமிழ் – அனைவரும் எழுத பயன்படுத்துவது 3. பேச்சுத்தமிழ். இது மேற்சொன்ன இருவகைகளையுன் விரவி வரலாம்; அல்லது வேறுபட்டும் வரலாம்.
இந்த மூன்றாவது வெள்ளைக்காரருக்கு பெரிய சங்கடத்தைத்தருவது. இவர்கள் தமிழ்நாட்டில் வாழாமல், வெளிநாட்டில் இருந்து கொண்டு சங்க நூலகளையும் இடை கடை இலக்கிய இலக்கண நூல்களையும் கற்றுத்துறை போகியதால், இவர்களுக்கு தமிழ்நாட்டில் பேச்சுவழக்கில் இருக்கும் தமிழ் புரியமுடியவில்லை.
ஒரு சமயம், சன் தொலைக்காட்சியில் சந்திப்போமா நிகழ்ச்சியில் மாஸ்கோ பலகலைகழக தமிழ்ப்பேராசிரியரை (உருசிய வெள்ளைக்காரர்) பேட்டிகண்டபோது. உங்கள் தமிழக வருகையின் நோக்கம் என்ன? என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.
//எனக்கு எல்லாமே அத்துப்படி. அனைத்துக்காவியங்கள், சங்க நூலகள் சிற்றிலக்கியம், பாரதி, பாரதி தாசன், உவே சா போன்ற ஆராய்ச்சியாளர்களின் நூலகளைப்படித்து நானும் பல ஆராய்ச்சி நூலகளையும் யாத்துவிட்டேன். என் மாணவர்களும் தமிழ் படிக்கிறார்கள். ஆனால் நான் தமிழகத்து வரும்போது, மக்கள் பேசுவது புரியவில்லை. தற்போது நான் தமிழகத்தில் சில மாதங்கள் அலைந்து தமிழ்மக்கள் பேச்சுத்தமிழை தெரிந்தால்தான் என் தமிழ்ப்பணி முழுமை பெறும்//
என்றார்.
இப்பேச்சுத்தமிழே கொடுந்தமிழ் என எடுக்கப்பட்டு இதற்கே வீர்மாமுனிவர் ஓர் இலக்கணமும் செய்தார். அவர் செந்தமிழ் இலக்கணமும் செய்தவர்.
இங்கு அருணகிரிநாதரின் தமிழ் கொடுந்தமிழ் எனக் கருதப்படுவது இரு காரணங்களுக்காக என நினைக்கிறேன்:
1. பாமரமக்கள் புரியும்படியான தமிழ் இல்லை.
2. வடமொழி கலப்பு
ஒரு பாடல்:
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.
இதைப்போன்ற பலபாடல்கள். புலவர்களாலும் அறியவியலாது. விளக்கம் சொன்னால் மட்டுமே புரியலாம்.
//முக்தியை அளிக்கக் கூடிய பெருந்தெய்வம் எது? எனும் சந்தேகம் தோன்றியது…..
மேலும் ஸ்ரீவைஷ்வணவமே முக்தி அளிக்கக்கூடிய மதம் என்று நிரூபணம் செய்தார். //
அப்ப.. மதுரையில் முக்தி அளிக்கக் கூடிய பெருந்தெய்வம் பெருமாள் மட்டுந்தானா? ஆலவாய் பெருமான் இல்லையா?
சேக்கிழாரால் திருஆலவாய் என்று பாடப்பட்ட பெருமான்.. ஆலவாய் அண்ணல், ஆலவாய் அரண் என்றே தமிழ்ஞானசம்பந்தர் போற்றினார். செந்தமிழ்ச் சொக்கநாதன் என்றே நம்முன்னோர் போற்றிப் பரவினர். பெருமானுடன் உறை அம்மையை அங்கயற்கண்ணி என்றே தமிழ்ச் சான்றோர் குறிப்பிட்டனர். “அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே” என்று தமிழ்ஞானசம்பந்தர் போற்றுவார்.
“இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை!’
என்று பாடிய இளஞ்சூரியர்,
போன்ற புலவர்கள் வணங்கியது “சோத்துக்குப் பின் சொக்கநாதன்” சிறு தெய்வமா?
கடைசியாக….”ஹரியும் சிவனும் ஒன்னு…இதை அறியாதவன் வாயில் மண்ணு!” என்று யதார்த்த உண்மையை முன்னோர் சொன்னார்களே….இப்ப யார் வாயில் மண்?
முதலில் அறியப்படவேண்டியது கால நிலைகள்.
வல்லபனின் காலமெது? அதே பெரியாழ்வாரின் காலம்? அக்காலத்தில் மதுரை மீனாட்சி உண்டா? மீனாட்சி தெய்வமன்று; பாண்டியனின் மகளென்றல்லவா ஸ்தலபுராணம்/ நம்பலாமா? சம்பந்தரின் காலமெது? பெரியாழ்வாருக்கு முந்தியா பிந்தியா?
வல்லபன் காலத்தில் சைவ-வைணவப்போராட்டமிருந்த வேண்டும். அதே காலத்தில் சமணர்களும் பவுத்தர்களும் இருந்திருக்கவேண்டும். ஆழ்வார்கள் – நம்மாழ்வார் முதற்கொண்டு சமணர்கள் வாழ்க்கையைக் காட்டுகிறார்கள் – அப்படிப்பட்ட காலத்தில் எம்மதம் உயர்ந்தது என்பது மட்டுமன்று; அரசனைத் தம்மிடம் ஈர்க்கும் பகைப்போராட்டமும் நிகழ்ந்திருக்க வேண்டும்.
சம்பந்தர் காலத்தில் வைணவம் வீழ்ந்து சைவம் மேலோங்கியது மதுரையில். சமணர்கள் மட்டுமே போட்டி. அவர்களை அழித்து விரட்டி வெற்றிகண்டதாக வரலாறு. மங்கையர்க்கரசியார் (கூன்பாண்டியனின் மனைவி), அவனின் படைத்தலைவர் பரஞ்சோதியும் இருவரும் சம்பந்தரை அழைத்துவந்து மன்னனைச் சைவத்துக்கு மாற்றியதுமட்டுமன்றி, சமணர்களை அழிக்கவேண்டும் எனத் திட்டம் தீட்டி, சமணர்கள் ஒழிக்கப்பட்டார்கள்.
சமணர்கள் ஒழிக்கப்பட்டார்கள் அல்லது சமணம் அழிக்கப்பட்டது பாண்டிய நாட்டில் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. சமணர்கள் கழுவிலேறி கொல்லப்பட்டார்களா என்பதுதான் இருகுழுக்களுக்கிடையில் நடைபெறும் சண்டை. அச்சர்ச்சை திண்ணையில் கூட கட்டுரையாக எழுதப்பட்டிருக்கிறது எனவறிகிறேன்.
ஈங்கு நமக்கு வேண்டியது, சம்பந்தர் சமணர்களை வெற்றிகொண்ட காலமான கூன்பாண்டியன் காலம். வல்லபன் காலத்திற்கு பிந்தியது. எனவே அக்காலத்தில் நடந்த மதச்சண்டையில் சம்பந்தரை ஏன் இழுக்கிறீர்கள் எனத்தெரியவில்லை.
ஒன்றை நினைவிற்கொள்ள வேண்டும். ஆழ்வார்களோ, சைவசமயக்குரவர்களோ – இவர்கள் வாழ்க்கை வரலாறுகளை எழுதியோர் அவர்களின் தொண்டர்கள். அவர்க்ள் பக்தியைப்பெருக்க எழுதினார்கள். அங்கு இருப்பதும் பொய்யும் மெய்யும் கலந்தவொரு கலவை. அப்படிபபட்ட கலவையை எடுத்து நாம் பேசமுடியுமா? அக்கதைகள் – அல்லது வரலாறுகள் – தமிழ் வைணவர்களுக்காக எழுதப்பட்டவை.
பெரியாழ்வார் வந்துபோன பின்பே திருவில்லிபுத்தூர் என்று ஊர் வந்தது. ஏனெனின் பெரியாழ்வாருக்குப் பாண்டியன் ஈந்த பிரம்தேயமே அது. அவர் எப்போது எங்கிருந்து வந்தார்? அவர் ஒரு கோயில் அர்ச்சர். பெரும்புலவெரென அறியப்பட்டாரா? அவர் காலத்தில் மதுரை மாநகரத்தில் பெரும்புலவர்களும் மத அறிஞர்களும் இல்லையா?
இக்கதை – சைவர்களைப் பின் தள்ள எழுதப்பட்டவொன்று.
பெரியாழ்வாரின் திருமால் பக்தியைப்பறைசாற்ற எழுதப்பட்ட கதையே இது. ஏதாவது வரலாற்றுச்சான்று உண்டா? தெரியவில்லை. வைணவர்கள் எழுதிய வரலாற்றை எடுத்துப்பேசவே முடியாது.
எப்படி விஷ்ணுவின் பரத்துவத்தை நிலைநாட்டினார் என்பதும் மயக்கமே. அதை இப்படி எடுக்கலாம்: வைணவம் பிறமதங்களை விட மேலோங்கி பெரியாழ்வார் காலத்தில் அரசர்களின் ஆதரவைப்பெற்றது என்று முடிக்கலாம்.
அதன் பின்னர் சம்பந்தர் வந்து எல்லாவற்றையும் விரட்டிவிட்டு சைவத்தை மேலே கொண்டுவந்தார்.
@Shali:
The reference to the PeriyAzhwar declaration in the court of Vallaba dEvan is part of VaishNava sampradAyam. The vaishNaites are entitled to hold that opinion. That does not mean other segments of Hinduism have to abide by it. Madurai is known the world over as the town ruled by MeenAkshi amman. There is room for everybody there. Let us not split hair in this matter. I agree with what you say that there is one god. Causing division as BS did in his/her comment, as I said earlier in my comment, is not a healthy approach. But as you know VaishNavites do not concede recognition of other gods. They go by “VenkaTAdri samam sthAnam brahmANDE nAsti kinchana, venkaTEsa samO devO na bhUtO na bavishyati” (There is no place in the universe that is equal to VenkaTAdri–tirumalai— and there is no god equal to VenkaTEsa now nor will there ever be). So be it. I take pride in my mind being a little broader than that.
நீங்களே ஒரு கருத்தை வைத்து, நீங்களே அதை மறுத்தும் எழுதிவிடுகிறீர்கள். சைவர், வைணவர் பற்றியதுதான் அது.
பிளவு வேண்டாம்; நான் பிளவு படுத்துகிறேன் என்று சொல்லி, வைணவர் என்போர் பிறதெய்வங்களை ஏறகாதவர் என முடிக்கிறீர்கள். அதைத்தானே நானும் சொல்கிறேன். இருப்பதைக் காட்டினால் தவறா? பிளவு படுத்தலா? காட்டாவிட்டால் போய்விடுமா? சிந்திக்கவும்.
சைவர் என்போரில் இருவகை. சிவனையே முழுமுதற்கடவுளாகக் கொண்டு வாழ்வோர். தென்னாடுடைய சிவனே….போற்றி என்பது அவர்கள் கொள்கை. பிறதெய்வங்களை வணங்கார். இப்படிப்பட்டோர் ஆதினங்கள்; மறைமலை போன்ற சைவ சித்தாந்திகள்.
இரண்டாவது வகை: உங்களைப்போல, இவர்கள் பாமார மக்கள். ஆனால் ஆதிகாலத்தில் சைவர்கள் வழிவந்தோர். இவர்களுக்கு எல்லா இந்துத்தெய்வங்களும் ஓகே. ஆனால் இவர்களுள் சைவத்தைப்பற்றி ஆழமாகத் தெரிந்து வணங்குபவர்கள் உண்டு. பிறதெய்வங்களையும் பக்தியாக வணங்குபவர். (இவர்களைப்பற்றி மேலும் வரும்)
இவர்கள் இருவரைத்தாண்டி பொதுத்தமிழர் இந்துக்கள். இவர்கள் எதைப்பற்றியும் சட்டை செய்வதில்லை. எந்தச்சாமிக்கு எங்கே பேர் என்று அங்கே போய்விடுவர். அது கிருத்துவமா, இசுலாமா என்றில்லை. எனவே பழநியிலிருந்து தமிழ்நாடு அரசு நேரடியாக வேளாங்கண்ணிக்கு பேருந்து விட்டிருக்கிறது. வேளாங்கண்ணியில் குமிவார்கள். பெரிய பாளையத்தில் குமிவார்கள். மதுரை தெற்குவாசல் தர்காவில் சென்று குழந்தைகளுக்கு பேய்விரட்டுவார்கள். தர்காவுக்கு பெயர் அல்லாக்கோயில்.
தமிழக மக்களின் ஆன்மிக வாழ்க்கையை இப்படிப் புரிந்தாலொழிய பிறர் இவர்களைச் சுட்டிக்காட்டி எழுதும்போது அவர்களைத் திடடும்படி ஆகிவிடும். அதைச்செய்துவருகிறீர்கள்.
இப்போது இரண்டாவது வகை சைவருக்கு வருவோம்.
இவர்களில் மாபெரும் வைணவ அறிஞர்கள் இருந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள்.
அண்மையில் காலமான கல்விக்கடல் கோபாலையரவர்கள். ஆழ்வார் பாசுரங்களை ஆராயந்தவர்.
வாழ்பவர்கள்.
தெ. மீனாட்சிசுந்தரம் அவர்கள். பெரியவாச்சான் பெரிய திருமொழிக்கு எழுதிய மணிப்பிரவாள உரையைத் தமிழில் தந்தவர். மேடைகளில் வைணவம் பற்றி உரையாற்றி வருபவர்கள்.
முதுபெரும்புலவர் பேராசிரியர் நா சுப்புரெட்டியார் அவர்கள். மேலே குறிப்பிட்ட இருவரையும் விட வைணவத்தில் பெரும்புலமை பெற்றவரிவர். கட்டுரைகள் ஏராளம்.
இவர்கள் பழுத்த சைவர்கள். ஆனால் திருமாலிடம் அளவுகடந்த பக்தியுடையவர்க்ள்.
பேராசிரியர் வரதராஜர் (இவரின் கீழ் திருவேங்கடவன் பலகலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் பேரா நா. சுப்பு ரெட்டியார் அவர்கள்) ரெட்டியாரின் வைணவக்கட்டுரைகளைப்பற்றி அறிமுகம் செய்யும் போது, சைவருக்காக இருப்பினும் வைணவத்தில் மேல் இவர் கொண்ட காதலும் பற்றும் வியப்பைத்தரும் என்கிறார்.
There may be many others also.
இவர்கள் தவிர உங்களைப்போன்ற சாதாரணமவர்கள்.
இந்த சாதாரணமவர்கள்தான் என் பிரச்சினை. இவர்கள் பக்தியைக் குறைத்துச்சொல்லவில்லை. ஆயினும் இவர்களுக்கு எப்படி சைவக்கடவுளர் மேல் பக்தியோ அப்படியே வைணவக்கடவுள் மேலேயும் வரும். சுருங்கச்சொல்லின், சிறப்பாக இராது. Nothing special. வைணவருக்கு மட்டுமே தம் மதத்தின் மீது ஆழ்ந்த பற்றில் அனைத்தையும் தெரிந்து சிறப்பான ஈடுபாடு வரும். பிறதெய்வத்தோடு இணைப்பதை நினைத்துப்பார்க்க முடியாதவொன்று நீங்கள் சுட்டிக்காட்டியது போல.
ஒரே தெய்வம் என்பது வேறு. பத்தோடு இஃதொன்று ! என்பது வேறு. இல்லையா?
ஒரு வைணவராக இருந்திருந்தால், மதுரையால் திருமால் சிறப்படைந்தார் என்ற மாபெரும் அபச்சாரத்தை வளவ துரையன் செய்திருக்க மாட்டார்.
வளவ துரையன் வைணவம் பற்றி. கட்டுரைகள் வேறுபலவிடங்களிலும் வெளியாகிக்கொண்டுதானிருக்கின்றன அவை ஒரு ஆசிரியர் மாணாக்கருக்குச் சொல்ல வைக்கும் கட்டுரைகள் போலத்தானிருக்கும். வைணவர் கட்டுரகளைப்படிக்கும்போது நமக்கும் ஏற்படும் ஆன்மிக நிலை இவரின் கட்டுரைகளில் உருவாகாது.
But he is an erudite scholar in Tamil literature and Vaishavite literature, though. For all those who seek knowledge about Shri vaishnavism, he is a better bet. Don’t miss him.
Mahakavi writes: //Madurai is known the world over as the town ruled by MeenAkshi amman//
Presumptuous notion!
Vazhava Duraiyan essay is not about Madurai Meenakshi temple but about Koodazhagar temple.
Questions you should have thought before making a sweeping statement like the above>
மதுரை மீனாட்சி கோயில் எப்போது தோன்றியது? மீனாட்சி பாண்டியன் மகள் என்று ஏற்கிறார்கள். அப்படியென்றால், அவளை சிவனின் மனைவியாக்கியது எப்போது?
நால்கோபுரங்களில் இரண்டை நாயக்க மன்னர்கள் கட்டினார்கள். அவர்கள் காலம் ஆதிகாலமன்று. வெள்ளைக்காரர்களும் கிருத்தவ மிசுநோர்களும் வந்து போன காலமது.
அதன் பின்னர் கோயிலின் நிலையென்ன? அது பெரிய கோயிலா சின்னதா? சின்னதென்றால் எப்போதிலிருந்து பெரிதானது?
சங்க நூல்களில் மீனாட்சி சொல்லப்படுகிறாளா? வணங்கப்படும் தெய்வமா? சங்க நூலான மதுரைக் காஞ்சி மதுரையின் சிறப்பைப்பற்றிப் பாடுவது? அது மீனாட்சி கோயிலைக் குறிப்பிடுகின்றதா?
ஆக, அனைத்து கேள்விகளுக்கும் பதிலகளைத் தேடுங்கள்.
கண்டிபாக, ஒன்று சொல்லலாம். பெரியாழ்வார் வந்து போன மதுரையில் மீனாட்சி கோயிலே இல்லை. இருந்திருந்தாலும் அது ஒரு சிறு தெய்வக்கோயிலாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆழ்வார்கள் காலம் 9ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. அவர்களுக்கு முன்பிருந்தே திருமால் கோயில் உண்டு. அவர்கள் வந்து பாடிச்சென்றார்கள். ஒரு கோயிலைக்கட்டி முடித்தவுடன் அவர்கள் வந்து பாட மாட்டார்கள். பழங்கோயில்களுக்கே சென்றனர். அவர்கள் பாடியதால் அவை திவ்ய தேசங்களாயின.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டவை திருமால் கோயில்களே. குறிப்பாக கள்ளழகர் கோயிலே. கவுந்தடிகளின் ஆசிரமம் அங்கே என்கிறார். மதுரையைப்பற்றி மேலும் அறிய, மு. இராகவையங்கார் மதுரைக்காஞ்சி, மதுரை நகரம், சுற்றுப்புறத்தைப்பற்றிய எழுதிய கட்டுரையைப்படிக்கவும். ஐம்பெருங்காப்பியமான நீலகேசியிலும் குண்டலகேசியிலும் வரும் பேய்கள் இம்மலையிலேயே வசித்தவை என்கிறார். தமிழர்கள் திருமாலை பலராமனோடு சேர்த்தே வணங்கினர் என்பதற்கு இம்மலை சாட்சி என்கிறார். பின்னர் பலராமனை தமிழர்கள் மட்டுமன்றி, வைணவர்களும் விட்டனர்.
மீனாட்சி கோயில் பழைமை வாய்ந்த கோயில் கிடையாது. எனவே உலகமுழுவதும் மீனாட்சி கோயில் பிரசித்தம் என்பது நவீன காலத்துக்குத்தான் பொருந்தும். ஆதிகாலத்துக்குப் பொருத்தமான மதுரைக்கோயில்கள் கூடலழகர் கோயிலும்; கள்ளழகர் கோயிலுமே.
மதுரையென்றால் திருமாலே ஆதிகாலத்தைப்பொறுத்தவரை.
திருப்பல்லாண்டு பாடப்பட்டதும் மேற்படி திருத்தலத்தில்தான் …………… மேலும் கள்ளழகர் திருக்க்கோயிலும் மதுரையில்தானே உள்ளது? அதுவும் ஒரு திவய தேசம்தானே?
கள்ளழகர் திருக்கோயில் மதுரையில் இல்லை. மதுரை இன்னும் கிரேட்டர் மதுரை ஆகவில்லை. அப்படி ஆகும்போது மதுரையில் இருக்கிறதெனலாம். (மதுரை என்றுமே கிரேட்டர் மதுரையாகாது; அஃதொரு சிற்றூராக இருப்பதையே மக்களும் விரும்புகிறார்கள்; அப்பத்தானே ஜாதிச்சண்டை போடலாம்:-))
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 15 மைலகல் தொலைவில் ஒரு காட்டுப்பகுதியில் உள்ளது. ஆனால் அப்பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தாலே மலை தெரியும். அக்காடு இந்திய வனத்துறையில் கீழ் வரும். கள்ளழகர் கோயிலுக்குப்பின் 3 கி.மீ தள்ளியிருப்பதுதான் ஆறுமுகனின் படைவீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை. இருகோயில்களை இணைக்க தமிழக அரசு ஒரு சிற்றுந்துவை விட்டிருக்கிறது. கால் மணிக்கு ஒரு முறை வந்து செல்லும். பத்தே உருபாதான் பயணச்சீட்டு. நடந்தும் செல்லலாம். செயின் ஜாக்கிரதை.
இரண்டுமே பழம்பெருங்கோயில்கள். அடர்ந்த பெருங்காடெனவும், காடுறையும் மனிதர்களான வேடர்கள் மட்டும் வதியும் மலைகளாகவும், வனவிலங்குகள், ஆனை, கரடி, சிங்கம், புலி, நரி, காட்டெருமை இருந்தனவும் என்று திருமங்கையாழ்வார் சொல்கிறார். சிலப்பதிகாரமும் இம்மலையைக்காட்டும். இவ்விருகோயில்களுடன் மீனாட்சி கோயிலை புரியும்படி ஒப்பிட்டால், மீனாட்சி கோயில் அஜித் படம், கள்ளழகரும் ஆறுமுகன் கோயில்களும் தியாகராஜ பாகவதர் படத்தைப்போல. இருவேறு காலங்கள்! இருவேறு உலகங்கள் !! சம்பந்தராலும் ஹெல்ப் பண்ணமுடியாது. யுனெஸ்கோ ஹெரிட்டேஜ் ஸ்டேடஸைத் தரமறுத்துவிட்டது. தினமலர் அவ்வளவு முயற்சிசெய்தும் பலனில்லை. மீனாட்சி என்றுமே மாடர்ன் தான், ஓல்டாக மாட்டாள் :-)
அதற்குப்பக்கத்தில் சமண மலையொன்றும் உள்ளது. எனவே இளங்கோ அம்மலைக்கு ஒரு சிறிய பாத்திரம் கொடுத்தார் சிலப்பதிகாரத்தில். அம்மலையில் தீர்த்தங்கள் உண்டு. தீர்த்தத்தில் பெரிய தீர்த்தம் நூபுர கங்கையென்று இன்றழைக்கப்படுகிறது. ஆறுமுகன் கோயிலுக்கெதிரில். மதுரைக்கு இவ்வழியாக நுழைவோர் (சங்ககாலம், சங்கம் மருவிய காலம் – சிலம்புக்காலம்) இத்தீர்த்தத்தில் நீராடிவிட்டே மதுரைக்குள் நுழைவர். நீலகேசி, குண்டலகேசி, சிலப்பதிகாரம் இம்மலை பேசப்படுகிறது. ஊரூராக புனிதப்பயணம் செய்வது பார்ப்பனரின் அறுவகைத் தொழில்களுள் ஒன்றாம். அதன்படி சிலம்புவில் வரும் பார்ப்பனர் மாடலமறையோன். அவன் வடநாடு சென்று பின் மதுரை வழியாக் கீழ்நாடு செல்லுங்கால், இம்மலைக்கு வருகிறான். அங்கேதான் பலரைச்சந்திக்கிறான். அவன் சந்திப்பு சிலப்பதிகாரத்தில் சுவையான கட்டங்களுள் ஒன்று.
மு. இராகவையங்கார், மதுரைக்காஞ்சியைப்பற்றி எழதும்போது இம்மலையைப் பற்றி அரக்கபரக்கப் பேசுகிறார்.
ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் – இம்மலையை அதாவது கள்ளழகரைப் பாடுகிறார்கள். நம்மாழ்வார், காலகள் தங்கள் வலிமையை இழக்குமுன், அதாவது கிழப்பருவம் எயதுவதற்குமுன் இம்மலைத்தெயவத்தைப்போய் வணங்கிவிடுங்கள். அதுவே நம் பிறப்பின் பொருளாகும் என, ஆண்டாளோ, நீ ஒரு தோளழகன்; உனக்காக சிறப்பாக அக்காரவடிசல் செய்து வைத்திருக்கிறேனழைக்கிறார்; பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மலையின் சிறப்பையும் பாடுகிறார்கள்.
(குரங்குகள் ஏராளம். கவனம்)
BS:
I am not a scholar like you. But I have studied Thamizh religious literature–both shaivaite and vaishnavite. I have also written articles on divya dEsams without any prejudice or distortion(from the religious accounts available).
Let me quote from one of my blog articles here to dispute your contention that there was no Meenakshi in Madurai during PeriyAzhwar’s period and that Sambhandar’s time was later than that of PeriyAzhwAr. The URL for the following is
http://narada-therealmofreligion.blogspot.com/2012/03/mangaiyarkkarasiyar-and-isaignaniyar.html
“It was ThirugnAnasambandhar of sIrkAzhi (also known variously as SaNbai, pugali, etc.,) who gave the honorific “mangaiyarkkarasi” to the PANDiya queen mAni. Upon arriving at Madurai he describes the temple city where Lord Shiva rules with His consort dhEvi MInAkshi. He embellishes the glory of the temple further by associating it with the PANDiya queen mangaiyarkkarasi who is an ardent devotee of the Lord.
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால்
வேதமும் பொருள்களு மருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த
ஆலவா யாவது மிதுவே
ThirumuRai 3.120.1 (Sambandhar)
(The dame mAni—mangaiyarkkarasi—the daughter of the sOzha king wears ribbed bangles and has the eyes like those of a doe. She is the queen of the PANDiya kingdom and is like Lakshmi. She serves and worships the Lord, who has the form of rising fire, everyday. He, the lord of all living beings, who has bestowed the vEdhAs and their meaning to us, rules this city AlavAy with His consort who has the beautiful eyes of a fish.
From the above it is obvious that Sambhandar talks about AlavAy shiva associated with Meenakshi (called angayarkaNNi in Thamizh). It is generally agreed that Sambhandar’s time is 643-659 CE. By your own admission PeriyAzhwAr’s time in 9th century CE. I also concur with that timeframe for PeriyAzhwAr. Appar who was a senior contemporary of Sambhandar lived in the period of Mahendravarman/Narasimhavarman of the Pallava dynasty. That period is also known to be early 7th century. Appar as we all know converted Mahendravarman to shaivism. Examine these facts in the light of your claim that there was no meenakshi in PeriyAzhwAr period and that vallabadevan’s time period preceded koonpANDiyan’s period. Do you see a flaw in your statements?
//I am not a scholar like you/
வாவ்! பெரிய பெரிய பட்டங்களெல்லாம் கொடுக்கிறீங்க.
அது கிடக்க; ஆழ்வார்களுக்கே வருவோம்.
ஆழ்வார்களில் கடைக்குட்டி ஆழ்வாரெனெ அழைக்கப்படும் திருமங்கையாழ்வாரும் சம்பந்தரும் சமகாலத்தவர் என்பது வைணவ சம்பிரதாயத்து நம்பிக்கை. இருவருக்கும் நடந்த முதற்சந்திப்பு இப்படி சொல்லப்படும்:
ஆழ்வார் தமிழக திவ்ய தேச புனிதப்பயணமாக தஞ்சை மாவட்டக்கோயில்களுக்குச் செல்லுங்கால், சிதம்பரம் தில்லை நடாரஜர் கோயிலுக்குள் ஒரு பழம்பெருமாள் கோயில் இருக்கத்தெரிந்து அப்பெருமாளை மங்களாசாசனம் செய்ய (போற்றிப்பாடித்தொழ) சிதம்பரம் எழுந்தருளுகிறார். சைவ ஆதினமடத்தலைவர் சம்பந்தரும் அங்கே எழுந்தருளியிருக்கிறார். ஆழ்வாரின் புகழ் தமிழகத்தில் பரவியிருந்த காலமது. அது ஒரு சென்சேஷனல் புகழ்: ஒரு கள்ளர், வழிப்பறிக்கொள்ளை செய்வதே குலத்தொழில். ஒரு சிறு குறுநில மன்னன். மல்லுவேட்டி மைனர் பல பெண்களோடு சகவாசம். திடீரென ஒரு சில நிகழ்வகளால் – அலலது அவர் காதலித்த பெண்ணால் – வைணவராக மாற்றப்பட்டு, பெரும் பக்தி நிலைக்கு உயர்ந்து வைணவ மடத்தின் தலைவரும் (ஜீயர்) ஆகிறார். மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். இதில் இன்னும் ஒன்றும் உண்டு. பெரும் புலவராக வளர்ந்ததை புலவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. In poetic beauty, Thirumangai Azhwaar comes best.
சம்பந்தரின் சீடர்கள் போய், தங்கள் குருவிடம் //அ-பிராமணனே மடத்தலைவனாக முடியுமா? அபிராமணனே பக்தி பாடல்கள் பாட முடியுமா?. அ-பிராமணனே தமிழ்க்கவிஞனா?. எப்படிங்கானும் முடியும்? இவரையல்லவா சொல்கிறார்கள்? எனச் சொல்ல சம்பந்தர் சீடர்கள் சொன்னதை ஏற்கனவே கேள்விப்பட்டதால், அவரை வரச்சோல்லுங்கள் என்றார்.
ஆழ்வார் தன்னை என்றுமே உயர்வாகக் கருதியதில்லை. அரைகுறைகள் பக்திவேசம் போட்டு கோமாளித்தனம் செய்து நம்மைச் சிரிக்கவைக்கும்.. ஆனால் ஆழ்வார் நிறைகுடமாக இருந்தும், தனக்கு பெருமாளின் கருணை எப்போது கிடைக்குமென்றே தன் வாணாளைப்போக்கியவர். தன்னைப் ஒரு கடைப்பக்தராகக்கூட நினைக்க தகுதியில்லையென்றும் எனவே திருச்சேறைக்குவரும் பகதர்களே என் தலைமீது கால்வைத்து ஏறிச்சென்று பெருமாளை சேவியுங்கள். உங்களுக்கு கிடைக்கும் புண்ணியம் எனக்குக் கிடைக்குமல்லவா? என்றெல்லாம் பாடியவர். (This paasuram hurts Vaishnavas deeply. Some of them don’t go to Thirucherai for fear they would put their legs on the Alvar on touching the sand there)
சம்பந்தரைப்பார்ப்பது பாக்கியம் என்று விரைந்தார்.
//ஏன் இங்கு வந்தீரோ? //
//இங்கு ஒரு பெருமாள் உள்ளார்.அவரைச்சேவிக்க//
பிறகு, நீண்ட உரையாடலுக்குப் பின் சம்பந்தர் ஆழ்வாரின் உன்னத நிலையை அறிந்து ஆச்சரியித்து அக்கால வழக்கத்தின்படி, ஒரு சிறுவேலையும் பரிசாகக் கொடுத்து, நாலுகவிப்பெருமான் எனற பட்டத்தையும் ஆழ்வாருக்குக்கொடுக்க – அப்பட்டம் இன்றும் அவருக்குத்தான் சொல்லப்படுகிறது – ஆழ்வார் பெருமாளைச்சேவித்துவிட்டு போய்விடுகிறார். சம்பந்தரைக் கண்டதும் பரிசைப்பெற்றதும், ஒரு பாசுரத்தில் சொல்கிறார்.
Interpreations of the said paasuram may vary . But Vaishavas believe the pasuram refers to the successful encounter between the two saints and the change of poor estimate on Azwaar in the minds of Savites then.
I quote this story to say they are contemporaries. In the line Azhwaar, Periyazhvaar and his daughter come ahead, 100 of years ago to the last Azhwar.
How comes Sambanthar and Periyaazhvaar were contempories?
நான்கு வகைக்கவிதைகளில் ஒன்று சித்திரக்கவி. இக்கவியைக் காண்பது அரிது. இதன் சிறப்பு இக்கவிதையை பிரிண்ட் பண்ணிப்போட்டுப்பார்த்தால் (அல்லது எழுதிப்பார்த்தால்) ஒரு சித்திர வடிவு வரும். அவ்வடிவினால் அது சித்திரக்கவி எனவழைக்கப்படுகிறது. ஆழ்வார் யாத்த ஒரு பாசுர நூலில் உள்ள நீண்ட பாசுரங்கள் அவ்வடிவைத்தரும். வாங்கிப்பாருங்கள். எனவே நாலுகவிப்பெருமான்.
தமிழறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
BS: When I said “Madurai is known the world over for Meenakshi temple” it was to reflect the contemporary status. That statement did not denigrate the reputation of KUDalazhagar temple.
You say,
>>பெரியாழ்வார் வந்து போன மதுரையில் மீனாட்சி கோயிலே இல்லை.<>இருந்திருந்தாலும் அது ஒரு சிறு தெய்வக்கோயிலாகத்தான் இருந்திருக்க வேண்டும்.<<
Does not matter whether it was small or big. By your own admission the AzhwArs sang about the divya dEsams long before they were built. They sang about the place where the lord dwelt rather than the lofty structure of the temple. So Sambhandar also could have sung about the shrine (rather than the structure). It was the religious faith that Sambhandar tried to establish not the temple per se. If it was a small shrine then it does not diminish the reputation of the place.
உலகப்புகழ் என்றால் இந்துக்களையும் தாண்டி, இந்தியாவையும் தாண்டி என்ற பொருள் தரும். மதுரை மீனாட்சி ஒரு சிறு கோயிலாக இருந்திருந்தால், சம்பந்தர் பாடியும்கூட அதன் புகழ் பரவியிருக்காது. ஏனென்றால் சைவ சமயக்குரவர்கள் பாடிய சிவன் கோயில்கள் ஏராளம். அவற்றுள் பெரும்புகழ் ஒரு சிலவற்றுக்கே. ஏராளமான கோயில்கள் தீவிர சைவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்கள்தான் அங்கு சிரமமெடுத்துச் சென்றுவருவர். இப்படி பாடல்பெற்ற கோயில்கள் கூட கவனிக்கப்படாமலிருக்கிறதே என்று பல சைவர்கள் வருந்துவதை யான் கேட்டதுண்டு.
வைணவக்கோயில்கள் ஆழ்வாரொருவரோ பலரோ பாடிவிட்டால் புகழ்பெற்றுவிடா. அவர்கள் வருகையால் பாடலால் அவை திவ்ய தேசங்கள் என அழைக்கபடும் நிலைக்கு உயர்ந்தன என்பதே. அவர்கள் பாடிய பல திவ்ய தேசங்களில் நிலையே இன்று மோசம். எடுத்துக்காட்டாக பலவற்றைக்காட்ட முடியும். அவர்கள் பாடிய ஒரு சிலவே பெரும்புகழை அடைந்தன. ஆனால் அவை அவர்கள் பாடியதனால் மட்டுமன்று. எ.கா. திருவரங்கம். திருப்பதி.
108 திவ்யதேசங்களிள் இரண்டு இப்பூவலகில் இல்லை. மற்றவை உண்டு. அவற்றும் 90க்குமேல் தமிழகத்தில் அனைத்துக்கும் தங்கள் வாணாளுக்குள் போய் வரவேண்டும் என நினைப்பது வைணவர் மட்டுமே. மற்ற இந்துக்களுக்கு அவை யாவை என்று கூட தெரியாது.
எனவே புகழ் சம்பந்தரால், ஆழ்வாரால் எனபது முறையே சைவருக்கும் வைணவருக்குமே. மற்றவருக்கு வேறுபல காரணிகள்.
A portion of my comment in the above got lost in the transmssion.
I took exception to this statement of BS >>>>பெரியாழ்வார் வந்து போன மதுரையில் மீனாட்சி கோயிலே இல்லை.<<
I said before Sambhandar's time is early to mid 7th century. PeriyAzhwAr's time is generally recognized as 9th century CE. Sambhandar sang about AlavAy and angayarkaNNi (aka MeenAkshi). So the statement of BS quoted above is not only presumptuous but totally wrong too.
>>மங்கையர்க்கரசியார் (கூன்பாண்டியனின் மனைவி), அவனின் படைத்தலைவர் பரஞ்சோதியும் இருவரும் சம்பந்தரை அழைத்துவந்து மன்னனைச் சைவத்துக்கு மாற்றியதுமட்டுமன்றி, சமணர்களை அழிக்கவேண்டும் எனத் திட்டம் தீட்டி, சமணர்கள் ஒழிக்கப்பட்டார்கள்<<
There is an inaccuracy in the above statement by BS. It was the chief minister, KulachchiRaiyAr, of the PANDya king KoonpANDiyan (aka ninRa seer neDumAran) and mangaiyarkkarasi who sought Sambhandar's visit to Madurai. ParanjOthi was the commander-in-chief of Narasimhavarman, the pallava king. His name does not belong in the koonpANDiyan episode. Please pay attention to appropriate facts.
I am not an expert in Saiva lore. You are correct.
//சிந்தனைக்காக, சிந்தனையைப்பெருக்க, இங்கு வருகிறோம். சாமி கும்பிட இல்லப்பா. கண்ணை மூடிக்கொண்ட பக்தி போலி. அவன் ரொட்டித்துண்டுக்காக மதம் மாறுவான்.//
உயர்திரு BS அவர்களே,
எந்த ஒரு ஆலயத்திற்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குருத்துவாராவுக்கோ செல்பவர் தொழுவதற்குத்தான் செல்கிறார்.
எல்லையற்ற அருளுள்ள பரம்பொருளை வணகிப்போற்றவே செல்கிறார்.
அந்த பரம்பொருளை அடையவேண்டும், அப்பரம்பொருளை அறியவேண்டு என்றுமுற்படும்போதுதான் ஞானம் பிறக்கிறது, ஞான ஆய்வும் ஏற்படுகிறது.
ஞான ஆய்வு P.hD பட்டத்திற்குப் படிப்பதைப் போன்றது. ஆய்வு செய்யுமுன் இளநிலை அறிவு பெறவேண்டும். ஒன்று, இரண்டு என்று எண்ணக் கற்றுக்கொண்டபிறகே, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், அல்ஜிப்ரா, எல்லாம்.
பணத்துக்காக சமயம் மாறுபவன் அறியாக்குழந்தை. அவன்மீது நாம் பரிதாபப்படத்தான்வேண்டும்.
பணத்தைக்கொடுத்து மதம் பாற்றுகிரவர்கல்மீதுதான் உங்கள் சினம் செல்லவேண்டும். அதை முதலில் தடுத்து நிறுத்த முயலுங்கள். பின்னர் குழந்தையை முனைவராக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.
திண்ணையின் கொள்கைகளைப்பற்றி விளக்கம் கொடுக்கிறீர்களே, தாங்கள் திண்ணை ஆசிரியர் குழுவில் ஒருவரா என்று தெளிவு படுத்தினால் நன்று. அப்படி நீங்கள் ஆசியர் குழுவில் ஒருவர் என்றால் பின்னூட்டும் பகிரும் உரிமை உங்களுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எதைப்பகிர அனுமதிப்பதும், தடுப்பதும்தான் அவர்கள் உரிமை.
திண்ணை ஆசிரியர் குழுவில் பதவி வேண்டாம். சம்பளம் கொடுக்கமாட்டார்கள். நான் எங்கேயும் பணத்தைத் தேடுபவன்.
திண்ணையில் வரும் மதக்கட்டுரைகளும், மதம் பற்றிய இதழ்களில் வரும் மதக்கட்டுரைகளும் வெவ்வேறு அடிப்படையில் போடப்படுகின்றன.
ஒரு சில இந்து மத மாதாந்திரி இதழ்களுக்கு நான் சந்தாதாரர். அவற்றில் வரும் கட்டுரைகள் சாமியார்கள்; மத அறிஞர்களால் எழுதப்படுகின்றன. அவர்கள் அனைவரும் அம்மதம்காட்டும் கடவுளில் ஆழ்ந்த நம்பிக்கையோடும் பக்தியோடும் எழுதுவர். அங்கு போய்ப்படிப்பதன் நோக்கம் நமக்கும் அப்பக்தி வருவதற்கே. ஞானத்தால் வருவதது.
ஒரு முருக பக்தர் திருப்புகழை ஏன் படிக்கிறார்? தன் முருக பக்தியை ஆழப்படுத்த. ஆனால் அதே திருப்புகழை பக்தியில்லா ஒருவரும் படிக்கிறார் அவர் ஏதோ ஆராய்ச்சி மாணவர். 17ம் நூற்றாண்டில் தமிழில் நிலையென்ன? அருணகிரிநாதர் ஏன் கொடுந்தமிழையே பிடித்துக்கொண்டார்? ஏதாவது வரலாற்றுக் கரணியங்கள் இருந்தனவா? (அக்கரணியங்களைத் தெரிந்து கொள்ள சதாசிவப்பண்டாரத்தாரின் 17ம் நூற்றாண்டு; தமிழ் இலக்கிய வரலாறு: (அண்ணாமலைப் பலகலைக்கழகம்) என்ற சிறு ஆராய்ச்சி நூலைப்படிக்கவும்)
இப்படி ஒரு ஆராய்ச்சியாளர் திண்ணையில் எழுதுகிறார்: அதைப்படித்துவிட்டு ஞானவேல் முருகனுக்கு அரோஹரா: புல்லரித்துப்போனேன் என்றால் பக்தி பகல்வேஷமான கதையன்றோ! யாருக்காக பக்தி? தனிமனிதனுக்கா? இல்லை இரஜனி தில்லுமுல்லுவில் முருக பக்தன் வேடம்போட்ட மாதிரி உங்கள் பாஸை ஏமாற்றவா?
திண்ணை ஒரு மதம் சார்ந்த இதழன்று. பொது இதழ். அனைவருக்குமே. தமிழ் மட்டும் தெரிந்தால் போதும். தமிழனாக இருக்கக்கூட அவசியமில்லை.
இங்கு சாமியார்கள் வந்து எழுதுவதில்லை. மத அறிஞர்களும் எழுதுகிற மாதிரித் தெரியவில்லை. எனவே குண்டக்க மண்டக்கா என மதக்கட்டுரைக்கருத்துகள் போகின்றன. இவற்றைப்படித்து எனக்கு பக்தி வந்தது என்று கந்த வேல் முருகனுக்கு அரோஹரா; அல்லது அல்லேலுயா? அல்லது அல்லோஹோ அக்பர் என்று எழுதுவது பக்தியன்று; பக்தி வேஷம். ஒரு நாடகம்.
திண்ணைக்கட்டுரைகள் சிந்திக்கவே. சாமி கும்பிட கோயிலுக்குப் போங்களேன்.
BS:
You say, >>”மீனாட்சி என்றுமே மாடர்ன் தான், ஓல்டாக மாட்டாள் :-)<<
There is a blatant smirch in your face when you write it, as though you have a vindictive venom in your keystroke. Not getting the heritage status from UNESCO for Meenakshi temple is not the end of the world. Meenakshi is still Meenakshi. I suggest you start a campaign to get "KUDalazhagar" temple to get the heritage honor not awarded to Meenakshi. PerumAL will be very proud of you.:-)
BS says >>ஆழ்வார்களில் கடைக்குட்டி ஆழ்வாரெனெ அழைக்கப்படும் திருமங்கையாழ்வாரும் சம்பந்தரும் சமகாலத்தவர் என்பது வைணவ சம்பிரதாயத்து நம்பிக்கை.<<
நம்பிக்கை என்பது நம்பிக்கை மட்டும் தான. ஆதாரமில்லாமில் நம்பிக்கை உண்மை ஆகாது. The episode describing the encounter between sambhandar and tirumangai aazhwaar is just hearsay in vaishnava smapradhayam. The vaishnavite scholars interpret certain pAsurams accordng to their whims. You can't draw historical certainty from such vyAkyAnams. You yourself mentioned the time of AzhwArs as "ஆழ்வார்கள் காலம் 9ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது." Also a credible vaishnava site (http://sriramanujar.tripod.com/periya.html) says, "
During those times (9 th century A.D?), there was a king by name "VallabhadEvan" ruling that area (Then madurai)".
You cannot "forum-shop" in order to suit your polarized view, quoting the interpretation of a pAsuram to make a point while ignoring other historical data regarding the times of the AzhwArs. I have also read the episode of the encounter between sambhandar and tirumangai but as you say elsewhere those accounts are all a mixture of incidents vastly exaggerated and not necessarily based on historical evidence.
Sambhandar's time has a historical basis in that he was a contemporary of appar who was a contemporary of Mahendravarman of the Pallava dynasty in the early 7th century. By contrast the AzhwArs came later than the period of Mahendravarman. Pl don't distort history with some pious interpretation of a pAsuram to warp time.
Koon PAndiyan's time is 640-670 CE. Pl visit the following sites for the times.
http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312442.htm
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF
One last caution: you cannot rely on religious stories to establish historical incidents because those stories were intended to create an awe in the faithful folks and to promote devotion. To that end those stories are self-promoting.
//நம்பிக்கை என்பது நம்பிக்கை மட்டும் தான. ஆதாரமில்லாமில் நம்பிக்கை உண்மை ஆகாது.//
On the spot.
குருபரம்பரா பிரபாவம் வைணவர்களுக்காக பின்பழகிய பெருமாள் ஜீயரால் யாக்கப்பட்ட பனுவல். அவர்களின் நம்பிக்கையையும் பக்தியையும் ஆழப்படுத்தலே அதன் முதல் நோக்கம். அதே நேரத்தில் ஆழ்வார்களின் திவ்ய சரிதங்களை முதலில் சொல்ல நூல அதுவே. ஏனெனில் அவர்களுக்குத்தான் அவர்கள் ஆழ்வார்கள். மற்றவர்கள் அப்பன்னிருவரையும் வெறும் பெருமாள் பக்தர்களாகத்தான் பார்த்தார்கள். எனவேதான் //பெரியாழ்வாரை கூட்டிக்கொண்டு வா// என்று எப்படி பெருமாள் சொல்வார் என்று வளவ துரையனிடம் கேட்டேன். பதிலில்லை.
நான் எழுதிய சம்பந்தர்- ஆழ்வார் நிகழ்ச்சியை நீங்கள் தாராளமாக உதாசீனம் பண்ணிக்கொள்ளலாம்.
குருபரம்பரா பிரபாவம் சொல்பவைகளை வரலாற்றைச் சான்றுகளாக வரலாற்றாயவாளர்கள் எடுப்பதில்லை. அதில் காட்டப்படும் ஆழ்வார் வரிசைப்பற்றிகூட ஆய்வாளர்களிடையே கடும் கருத்துவேறுபாடு நிலவுகிறது. வைணவர்கள் மட்டும்தான் திருமங்கையாழ்வாரை கடைக்குட்டி ஆழ்வாரென்பார். வரலாற்றாயவாளர்கல்ல். எனவே, வைணவ சம்பிரதாய நம்பிக்கை என்றேன். எனினும், சில ஆய்வாளர்கள் அதில் சொல்லப்பட்டிருக்கிறது என்று கோடிட்டுக்காட்டிச் செல்வர். திருமங்கையாழ்வார் ‘வேல்’ பாசுரத்தை பலரும் பலவிதமாக எடுப்பர் என்றேன்.
எல்லாவற்றையும் நிதானமாக படிக்கவும். நான் அறிவாளி உன்னைவிட என்ற தோரணையில் நான் எழுதுவது கிடையாது. படித்ததை, தெரிந்ததை பகிர்கிறேன்.
Scanning the history of PANDya kings from 575 CE to 966 CE, I do not see the mention of the king Vallabadevan either with that name or other aliases. This leads one to question the credibility of the story of vallabadevan seeking the exposition of religious doctrine from PeriyAzhwAr. SampradAyams need not have any historical basis and they are believed without any question. You see Faith is something you don’t question.
//You see Faith is something you don’t question.//
இங்கு போடப்படும் மதக்கட்டுரைகளை விமர்சிக்க வேண்டும் என்று அரிசோனன் என்பவரிடம் எடுத்துச்சொல்லிக்கொண்டிருக்க, கண்மூடித்தனமாக நம்ப வேண்டுமென்று நான் சொல்வதாக புதுக்கதை சொல்கிறீர்களே எப்படி?
அந்தந்த மதக்காரர்களுக்கு அவர்கள் மதகுருமார்கள் எழுதிவைத்திருக்கிறார்கள். அவர்கள் அவற்றை நம்புகிறார்கள். இங்கு போடப்பட்டால் நாம் விமர்சிக்கலாம். குருபரம்பரா பிரபாவம் இப்படிச் சொல்கிறது. எல்லாரும் நம்ப வேண்டுமென்றும் வைணவர்கள் இங்கு வந்து அழிச்சாட்டியம் பண்ணமுடியாது. ஏற்கனவே அப்பிரபாவம் சொன்ன ஆழ்வார்கள் கால வரிசையை வரலாற்றறிஞர்கள் பலர் ஏறகவில்லை என்றேனே படிக்கவில்லை?
வரலாற்றுச்சான்றுகள் இல்லை என்பதையும் வரலாற்றுச்சான்றுகளை வைத்தே நிரூபிக்கவேண்டும். மொட்டையாக இல்லையென்றால், உங்களுக்கும் நம்புவர்களுக்கும் வேறுபாடென்ன? வல்லபன் இல்லையென்று எப்படிச்சொல்கிறீர்கள்? எந்த ஆய்வாளர் அப்படிச்சொல்லியிருக்கிறார்?
வல்லபதேவன் என்பவன் பிற்காலப்பாண்டியர்களுள் ஒருவன். அவன் காலத்தில் பாண்டிய நாடு நன்கு இருந்தது. பாண்டிய மன்னர்கள் வரலாற்றை இன்னொரு முறைகூர்ந்து படிக்கவும். வல்லபன் வருவான். இல்லையென்றால் சொல்லவும். நான் விளக்குகிறேன்.
ஒரேயொரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம் என்பதுதான் தலைப்பு. அப்பாசுரம் திருமங்கையாழ்வாரது என்றும் திருமழிசையாழ்வார் பாசுரமொன்றில் வரும் கூடல் என்ற சொல் இத்திவ்ய தேசத்தைக் குறிக்காதென்றும் விளக்குகிறார். திருமழிசையாழ்வார் பாசுரம் இக்கோயிலைபற்றியதா இல்லையா என்பது அவரவர் பார்வைக்கு. நாம் வளவ துரையன் சொல்வதை ஏற்று திருமங்கையாழ்வார் பாசுரம் மட்டுமே என்று எடுத்தாலும், வளவ துரையன் இப்படியும் சொல்கிறார்…
//“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாண்டு’ என்று பல்லாண்டு பாடினார். இந்தத் திவ்ய தேசத்தில் பெரியாழ்வார் அருளிச் செய்த பல்லாண்டுதான் எல்லாத் திவ்யதேசங்களிலும் முதலில் பாடுவதாக அமைந்துவிட்டது.//
ப்ளீஸ் நோட்: //இத்திவ்ய தேசத்தில் பெரியாழ்வார் அருளிச்செயத பல்லாண்டு…//
ஆக, கூடழகரின் மேல் பாடப்பட்டதுதான் பல்லாண்டுப்பாசுரங்கள் 12 என்பது உண்மைதானே? அதனுடன் திருமங்கையாழ்வாரின் ஒன்று. மொத்தம் 13. இல்லையா?
அப்படிப்பார்த்தால் எப்படி தலைப்பு பொருத்தம்?
//திண்ணையில் வரும் மதக்கட்டுரைகளும், மதம் பற்றிய இதழ்களில் வரும் மதக்கட்டுரைகளும் வெவ்வேறு அடிப்படையில் போடப்படுகின்றன.//
இது BS என்ற ஒரு தனிப்பட்ட மனிதரின் கருத்து. திண்ணை ஆசிரியர் குழுவில் இருந்து எவரும் இட்ட கருத்து அல்ல. எனவேதான், திண்ணையின் சார்பில் தாங்கள் எழுதவேண்டாம் என்று குறிப்பிட்டேன்.
//திண்ணைக்கட்டுரைகள் சிந்திக்கவே. சாமி கும்பிட கோயிலுக்குப் போங்களேன்.//
மேலே நான் கொடுத்திருக்கும் பதிலைப் படித்துக்கொள்ளவும்.
உங்கள் கருத்தை மட்டுமே எழுதுக. திண்ணையின் வழக்காடுனராகச் (attorney)யாகச் செயல்படவேண்டாம்.
மீண்டும் சொல்கிறேன். உங்கள் கருத்து உங்கள் கருத்தே! “திண்ணை”யுடைய கருத்து அல்ல. எனவே உங்கள் கருத்தைமட்டுமே எழுதுக. திண்ணை இப்படிப்பட்ட இதழ் என்று பரிந்துரை செய்யவேண்டாம். தேவை இருந்தால் அவர்களே எழுதுவார்கள்.
என் கருத்தைதான் எழுதியாச்சே. பின்னென்ன என் கருத்தை மட்டுமே எழுதுக.
என் கருத்து மீண்டும்: திண்ணையில் வரும் மதக்கட்டுரைகளை நம்மைச் சிந்திக்கவைக்க. பக்தியென்றால் விமர்சனம் பண்ணக்கூடாது. ஆன்மிக மலரில் போடப்படும் கட்டுரைகளை அம்மதத்தைச்சேர்ந்தவர்கள் பக்திக்காகப் படிப்பார்கள். அவர்களுக்குத்தான் அவை. அங்கு போய் ஆராய்ச்சியாளர்கள் அல்லது அம்மதத்தைச் சேராதவர்கள் விமர்சனம் பண்ணமாட்டர்கள். அஃது அதிகப்பிரசிங்கத்தனம்.
இங்கு விமர்சனம் பண்ணலாம். அதிகப்பிரசிங்கித்தனமாகாது. பக்திக்காக மட்டுமே என்றிருந்தால் விமர்சனங்களை என்றோ தடுத்திருப்பார்கள். இசுலாம், கிருத்துவம், இந்து பற்றிக்கட்டுரைகள் ஏராளம் போடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அம்மதத்தார் மட்டும் படித்துப்பரவசமைடையல்ல. எம்மதத்தவரும் படிக்க. விமர்சிக்க, கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் வைக்கலாம். வெட்டியும் ஒட்டியும் ஆதாரத்தோடு பேசலாம்.
இதுதான் ஜனநாயக மேடையின் பண்பாகும். திண்ணையொரு ஜனநாயக மேடை என்பதை திண்ணை குழவினர் வந்து சொல்லால்தான் நம்புவேன் என்றால் எப்படி? படித்துப்பார்க்கவருக்கு புரியுமே? கண்ணளக்காததா கையளக்கும்? என்பார்கள் என் அம்மா. வாழ்க்கையில் பல கட்டங்களில் அதுதான் உண்மை. அதிலொரு கட்டம்தான் இது.
//மதுரை மீனாட்சி ஒரு சிறு கோயிலாக இருந்திருந்தால், சம்பந்தர் பாடியும்கூட அதன் புகழ் பரவியிருக்காது.//
இது சரியான கருத்து அல்ல. காசி விசுவநாதர் கோவில் மிகச் சிறியதே! இருப்பினும் அதன் புகழ் மிகப் பெரியது.
1987க்கு முன்னர் பிள்ளையார்பட்டி கோவிலில் ஈ-காக்கை இருக்காது. இப்பொழுது கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. எனவே, கோவில்களில் கூட்டம் வருவது, புகழ் பெறுவதும் பக்தர்கள் நம்பிக்கையே, அவர்கள் நம்பிக்கையின் பரப்புதலே! கோவிலின் அளவுக்கும் அதன் புகழுக்கும் தொடர்பே இல்லை!
நான் எழுதியதில் the subordinate clause தான் முக்கியம். (சம்பந்தர் பாடியும்…)
சிறுகோயிலாக இருந்தாலும் அளவில் பெரியகோயிலாக இருந்தாலும் ஒரு கோயிலின் புகழ் உலகம் முழுவதும் பரவ அங்கு போய் சைவசமயக்குரவர்கள் – சைவக்கோயிலில்- அல்லது ஆழ்வார்கள் போய் – வைணவக்கோயில்களில் – பாடியிருந்ததால் போதும் என்பது சரியன்று. அதற்கு பல்வேறு கரணியங்கள் வேண்டும் என்று எழுதியிருந்தேன். வெறும் அளவை மட்டும் சொல்கிறீர்களே? திருக்குறுங்குடி ரொம்ப ரொம்ப பெரிசு அளவில். குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் ரொமப ரொம்ப சிறிசு. முன்னதில் எவ்விழா எப்போது எதற்காக என்றே மக்களுக்குத்தெரியவில்லை. விளம்பரம் போட்டுப்போட்டுப்பார்க்கிறார்கள். முததாரம்மன் தசராவுக்கு லட்சணக்கணக்கில் மக்கள்: கால்நடையாக, மாட்டுவண்டியில், ட்ராக்டரில் பேருந்தில். ஏன் ஏன்: கரணியங்கள் பல. ஆழ்வார் – ஒருத்தரன்று, பலர்- திருக்குறுங்குடி நம்பியை பாடிவிட்டார்கள். என்ன பலன்?
தேவாரமும் திருவாசகமும் பாடப்ப்பெற்ற கோயில்கள் பலபல சீந்துவாரற்றுக்கிடக்கின்றன; ஆழ்வார்கள் பாடல் பெற்ற கோயில்கள் அழுக்கேறிக்கிடக்கின்றன என்று நான் எழுதியதை ஏன் மறந்தீர்கள்.
மீனாட்சி கோயிலுக்கு வரும் கோடிக்கணக்கான யாத்ரீகள் வடமாநிலங்கள், தென் மாநிலங்களிலிருந்து நாடோறும் வருகிறார்கள். தமிழகத்து கிராம ஜனங்களும் ஏராளம் வந்து போகிறார்கள். இவர்களெல்லாரும் சம்பந்தர் வந்து பாடிவிட்டார்; எனவே வருகிறோம் என்று வரவில்லை. இதுதான் நான் சொன்னது. இதே நிலைதான் ஆழ்வார்களுக்கும்.
சாமிக்குக் கூட விளம்பரம் வேணும். மனிதன் விரும்பினால் கோயில். இல்லாவிட்டால் ஹெரிட்டேஜ் சைட்.
இதைப்புரிந்தால் என்னிடம் வாதத்துக்கே வரவேண்டிய அவசிமிருக்காது.
>>ஆக, கூடழகரின் மேல் பாடப்பட்டதுதான் பல்லாண்டுப்பாசுரங்கள் 12 என்பது உண்மைதானே? அதனுடன் திருமங்கையாழ்வாரின் ஒன்று. மொத்தம் 13. இல்லையா?<<
திருமங்கை பாடியது கூடலழகர் மீது. பல்லாண்டு கூடலழகர் மேல் பாடப்பட்டதா இல்லை விஷ்ணுவின் மேல் படப்பட்டதா? பல்லாண்டு பாசுரங்களில் "கூடலழகர்" என்ற வார்த்தை இருக்கிறதா? Pl don't tell me koodalazhagar is vishnu and vishnu is koodalazhagar just as they say Rama is vishnu and Krishna is vishnu. When the identities of the avatarams are well known and they lack the omnipotence of the supreme lord, you cannot equate them. It is generally believed by vaishnavites that Lord VaTapatrasAyee appeared in vishnucttar's dream and asked him to go to the king's court and expound the essence of vaishnavism. He expounded that Lord Narayana was the supreme lord. Who can vouch that the pallANDu was sung on koodalazhagar? Did Koodalazhagar appear on the aerial scene when PeriyAzhwAr was taken in a procession in Madurai or was it Lord Narayana/Vshnu? Pl don't take the slippery path by saying they are one and the same. That will be circular logic—such as "I know A, A knows B, and so I know B". Logical fallacy, agree?
மஹாகவிக்கு வளவ துரையனின் சொற்களே பதில்:
கட்டுரையிலிருந்து எடுத்துப்போடப்படுகிறது இங்கே:
//பெருவியப்படைந்த பாண்டிய மன்னன் பெரியாழ்வாரைப் புகழ்ந்து பணிந்தான். மேலும் அவரை யானைமேல் ஏற்றித் தான் அவரைப் பின்தொடர்ந்து வந்தான். இக்காட்சியைக் காண்பதற்காகக் கூடலழகர் தம் பிராட்டியான திருமகளோடு கருட வாகனத்தில் விண்ணில் எழுந்தருளினார். பெருமாளையும் பிராட்டியையும் ஒரு சேரக் கண்ட பெரியாழ்வார்,
”எம்பெருமானே! பெருமாளே! இந்தக் கலியுகத்தில் தாங்கள் இவ்வாறு காட்சி அளிக்கலாமா? தங்களுக்குக் கண்ணேறு பட்டுவிடுமே”
என்று எண்ணிப் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாண்டு’ என்று பல்லாண்டு பாடினார். இந்தத் திவ்ய தேசத்தில் பெரியாழ்வார் அருளிச் செய்த பல்லாண்டுதான் எல்லாத் திவ்யதேசங்களிலும் முதலில் பாடுவதாக அமைந்துவிட்டது.//
எனவே, வளவ துரையனிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். அவர்தான், விண்ணில் காட்சி தந்தது கூடலழகரும் மதுரவல்லித்தாயாருமே (கூடலழகரின் மனைவியின் திருநாமம் அது) என்கிறார். பல்லாண்டு அவர்களுக்குத்தான் என்கிறார்.
என்னிடம் கேட்டால் பதில் என்ன தெரியுமா?
உங்கள் எழுத்துக்கள் வைணவத்தைப்பற்றிய அறியாமையைப் பறை சாற்றுகிறது. உங்களிடம் விளக்கிச்சொல்லி யாதொரு பயனுமில்லை. இந்த சைவர்கள் சகவாசமே வேண்டாம். (I mean internet saivars) நம்மையும் கெடுத்துவிடுவார்கள் என்பார்கள் சிலர்.
>>உங்கள் எழுத்துக்கள் வைணவத்தைப்பற்றிய அறியாமையைப் பறை சாற்றுகிறது. உங்களிடம் விளக்கிச்சொல்லி யாதொரு பயனுமில்லை. இந்த சைவர்கள் சகவாசமே வேண்டாம். (I mean internet saivars) நம்மையும் கெடுத்துவிடுவார்கள் என்பார்கள் சிலர்<<
Wow, forceful words! No apologies or regrets for having made that statement, BS?
I am afraid BS is resorting to picking up the marbles, throwing them around and departing from the scene when he does not have a legitimate response. When anger rules, reason goes out the window. That is what is happening with BS. I will concede your credentials as an authentic (and perhaps arrogant) vaishnavite but I do not like to be dismissed as an "internet saivar". That indicates a shallowness on your part. I asked you to tell me if there is a mention of "Koodal" or "koodalazhagar" in any of the 12 pAsurams of pallANDu. If you can't answer in the affirmative, it is better to demur rather than get angry. All other AzhwArs when they sing about a particular kshetram or deity, they mention that name specifically in one or more pAsurams.
My point is that PeriyAzhwAr sings pallANDu only to Lord Narayana and not to koodalazhagar since he never mentions "koodal" or "koodalazhagar" in any of the pallANDu pAsurams. In pAsuram # 10 by periyAzhwAr, this word " திருமதுரை" appears once. Even there it refers to Mathura on the banks of Yamuna and not Madurai in the south. I suggest you go read that pAsuram and comprehend the gist of that pAsuram (it is about Krishna who goes to Kamsan's court and the subsequent acitvities)
I would be happy to receive your thoughtful, reasonable, but not vituperative response presenting evidence of Koodal in pallANDu.
While disagreeing with many of VaLava Dhurayan's premises and statements, you want to quote him when it suits you. How do you know that statement "இக்காட்சியைக் காண்பதற்காகக் கூடலழகர் தம் பிராட்டியான திருமகளோடு கருட வாகனத்தில் விண்ணில் எழுந்தருளினார்" authenticates the appearance of Koodalazhagar? Isn't it another vaishnava sampradAyam to imagine what we want to imagine? The entire pallANDu is generic dealing with various avatArs of Vishnu (there is mention of Krishna, Narasimha, among others) in pallANDu pAsurams.
The ball is in your court now. It is up to you to keep your cool and present proper evidence without showing your temper.
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றமன்ன,*
பாழியம் தோளும் ஓர் நான்கு உடையர்* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகியவா. Periya tirumozhi 9.2.5 NDP 1762
In the single pAsuram by tirumangai AzhwAr on Koodal, you can see the words கூடலும் and அழகியவா which indicate that he is specifically singing about koodalazhagar.
பேராசிரியர் வளவ துரையன் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். விண்ணில் காட்சியளித்த கூடலழகரையும் அவர் துணைவியார் மதுரவல்லித்தாயாரையும் கண்டு பல்லாண்டு பாடினார் பெரியாழ்வார் என்றெழுதியவரே அப்பல்லாண்டுப் பாசுரங்கள் கூடலழகருக்கா இல்லையா என்பதை மஹாகவி என்ற திண்ணைவாசகருக்கு விளக்கவும்.