திரு.க.பூரணச்சந்திரன் அவர்களுக்கு 2016 ஆண்டு மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி

Spread the love
திருச்சியை சேர்ந்த பிஷப் ஹீபர் கல்லூரி முன்னாள் தமிழ் பேராசிரியர் திரு.க.பூரணச்சந்திரன் அவர்களுக்கு 2016 ஆண்டு மொழி பெயர்பாளருக்கான  சாகித்ய அகாதெமி மூன்று தினங்களுக்கு முன் அறிவிக்கப் பட்டது. அதைப் பற்றிய செய்தியும் தி ஹிந்து தமிழ் நாளிதழில் இன்று வந்துள்ளது. இத்துடன் அதற்க்கான கோப்பு இணைக்கப் பட்டுள்ளது. அவரை பற்றிய முழு விவரங்களுக்கு பின்வரும் இணையதளங்களில் பெறலாம்.
நன்றி.
-செவ்வேள்
www.poornachandran.com

அறிமுகம்

அறிஞர் திரு.க.பூரணச்சந்திரன் அவர்கள், திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். வேலூர் ஊரிசுக் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டமும், தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றவர். ஜெர்மன், வடமொழி, பிராகிருதம் ஆகியவற்றில் அடிப்படைத் தேர்ச்சி உண்டு. இவை யாவும் அவருடைய ஆய்வுகளுக்குப் பெரும் உதவியாக அமைந்தன. மார்க்சிய சிந்தனையுடன் கூடிய நல்ல திறனாய்வாளர். இலக்கியக் கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார். இதழியல் துறையிலும் பணியாற்றி, அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார்….

Series Navigationசுவடுகள்