‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா

Spread the love

எனது 7 ஆவது நூலான ‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா 2014, ஜுன் 07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இல 58, தர்மாராம வீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

பூங்காவனம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி முன்னாள் உபபீடாதிபதி தாஜுல் உலூம் கலைவாதி கலீலின் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ஊடக தகவல் ஒளிபரப்பு அமைச்சின் மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களும், சிறப்பு அதிதிகளாக டாக்டர் புரவலர் அல்ஹாஜ் ஏ.பீ. அப்துல் கையூம் (ஜே.பி., உளவளவியலாளர் யூ.எல்.எம். நௌபர், திரு. திருமதி. சிரிசுமண கொடகே, திருமதி தேசமான்ய மக்கியா முஸம்மில் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நூலின் முதற்பிரதியை டாக்டர் புரவலர் அல்ஹாஜ் ஏ.பீ. அப்துல் கையூம் (ஜே.பி.) அவர்கள் பெற்றுக்கொள்வார். தலைமை உரையை தாஜுல் உலூம் கலைவாதி கலீலும், ஆசியுரையை டாக்டர் எஸ். முருகானந்தனும், கவி வாழ்த்தை கவிஞர் என். நஜ்முல் ஹுஸைனும் நிகழ்த்த, நூல் விமர்சன உரையை கலாபூஷணம் மாவனெல்ல எம்.எம். மன்ஸுரும் ஏ நிகழ்த்தவுள்ளனர்.

உங்கள் யாவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.!!!

Series Navigation