தீட்சண்யம் 

 

 
க.தூயவன்
 
பெருமரம் ஒன்றை
நனைக்கும்வரை அது மழையாகத்தானிருந்தது
கிளைதொட்டு
இலைதொட்டு
மலர்தொட்டு
காம்புதொட்டு
கனிதொட்டு
நுனிதொட்டு
பச்சையத்தில் வழிந்தோடி 
வேர்தொட்டு
மண்தொட்ட பிறகு
சர்வ நிச்சயமாய்
அது மழையாய் மட்டும் இல்லை..
 
க.தூயவன்
Series Navigationகாற்றுவெளி கார்த்திகை 2021நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா