தீப்பிடித்த இரவில்

Spread the love

 

ஆ. ஸ்டாலின் சகாயராஜ்.

 

கும் இருட்டில்

ஏதோ சண்டை

முடிந்த போர்க்களம்

 போலொரு அமைதி

 

தட தடவென கால்கள்

 நடநடவென படியில்

மொட்டை மாடி முதுகில்

 

நினைவுக்கு வந்ததோ

இந்த நிலவு…

யாரை பிரிந்து தேடுகிறது

பால் ஒளியை ஊரெல்லாம்

பூசிக்கொண்டு…

 ஐயம்?

 

“ஊரெல்லாம் அமைதி

யாரெல்லாம் வரீங்க “

ஆள் சேர்த்து

மரத்தை சுத்தும்

 இரவின் பட்டாம்பூச்சி

வொவால்கள்

 

அருகே தீக்குச்சி

பற்றவைத்த ஒளி

சுற்றுவதை நிறுத்தி

மரத்தில் மறைந்துகொண்டது

 

என்னவாக இருக்கும் ?

 

கருகிய வாடை

சிகரெட் புகை

பறந்து சென்றது

 

யாரோ  எவரையோ

 எறித்துக்கொண்டிறுக்கிறாரென்று

சொல்லி

நகரும் போது

காது கேட்க வில்லை

 

என்னவாக இருக்கும்

மனதில் ஐயம்

 

காய்ச்சல் அறிகுறி போலே

செய்தி சொல்லி

சிரித்துக் கொண்டிருக்கிறது

தலைக்கு மேலே நிலா….

 

விலகள், விளக்கும் ஒரு விளக்கம்

   அதை ஏற்கும் நாளில் புது குழப்பம்

 

 

Series Navigationரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Giant Geo-Reactor) (கட்டுரை -1)