துணைவியின் இறுதிப் பயணம் – 11

துணைவியின் இறுதிப் பயணம் – 11
This entry is part 5 of 9 in the series 3 பெப்ருவரி 2019

 

 

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

 

++++++++++++++

 

[36]

என் கதை

 

எழுதி, எழுதி

எழுதிக் கொண்டே எழுதி,

எழுதிய பின்னும்

எழுதி,

இன்னும் உருகி எழுதி

என்றும் எழுதி

இப்பிறவி பூராவும் எழுதி

எழுதி வந்தாலும்,

ஆயுள் தேய்ந்து மாய வாழ்வு

அத்தமனம் ஆனாலும்,

என் எழுத்தாணி ழுது

முறிந்தாலும்,

என் துயரம் தீராது !

என்னிதயப் புண் ஆறாது !

என் பிணைப்பு,

பாசப் பிடிப்பு மாறாது !

என் னப்புண்,

ன் மனப்புண் போல் தெரியலாம் !

என் அதிர்ச்சி போல்

ன் அதிர்ச்சியும் நேரலாம் !

என் கண்ணீர்த் துளிகளில்

ன் துயர்ப் பிம்பம் காணலாம் !

என் சோகக் கதை

ன் கதையைக் கூறலாம் !

அப்போது,

ன் கண்ணீர்

என் கண்ணீர் ஆகிவிடும் !

 

++++++++++++++++++++

[37]

இரவில் ஓர் அலறல் !

 

அம்மா வுக்கு என்ன

ஆனது ?”

இப்படி ஓர் அலறல்

எழுந்து,

நள்ளிரவில் கேட்டு மேல்

மாடியில் தூங்கும்

என் மூத்த மகள்

துள்ளி எழுந்து விட்டாள்.

என் பேத்தியும்

விழித்துக் கொண்டாள் !

என் வாயில் எழுந்த

அக்குரல்

கீழ் அறையில் தூங்கும்

எனக்கு மட்டும்

என் காதில்

ஏன் கேட்க வில்லை !

 

+++++++++

[38]

உருகி, உருகி

 

ஊனுருகி உள்ள மெல்லாம்

வெந்து சாம்பலாக,

தானுருகி வாழ்வில்

தனக்கெனப் பிறந்தவளை

வானுலகுக் கென்கையால்

மின்கனலில் அனுப்பி,

நானுருகித் தனியனாக

நான்முகன் எழுதி வைத்தான்.

 

++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

Series Navigationமாயக்கனம்சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 6

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *