தும்மல்

சுரேஷ் சுப்பிரமணியன்

விருப்பம் போல்

வருவதில்லை என்றாலும்

விரும்பியர் நினைக்கும் பொழுது

வருவதால் தும்மல்

எனக்கு பிடிக்கும்

அப்பா நினைக்கிறாரா

அம்மா நினைக்கிறாரா

அக்கா நினைக்கிறாரா

அருமை மனைவி நினைக்கிறாளா

அல்லது

அவள் நினைக்கிறாளா என

ஐயம் வருவதுண்டு

யார் நினைத்தால் என்ன

யாரோ நினைவில் 

நாம் இருக்கிறோம் என்ற

நினைப்பே 

பெருமை தருவதாய் இருக்கும்

தும்மும் பொழுது. 

            – சுரேஷ் சுப்பிரமணியன்

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 218 ஆம் இதழ்குடும்பத்து விதை நெல்லாய் விளங்குபவள் பெண் . பெண்மையைப் போற்றுவோம்