துளிதுளியாய்… (ஹைக்கூ கவிதைகள்)

Spread the love

          கோவை புதியவன்

 

இடிந்த மேம்பாலம்
இடிபாடுகளின் நடுவே
உயிரோடு ஊழல்
நடிகனின் கட்அவுட்டுக்கு
ஊற்றிய பாலில்
வழிந்தோடியது ரசிகனின் முட்டாள்தனம்
உருவ பொம்மையில்
கொழுந்துவிட்டு எரிந்தது
மக்களின் மடத்தனம்
வாசலில் பிச்சைக்காரன்
வயிறு நிரப்பியது
கோவில் உண்டியல்
−கோவை புதியவன்
Series Navigationசெவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸ் முறிந்து எதிர்காலத்தில் வளையமாய்ச் சுற்றலாம்என் இடம்