மூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி

This entry is part 3 of 14 in the series 13 டிசம்பர் 2015

முருகபூபதி — அவுஸ்திரேலியா சரித்திரக்கதை எழுதியவர்களின் வரிசையில் விடைபெற்றவரின் மரணமும் சரித்திரமானது இயற்கையின் சீற்றத்துடன் இயற்கை எய்தியவரின் இலக்கிய வாழ்வும் பணிகளும்                    யுத்தங்களினாலும்  இயற்கை  அநர்த்தங்களினாலும் பேரழிவுகள் நேரும்பொழுது தொலைவில் இருப்பவர்கள் அதனையிட்டு கலங்கினாலும்,  முதலில் அவர்களின் மனக்கண்களில் தோன்றுபவர்கள்  அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு என்ன நடந்ததோ, எங்கிருக்கிறார்களோ  என்ற மனஅவதியில் மணிப்பொழுதுகளை கடந்துகொண்டிருப்பார்கள். இயலுமானால் ஏதும் வழியில் தொடர்புகொண்டும் அறியவிரும்புவார்கள். தொலைத்தொடர்பு சீராக இருந்தால்தான் அதுவும் சாத்தியம். சென்னையில் வரலாறு காணாத […]

தொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்

This entry is part 4 of 14 in the series 13 டிசம்பர் 2015

சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் உறவினரிடம் எனக்கு புது சட்டைகளும் சிலுவார் துணிகளும் அனுப்புபிவைப்பார் அப்பா. நான் அணிந்தது எல்லாமே சிங்கப்பூர் துணிமணிகள்தான். கோபுர சின்னம் சீன பனியன்கள், காலுறைகள், கைக்குட்டைகள் போன்றவையும் அவற்றில் அடங்கும்.  ( அனேகமாக நான் மருத்துவம் படித்து முடிக்கும்வரை இந்த நிலை நீடித்தது. )  அவருடைய நண்பர்கள் சிலர் வேறு ஊர்களுக்குத்  திரும்பினால்கூட அவர்களிடமும் துணிமணிகள் கொடுத்தனுப்புவார்.அவற்றை வாங்கிக்கொள்ள நான் திருவெண்காடு, பெரம்பலூர், திருச்சி போன்ற ஊர்களுச்குச் சென்று வந்துள்ளேன்..அவர்களின் வீடுகளில் எனக்கு […]

செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸ் முறிந்து எதிர்காலத்தில் வளையமாய்ச் சுற்றலாம்

This entry is part 5 of 14 in the series 13 டிசம்பர் 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/4EJjF-M01Dw https://youtu.be/4acxA0J8pVU https://youtu.be/3W0ENEGvTts +++++++++++++++ செந்நிறக் கோள் செவ்வாயிக்கு வக்கிரச் சந்திரன் இரண்டு ! சுக்கிரன் போல் பொரி உருண்டை அல்ல ! உருளைக் கிழங்கு போல் ஒழுங்கீன வடிவமுள்ள துணைக் கோள்கள், ஃபோபாஸ், டைமாஸ் ! பெரியது ஃபோபாஸ் சிறியது டைமாஸ்; செந்நிறக் கோள் தன்னச்சில் சுற்றும் வேகத்தை மிஞ்சிடும் ஃபோபாஸ் ! ஈசா ஏவிய செவ்வாய் வேக விண்ணுளவி ஃபோபாஸைச் சுற்றி விரைவாக்கம் பெற்றிடும் […]

துளிதுளியாய்… (ஹைக்கூ கவிதைகள்)

This entry is part 6 of 14 in the series 13 டிசம்பர் 2015

          கோவை புதியவன்   இடிந்த மேம்பாலம் இடிபாடுகளின் நடுவே உயிரோடு ஊழல் நடிகனின் கட்அவுட்டுக்கு ஊற்றிய பாலில் வழிந்தோடியது ரசிகனின் முட்டாள்தனம் உருவ பொம்மையில் கொழுந்துவிட்டு எரிந்தது மக்களின் மடத்தனம் வாசலில் பிச்சைக்காரன் வயிறு நிரப்பியது கோவில் உண்டியல் −கோவை புதியவன்

என் இடம்

This entry is part 7 of 14 in the series 13 டிசம்பர் 2015

  ஒரு வளாகத்தின் ஒரு பகுதிக்கான வாடகை ஒப்பந்தம் இவை விவாதத்துக்கு அப்பாற்பட்டவை   எந்தக் கதவுகள் யாருக்காகத் திறக்கின்றன எந்த சாளரங்கள் எப்படி மூடப்பட்டன என்பவை தொடங்கி   வளாகத்தின் எந்தப் பகுதி பயன்படுகிறது அல்லது பயன்படுவதில்லை இவை என் கேள்விகளுக்கு உட்பட்டவையே   ஒரு வளாகத்தின் உடல் மொழி அதன் உள்ளார்ந்த சொல்லாடல்களால் அல்ல மௌனங்களாலேயே தீர்மானிக்கப்படும்   எல்லா இருப்பிடங்களும் தற்காலிகமே என்போரே நான் தரவல்ல அழுத்தங்களை நீர்க்கடித்து விடுகிறார்கள்   உறைவிடம் […]

துன்பம் நேர்கையில்..!

This entry is part 8 of 14 in the series 13 டிசம்பர் 2015

குரு அரவிந்தன் (ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாய் இருப்பவர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு செயற்படும் அன்பு நெறிக்காகப் புனையப்பட்ட சிறுகதை) சீதா..! யாரோ வாசலில் கூப்பிடும் சத்தம் கேட்டது. அவள் கனவிலிருந்து வெளிவந்து கண் விழித்துப் பார்த்தாள். தட்டிக்குள்ளால் நுழைந்த வெளிச்சம் கண்ணுக்குள் பட்டுத் தெறித்ததிலிருந்து விடிந்து போயிருப்பது தெரிந்தது. ‘யாராய் இருக்கும்..?’ நெஞ்சில் ஒருவித பய உணர்வு சட்டென்று தேங்கி நின்றது. மீண்டும் அதே குரல் கேட்டது. கவனமாகக் காது […]

அழைப்பு

This entry is part 9 of 14 in the series 13 டிசம்பர் 2015

மாதவன் ஸ்ரீரங்கம் வின்சென்ட் காலிங்பெல்லை அழுத்திக் காத்திருந்தான். வீட்டிற்குள்ளிருந்து டீவி இரைந்தது. இவனுக்கு கால் வலித்தது. பொறுமையாகக் காத்திருந்தான். இரண்டு நிமிடம் கழித்து மறுபடி முயற்சித்தும் யாரும் வராமல்போக, இரும்புக்கதவில் தட்டி சத்தமெழுப்பியபடியே குரல் கொடுத்தான். “சார்…” உடனே பதில்வந்தது. “ஒரு நிமிஷம்.” வெளியே வந்த பெண்மனி நடுத்தர வயதிலிருந்தார். புருவம் சுருக்கினார், “யாருங்க ? “கோபாலன் சார் வீடு ?” “இதுதாங்க. இருங்க வறேன் என்று உள்ளே சென்று சாவிகொண்டுவந்து கேட்டைத்திறந்துகொண்டே “நீங்க “? என்றாள். […]

இடுப்பு வலி

This entry is part 2 of 14 in the series 13 டிசம்பர் 2015

உடலின் எடையைத் தாங்கி நடக்க உட்கார படுக்க உதவுவது நம்முடைய இடுப்பு. இது ஐந்து முதுகுத் தண்டு எலும்புகளால் அமைந்தது. இதை 1,2,3,4,5, இடுப்புத் தண்டு எலும்புகள் ( Lumbar Vertebra ) என்று அழைப்பதுண்டு. இவற்றின் நடுவில் வட்டமான தட்டையான இரப்பர் போன்ற தன்மைகொண்ட வடங்கள் ( intervertebral Disk )உள்ளன. இவை அதிர்ச்சியை உள்வாங்கும் பணியைச் செய்கின்றன. அதாவது ” ஷாக் அப்சார்பர் ” ( Shock Absorber ) போன்றவை. இந்த முதுகுத் […]

பாதிக்கிணறு

This entry is part 10 of 14 in the series 13 டிசம்பர் 2015

– சேயோன் யாழ்வேந்தன் சாதி நெருப்பில் பாதி நெருப்பை அணைத்துவிட்டோம் மீதி நெருப்புதான் எரிக்கிறது சாதிக்காற்றில் பாதிக்காற்றை எரித்துவிட்டோம் மீதிக்காற்றில் மூச்சுத் திணறுகிறது சேறும் சகதியுமான சாதிக்கிணற்றில் பாதிக்கிணற்றைத் தாண்டியதுதான் சுதந்தரத்தின் சாதனையோ? seyonyazhvaendhan@gmail.com

திருக்குறளில் இல்லறம்

This entry is part 11 of 14 in the series 13 டிசம்பர் 2015

செ.சிபிவெங்கட்ராமன் முனைவர் பட்ட ஆய்வாளர் ஓலைச்சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். 613 010 மனமாசு அகற்றிய மக்களது ஒழுகலாறு என்று ஒற்றை வரியில் அறத்திற்குப் பொருள் தருகிறது தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சங்க இலக்கியப் பொருளடைவு.உள்ளத்தில் தூய்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்கிறார் பாரதியார்.உள்ளத்தின் உண்மையொளியே அறமாகும்.மனத்தினும் பாவத்தை நினையாது யாருக்கும் எவ்வுயிர்க்கும் கேடு நினையாது, இரங்கும் தயவும், கொலை, பொய், வஞ்சகம் விடுவதுமே அறமாகும்.இன்றைய உலகின் இன்றியமையாத தேவையாக இவ்வறம் உள்ளது குறிப்பிடத்தக்கது.பழந்தமிழரின் அக வாழ்வானாலும் […]