தூக்கத்தில் தொலைத்தவை

சேயோன் யாழ்வேந்தன்

தூக்கம் கலைந்தெழுந்த குழந்தை
வீறிட்டழுகிறது
தன் கைக்குக் கிடைத்த ஒன்று
காணாமல் போனதுபோல்
உள்ளங்கைகளைப் பார்த்தபடி
கூப்பாடு போட்டழுகிறது
எதைக் கொடுத்தும்
சமாதானமாகவில்லை
என்ன தொலைத்ததென்று
அதற்குச் சொல்லவும் தெரியவில்லை
தொலைத்தது சுதந்தரமோ என்னமோ?
பெற்ற சுதந்தரத்தைப்
பேணிக் காக்கத் தெரியாத
நானெப்படி உதவுவேன் –
கனவின் இருளில்
கைப்பொருள்தன்னை
தொலைத்த குழந்தைக்கு?
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationதொடுவானம் 73. இன்பச் சுற்றுலாசமூகத்திற்குப் பயன்படும் எழுத்து