தெய்வத்திருமகள்

நான் வாழும்
உலகத்துக்குள்
மழையாய் நீ….

நீ வாழும்
உலகத்துக்குள்
மழலையாய் நான்….

வளர்ச்சி அற்று
போனாலும்
மகிழ்ச்சி உற்று
போவேன் உன்னால்..

கள்ளம் இல்லை
கபடம் இல்லை

என் பாச முல்லை
என் செல்ல பிள்ளை

உன்னை தவிர
எனக்கு யாருமில்லை

என்னை விட்டு
நீ பிரிந்தால்
உடலைவிட்டு
உயிர் பிரியும்….

உன்னை விட்டு
நான் பிரிந்தால்
உயிரை விட்டு
உடல் பிரியும்….

நிலவோடு பேசுகையில்
உன்னை கொஞ்சிய ஞாபகம்…
உன்னோடு பேசுகையில்
நிலவுக்கு கொஞ்சம் கோபம் …

தேய் பிறைலும் தேயாத
என் பால் நிலவே…
தேடினாலும் கிடைக்காத
உன் போல் உறவே…

என் தேவதை
நீயே…நீயே
என் தேவையும்
நீயே…நீயே

தெய்வம் தந்த
திருமகளே…
எனைத்தேடி வந்த
தேவதைமகளே..

இப்படிக்கு

ச. மணி ராமலிங்கம்

Series Navigationவாசிக்கஇயலாதவர்களுக்குபேசித்தீர்த்தல்