தொலைந்து போகும் கவிதைகள்

Spread the love

ஆதியோகி

எழுத மறந்து
எப்பொழுதோ
தொலைந்து போன
கவிதைகளில் சில
இப்பொழுதும்
பேருந்து பயணத்தின் போதோ
இரவு உறக்கம் களையும்
சிறு இடைவெளியிலோ
தீவிர வாசிப்பின் ஊடாகவோ
ஏதோவொரு
எழுத இயலாத தருணத்தில்
நினைவடுக்குகளின் உள்ளிருந்து
மீண்டு வந்து எட்டிப்பார்த்து விட்டு
மீண்டும் தொலைந்து போகின்றன..!

– ஆதியோகி

Series Navigationமூன்று முடியவில்லைநீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்