நச்சுச் சொல்

தர்மத்தில்
கொஞ்சம் சுயநலம்
குற்றமில்லை

வியாபாரத்தில்
கொஞ்சம் பொய்
குற்றமில்லை

சீரான நலத்தில்
சில்லரை நோய்கள்
குற்றமில்லை

வளமான பயிரில்
கொஞ்சம் களைகள்
குற்றமில்லை

களிப்பில்
கொஞ்சம் கவலைகள்
குற்றமில்லை

விசுவாசத்தில்
கொஞ்சம் விளம்பரம்
குற்றமில்லை

நட்பில்
சில முட்கள்
குற்றமில்லை

நல்ல பேச்சில்
ஒரு நச்சுச் சொல்
சுற்றமே இல்லை

வெள்ளத்தில் ஓடம்
நல்ல சொல்
ஓடத்துக்குள் வெள்ளம்
நச்சுச் சொல்

அமீதாம்மாள்

Series Navigationநான் செத்தான்மாறியது நெஞ்சம்