நடை

Spread the love

மருத்துவர் அவனைக்

காலையில் நடக்கச்

சொல்லி விட்டார்

நோயில்லை தற்காப்புதான்

நடக்கும்போதும் சிந்திக்க வேண்டும்

என்பது அவன் எண்ணம்

அப்போது புதிய கருத்துகளும்

கவிதைகளும் தோன்றும்

ஆனால் சரியாக நடக்க வேண்டும்

நாம் சரியாக நடந்தாலும்

வாகனங்கள் மீது கவனம் தேவை.

காலைநடையில்தானே

இப்போதெல்லாம் வெட்டுகிறார்கள்

வலப்புறம் நடப்பதுதான்

சிறந்தது என்பார் ஒரு சிலர்

நடை என்றால் ஒழுக்கம்

என்று பொருள் கூறுவர்.

இங்கும் பிறரின் நடைகளே

நம் நடையை வழி நடத்துகின்றன

பொற்கொல்லன் வருவதை

‘விலங்கு நடை’ என்பார் இளங்கோ

‘நடையில் நின்றுயர் நாயகன்’

என்பார் கம்பர்.

நடை என்று வீட்டின் முன் பக்கம்

வாசலுக்குப் பின்னால்

இருப்பதைக் கூறுவர்

ரேழி என்றும் சொல்வதுண்டு

கால்நடை என்பது

காலால் மட்டுமே

நடக்கக் கூடியதாம்

மனிதன் மனத்தாலும்

நடக்கக் கூடியவன்

நடையை ஒரு

நாடகம் அன்றோ நடக்குது

என்பார் கவியரசர் கண்னதாசன்.

சொற்கள் நடந்தால் உரைநடை

நடனமாடினால் கவிதை என்பார்

வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான்

இலக்கியம் அன்ன நடை

களிறு நடை என்றுதான் பேசும்

அசைந்து அசைந்து

பின்பக்கம் ஆட்டி ஆட்டி

நடக்கும் வாத்து நடை கூட

ஓர் அழகுதான்

அததற்கு அவரவர்க்கு

ஏற்ற பல நடைகள்

முட்டிவலி முதியோர்கள்

நடக்கலாம் என்று

முன்மொழிவோர் ஒரு சாரார்

 நடக்கக் கூடாது

என்பார்கள் ஒரு சிலர்

நம்நாட்டில் எதற்குமே

இருகட்சிகள்தாமே

Series Navigationஅசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..கோடுகள்