நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா

 

க.தூயவன்

 
நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா
அழகான கைப்பிடியுடன் கம்பீரமாய் வரவேற்கிறது தேக்குமர கதவு
நெளி நெளியாய்
வரி வரியாய் 
செதுக்கிய வேலைப்பாடுகளுடன்
நிறைய சன்னல்கள் வேங்கை மரத்திலும்
உத்திரத்து பிடிமானங்கள் 
இழுப்பை மரத்திலும்
வேம்பில் நேர்த்தியாய்  தூண்களும்
பூவரசு தாழ்வாரத்து ஊஞ்சலும்
பெரிய தாழ்ப்பாள் ஆடும்
மாமரத்து பின்கதவும்
கொண்ட வீடு பிரமாதமாய்… 
பெருநகர வாழ்வில்
இப்படித்தான் வாழ்கிறோம்
இலை உதிர்க்காத மரங்களோடும்
பூக்காத வாழ்வோடும்!
 
க.தூயவன்
Series Navigationதீட்சண்யம் மனசு