நன்றி _ திறந்த கதவுகளுக்கும் தந்த கரங்களுக்கும்!

Spread the love

லதா ராமகிருஷ்ணன்

நட்பினருக்கு வணக்கம்.

சில நாட்களுக்கு முன் நம் ஃபேஸ்புக் தோழர் ‘பார்வையற்றவன்’ ரயில்கள் ஓடாததால் ரயில்களில் வயிற்றுப்பிழைப்புக்காக சின்னச்சின்ன பொருட்களை விற்றும், நல்ல நல்ல பாடல்களைப் பாடி நம்மை மகிழ்வித்தும் வாழும் பார்வையற்றோர் பலர் இன்று கையறுநிலையில் இருப்பது குறித்தும் மிகவும் மனம் வருந்தி எழுதியிருந்தார்.

அந்த சமயத்தில் நான் சார்ந்திருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் கையிருப்பு 26,000 ரூபாய் மட்டுமே. எங்கள் நிறுவனத் தலைவர் அமரர் டாக்டர் ஜி.ஜெயராமன் அவர்கள், குறிப்பிட்ட செயல்திட்டங்களுக்காக மட்டுமே நன்கொடை வாங்கவேண்டும் என்றும் நிறைய கையிருப்பு இருக்கலாகாது என்றும் கொள்கை யுடையவர். தவிர, வருடா வருடம் நம்மிடம் இருக்கும் கையிருப்பில் 85% செலவழித்தாகவேண்டும் என்ற விதிமுறையும் உண்டு.

இந்நிலையில், எங்களிடமிருந்த 26000 ரூபாய் கையிருப்பில் 20000 ரூபாயை ஆண்டுவிழாவுக்காக ஒதுக்கிவைத்திருந்த அந்த 20000 ரூபாயை மேற்குறிப்பிட்ட பார்வையற்ற சிறு தொழிலாளி களுடைய தற்போதைய இடர் தீர்க்க தங்களான முயற்சியை மேற்கொண்டிருக்கும் ஹெலன் கெல்லர் அசோஸியன் ஃபார் தி வெல்ஃபேர் ஆஃப் தி டிஃபரெண்ட்லி ஏபிள்ட் அமைப்புக்கு நன்கொடையாக அளிப்பது என்றும், ஆண்டுவிழா கொண்டாட வேண்டாம் என்றும் எங்கள் அமைப்பினர் தீர்மானித் தோம்.

திண்ணை இணைய இதழில் ‘பார்வையற்ற வன்’(தோழர் பொன்.சக்திவேல்) எழுதிய கட்டுரையை அனுப்பிவைத்தேன். என் ஃபேஸ்புக் டைம்லைனிலும் உதவ முன்வருபவர்கள் எங்கள் அமைப்பையும் அணுகலாம் என்று எங்கள் அமைப்பு சார்பாகவும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

திண்ணை இணைய இதழில் நான் தொடர்ந்து எழுதிவரும் காரணத்தால் திண்ணை இணைய இதழின் ஆசிரியர் தனது தோழர் திரு.முருகானந்தம் எங்கள் அமைப்பிற்கு இந்த அத்தியாவசியப் பணி தொடர்பாய் ரூ.1,00,000 நன்கொடை அனுப்பித் தருவதாகத் தெரிவித்து், அதை எத்தனை பேருக்குத் தரமுடியுமோ அத்தனை பேருக்குத் தந்துதவும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன்படி, இன்று காலை வங்கிக்குச் சென்று தோழர் சரவண மணிகண்டன் வங்கிக்கணக்கிற்கு ரூ.70,000 (வந்த நன்கொடையிலிருந்து ரூ.50,000 மற்றும் எங்கள் அமைப்பிலிருந்து ரூ20000) டெபாசிட் செய்துவிட்டேன். வங்கி மேலாளர் உடனடியாக பணம் டெபாசிட் செய்யப்படுவதற்கு உதவி செய்தார்.

மீதமுள்ள தொகையை எங்களிடம் ஏற்கெனவே இந்த நெருக்கடிகாலத்தை சமாளிக்க உதவிகோரி யுள்ள சில அமைப்புகள், தனிநபர்களுக்குத் தருவதாக உள்ளோம்.
.
பார்வையற்றவன்’ எழுதிய கட்டுரையை நான் பகிரவேண்டி அனுப்பியபோது உடனடியாக அதைப் பிரசுரித்ததோடு என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு எங்கள் அமைப்புக்கு நன்கொடைத் தொகையை அனுப்பித்தந்து தகுந்தவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்ட திண்ணை இணைய இதழ் ஆசிரியருக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மின்னஞ்சல் முகவரி: editor@thinnai.com). நன்கொடையளித்த திரு.முருகானந்தம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகிறது.

பார்வையற்றவன் எழுதிய அந்த அருமையான கட்டுரைக்காக அவருக்கும் அதன் மூலம் எனக்கு அறிமுகமான தோழர்கள் சித்ரா, சரவண மணிகண்டன் இருவருக்கும், அவர்கள் செய்யும் ஆத்மார்த்தமான பணி குறித்து எங்கள் அமைப்பி னரிடம் தெரிவித்த எங்கள் அமைப்பின் செயலர் கீதாவுக்கும் எங்களுடைய இந்த முயற்சிக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த எங்கள் தலைவர் திரு.சுகுமாருக்கும் என் நன்றி உரித்தாகிறது.

தோழமையுடன்

லதா ராமகிருஷ்ணன்
பொருளாளர்
வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்.

Series Navigation‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்தலைகீழ்