நாற்காலிக்காரர்கள்

Spread the love

1486905375

இந்திய திருநாடே, தமிழகத்து அரசியல் கோமாளிகளையும்,
ஏமாளி மக்களையும் பார்த்து சிரிக்கின்றனர்.
பொறுமையின் உருவம், பன்னீர், அம்மாவின் சமாதியில்
தியானம் செய்துகொண்டு, பொங்கி எழுந்தார். உண்மைகளை
போட்டுடைத்தார். போயஸ் தோட்டத்து உண்மைகளை,
நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார். இதுவரை,
அந்த கூட்டத்துட ன் அங்கமாக இருந்தவர், அவரது
பதவிக்கு பங்கம் வந்த போது, பொங்கி எழுந்துள்ளார்.
இது தர்மமா ? நியாமமா? என்று, நம்மை பார்த்துக்
கேட்கின்றார். நாம் தான் ,ஆமாம் சாமிகளாச்சே !
ஆமாம், ஆமாம் சாமி என்று தலையாட்டுகின்றோம்.
சசிக்கு பின்னால், ஒரு பெரிய குள்ளநரி கூட்டமே
நின்கின்றது.
பன்னீருக்கு பின்னால், மக்கள் கூட்டம் கூடி நின்றால்,
மீண்டும் அந்த கூட்டத்தின் கொட்டத்தை அடக்கலாம்.
இது கவுண்டர்களுக்கும், தேவர்களுக்கும் நடக்கும்
மறைமுக சண்டையா ? ஒன்றும் புரியவில்லை.
அல்லது, பன்னீரே செய்த டிராமா ? ஒன்றும்
புரியவில்லை.!!
ஒரு முதலமைச்சரை, மிரட்டி, கட்டாயப்படுத்தி
ராஜினாம கடித்தத்தை வாங்கியுள்ளனர்.அவசரமாக,
சசி எடுத்த பொது செயலாளர் பதவி செல்லாது என
ஒரு செய்தி வந்துள்ளது.
அதிமுக இரண்டு இலைகளாக பிரிந்து விட்டது.
எம்ஜிஆரும்,ஜெயலலிதாவும் சேர்ந்து இருந்தார்கள்.
அந்த இலையை பிரித்துவிட்டனர் , பாவிகள். இவர்கள்
பதவி ஆசைக்கு, ஒரு கட்சியின் வரலாற்று
சின்னத்தையே, சின்னாபின்னமாக்கிவிட்டனர்.அம்மாவின் ஆன்மா நின்று கொல்லும்
சசி தலைக்கு மேல், முறைக்கேடான சொத்துக்
குவிப்பு வழக்கின், தீர்ப்பு எனற கத்தி தொங்கி
கொண்டுள்ளது.
இந்த கத்தி கழுத்திலும் பாயலாம், தலையணையிலும்
போகலாம்.இதை பற்றிக் கவலைப்படாமல், அந்த
ஒய்யார நாற்காலியை அடைய நினைப்பது, என்ன
ஒரு மடமை. நாற்காலி பித்து, தலைக்குள் சென்று
விட்டால், இப்படித்தான் நடக்குமோ ?
இதற்கெல்லாம், பலி கடா, தமிழ் நாட்டு மக்களா ?
அம்மாவின் சாவில் மர்மம் உள்ளதாகவும்,
அதற்கும் சசிக்கும் தொடர்புள்ளதாக ஒரு செய்தி
கிளம்பியுள்ளது. அதற்கு, விசாரணை கமிஷன்
அமைக்கப்போவதாக, பன்னீர் ஒரு குண்டை
போட்டுள்ளார். சசிக்கு, பல திசைகளில் இருந்தும்
தொல்லை சூளும்.
இதையெல்லாம் மீறி, அவர், முதலமைச்சர்
நாற்காலியில் உட்கார ஆசைப்படுகின்றார்.
அம்மாவின் ஆன்மா சும்மா விடுமா !
சமூக வலைத்தளங்களில், மாணவர்களும்,
இளைஞர்களும் தங்களது பெருவாரியான
ஆதரவை, பன்னீருக்கு தருவதாக பதிவு
செய்துள்ளனர்.
அம்மாவுக்கு, ஒரு காலத்தில் சசி ஒரு மன்னிப்பு
கடிதம் எழுதினார். அதில் தனக்கு அரசியல்
வேண்டாம். பதவி வேண்டாம், பட்டங்கள்
வேண்டாம், பங்களா வேண்டாம், பணம்-காசு-
பொருள் வேண்டாம், மண்-பொன், குடும்பம்
ஏதுவும் வேண்டாம்.
எனக்கு அக்காவின் நிழல் ஒன்றே போதும்.
அவரின் நட்பு ஒன்றே போது. என் வாழ்நாளை
கழித்துவிடுவேன்”
இன்று அந்த கடிதம், மெரினா காற்றில் கலந்துவிட்டது.
என்ன ஒரு , அருமையான நாடகம் ?
இத்தனை நாள்வரை,  போஸ்டரில் சசியின் படத்தை
கிழித்தெரிந்தனர், சாணி அடித்தனர். ஆனால், நேற்று,
திருப்பத்தூர் முன்னால் கவுன்சிலர், சசியின் உருவ
பொம்மையை எரித்துள்ளார். அவரது எதிர்ப்பை,
வன்மையாக பதிவு செய்துள்ளார். இப்படியே சென்றால்,
பலரின் மனதில், இந்த வன்மம் தோன்ற ஆரம்பிக்கும்.
ஒரு புது திருப்பமாக, ஒபிஸ், அம்மாவின் அண்ணன்
மகள் தீபாவை அழைத்துள்ளதாக ஒரு செய்தி
கூறுகின்றது. தீபாவிற்க்கு பின்னால், ஏற்கெனவே
பல நொந்த உள்ளங்கள் சுற்றி திரிகின்றன. இது
அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமையலாம்.
ஜல்லிக்கட்டுக்கு எழுந்த இளைஞர்களின், புரட்சி அலை,
இன்று எழவேண்டும்.இதுவரை படித்த சிந்திக்க தெரிந்த
பல் நல்ல உள்ளங்கள், அரசியல் பக்கம் தலைக்காட்டாமல்
விட்டதால், ஊழல் பெருச்சாளிகளின் குகையாக, அரசியலும்,
சட்டசபையும் மாறிவிட்டது.இதற்கு ஒரு முடிவு
கட்டவேண்டும். ஏன் காந்தி வந்தால் தான் வருவீர்களா ?
காந்திதான் வழிக்காட்டியாக நிற்கின்றாரே !
அவர் பல சோதனைகளை கடந்து வந்தவர்.
அந்த வழியை எடுத்து கொள்ளலாமே .

தூரத்தில் கமல்ஹாசன் குரலும், மாதவன் எதிரொலியும்
கேட்கின்றது. மன்சூர் அலிகான் , கத்தியை தூக்குகின்றார்.
ஹுசைனி, கோபத்தின் உச்சக்கட்டத்தில் கத்துகின்றார்.
ஒபிஸ் ஆதரவு அலை, அலைக்கற்றை வழியாக பரவுகின்றது.
டிராபிக் ராமாசாமி, சும்மா இருப்பாரா. அவரும் தர்மத்தின்
பக்கம் நிற்க, மக்களை அலைக்கின்றார்.

எல்லோரும் கவர்னர் முடிவைத்தான் எதிர்பார்கின்றோம்.

மக்கள் முடிவு எல்லோருக்கும் தெரிந்ததே !

தூரத்தில் கோபாலபுரத்து மன்னரகள் , புத்தியை
தீட்டிக் கொண்டிருப்பதும் தெரிகின்றது, அடுத்தது,
அவர்கள் ஆட்டமா ?

என்ன அடித்தாலும், தமிழன் தாங்குவான்டா !
தாங்குவான்டா!!

Series Navigationமாவீரன் கிட்டு – விமர்சனம்பவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்