நெட்ட நெடுமரமாய் நின்றார்   மது மனிதர்கள்!

இராமானுஜம் மேகநாதன்

மது குடித்த மனிதனை

மது குடித்துக் கொண்டிருக்கிறது.

மாதர் மதுக்கடை இடிக்கின்றார்

மகாளியாய் விஸ்வரூபம் எடுக்கின்றார்.

மது குடித்த முறுக்கு மீசை ஆண்

நெட்ட நெடுமறமாய் நிற்கின்றான்.

நேரிய ஆண்கள்.

ஆஹா! இதுவல்லவோ உன்னத சமுதாயம்!

மது ஒன்றும்  மக்கள் பிரச்சினையல்லவே.

மது மாதர் பிரச்சினை! மகளிர் பிரச்சினை!

மது குடிக்க உரிமை ஆணுக்கு

மது உடைக்க உரிமை பெண்ணுக்கு.

மற்ற எல்லோரும் எதற்கு!

மயிர் பிடுங்குவதற்கா?

மட்டற்ற அரசாங்கம்

மாண்புமிகு அமைச்சர்கள்

மதிமிகு  ஆளுநர்கள்

மக்களெல்லாம் ஆடுநர்கள்.

எகிறி குதிக்கும் எதிர் ‘காட்சிகள்’

எல்லாவற்றுக்கும் ஒன்றுசேரும்

‘என்ஜிஓ’க்கள்.

எங்கே போனார்கள்

இந்த மாணவர்கள்.

எதையும் திறந்த மேனியாய் எழுதும் கவிஞர்கள்

எங்கே?

எதனுடனும் நான்

ஏழையுடனும் நான் எனும்

ஏகாந்த நடிகர்கள் எங்கே?

மாட்டை மல்லுக்கட்ட

மத்திய அரசையுடன்  மல்லுக்கட்டி ஒரு போராட்டம்.

மதிமிகு மக்கள் எல்லோரூம் வந்திட்டார்.

மதுவுக்கு மட்டும்

மகளிர்   மட்டும் .

மகளிரை அடிக்க மட்டும் ஒரு காவல்துறை.

அவராவது வருகின்றாரே.

மது மகளிர் பிரச்சினையே.

மற்றவர்க்கு எதற்கு வலி.

அழகிய சமுதாயமே!

அழுகிய சமுதாயமோ!

 

00

இராமானுஜம் மேகநாதன்rama_meganathan@yahoo.comஇணைப்பேராசிரியர், மொழிக் கல்வித் துறைதேசிய பள்ளிக் கல்வி ஆராய்ச்சி குழுமம் National Council of Educational Research and Training (NCERT)சிறி  அரபிந்தோ மார்க், புது தில்லி  110016Mob: 09968651815

Series Navigationதிருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும் “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” வெளியீட்டு விழா65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு மெக்சிகோ சிக்குலுப் மீது முரண்கோள் தாக்கியது 10 பில்லியன் ஹிரோஷிமா அணு ஆயுத குண்டுகள் வெடிப்புக்கு ஒப்பாகும்