பகற்கனவு

Spread the love

 ..

அருணா சுப்ரமணியன் 

வளமிகு குளம் 

இன்று 

வண்டலாகிறது!!


சிறுமீன்களின் 

ரத்தத்தில்  

வயிறு வளர்த்த 

மீன்கொத்தி  

தூர தேசத்தில் 

உல்லாசமாய் உலவ…


நீரற்ற நிலத்திலும் 

பிழைத்திருக்கும் 

முதலைகள் 

நிம்மதியாய் 

நித்திரை கொள்ள…


சிறுமீன்கள் 

மீந்திருக்கும் தன் 

சிறுவாட்டுச் சதையையும்

தாரை வார்த்து 

வானம் பார்த்து 

நிற்கின்றன 

வண்டல்  விரைவில் 

வல்லரசு ஆகுமென்று!!

 

 

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2016 மாத இதழ்நவ-28. அய்க்கூ வல்லுநர் மாட்சு பாட்சோ பிறந்த தினக் கவிதை