`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்` 60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

Spread the love

சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றத்தின்  `பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்`  60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்  ஏற்பாடு செய்துள்ளோம்.    இக்கருத்தரங்கைச் சற்று மாறுபட்ட வகையில் “சிங்கப்பூரின் 200ம் ஆண்டில் மக்கள் கவிஞரின் சிந்தனைகள்” என்ற தலைப்பில் நிகழ்த்த இருக்கிறோம் .  
மக்கள் கவிஞரின் சிந்தனைகள்,  கண்ட கனவுகள் சிங்கப்பூரின் வளர்ச்சியோடு எப்படி ஒத்துப் போகிறது என்று பொருத்திப் பார்க்கும் அழகிய முயற்சிதான் இக்கருத்தரங்கம். 
இக்கருத்தரங்கின் முத்தாய்ப்பான நிகழ்வு   என்னவெனில் சிங்கப்பூர் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களே இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பேச, பாட இருக்கிறார்கள் என்பதுதான்.
மாணவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு ஆகையால் சக மாணவர்களின் ஒருமித்த பேராதரவுக்குக் குறையிருக்காது. 
“தங்களின் வருகையால் ஊக்கம் பெறப் போவது பேசப்போகும்  மாணவர்கள்  மட்டுமல்ல அவர்களது பேச்சால் தாங்களும்தான் “ என்பதை உறுதியாக தெறிவித்துதங்களது வருகையை எதிர்பார்ககிறோம்

Series Navigationபரிணாமம்3. விரவுப் பத்து