பத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.

Spread the love

_MG_2316

 

சென்னை ஜனவரி ’10 ,2015

சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலசில் இன்று காலை 11 மணிக்கு காட்பாதர் திரைக்கதை நூல் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டது.

1972ல் ஹாலிவுட்டில் வெளியான காட்பாதர். இன்று வரை உலகம் முழுக்க மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கி வருகிறது. வணிக ரீதியாகவும் விமர்சன தர ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மரியோ புசோவின் நாவலை அடிப்படையாக வைத்து பிரான்ஸில் போர்ட் கபோலா இயக்கிய இத்திரைப்படத்தை தழுவி இன்றும் உலகம் முழுக்க பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இயக்குனர் பாலாஜி சக்திவேல், காட்பாதர் தமிழ் திரைக்கதையை வெளியிட இயக்குனர் சீனு ராமசாமி பெற்றுக்கொண்டார். மெட்ராஸ் திரைப்பட புகழ் நடிகர் கலையரசன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

தொடர்ந்து வாழ்த்தி பேசிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் திரைக்கதை வசனங்களுக்கு பெயர் பெற்ற இந்த நூல் தமிழில் எப்போது வரும் என காத்திருந்தேன் .இப்போது அது என் கைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

இயக்குனர் சீனு ராமசாமி தனது வாழ்த்துரையில் இலக்கியமும் சினிமாவும் பிரிக்கவியலாத என் இரு கண்கள் .. இது போன்ற நூல்கள் என் இடைவிடாத படைப்பு மனோநிலைக்கு ஆறுதலாகவும் அடுத்த நிலைக்கு நகர்ந்து செல்ல ஏதுவாகவுமிருக்கின்றன என்றார்.

திரைக்கதையை தமிழில் மொழிபெயர்த்துள்ள ராஜ் மோகன் அடிப்படையில் ஊடகவியலாளர் . எழுத்தாளராக அவரது முதல் நூலான காட்பாதர் தமிழ்திரைக்கதை நூலை எழுத்தாளர் மற்றும் திரைப்பட வசனகர்த்தா அஜயன் பாலா தனது நாதன் பதிப்பகம் மூலமாக வெளியிட்டுள்ளார்.

 

Series Navigationபாரீஸின் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது?நாசாவின் முதல் சுய இயக்கு ஆய்வுக் கருவி எரிமலைத் துளையில் சோதனை செய்கிறது