பயத்தை உண்டாக்கு

 

 
சி. ஜெயபாரதன், கனடா
 
 
 
ஆயுள் உறுதி இல்லை. 
செய்யும் தொழில்
வேலை கூலி
நிரந்தரம் இல்லை.
கட்டிய மனை, மாளிகை
இல்லாது போகலாம்
புயல் அடித்து.
பறக்கும்
விமான எஞ்சின் 
பழுதாகி கடலில் வீழலாம்
கார் டயர் வெடித்து
விபத்து 
நேர்ந்து விடலாம்
சுற்றுலாவில்
தொற்று நோய் பற்றி
மருத்துவ மனையில் 
பலநாள்
படுத்துக் கிடக்கலாம்.
அணு உலைகள் வெடித்து
கதிரியக்கம் 
காசினியில் பரவலாம்
பூகம்பம், காட்டுத் தீ
சூறாவளி,
சுனாமி, 
ஹரிக்கேன் அடித்து மக்கள்
எல்லாம் இழக்கலாம்.
இப்படி
பயம் காட்டியே பிழைத்து வரும்
பண முதலைகள் !
மிஞ்சும் சம்பாதிப்பில் நீ
எத்தனை சதவீதம் 
கப்பம்
கட்டுவாய் 
ஆண்டாண்டு தோறும்?
 
++++++++++++++++++++
Series Navigationவனம்கனவு