பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்

Spread the love

ஒரு பறவையின் ஒலித்தல் எனக்குப் பல விதங்களில் அர்த்தமாகிறது.

பறக்கும் திசையைப் பறக்கையிலே தீர்மானிக்கும் அதன் பறத்தலைப் போல் எதிர்பாராது ஒலித்தலில் அதன் பரிமாணம் விரிகிறது.

ஆற்றாமையாயும், ஆனந்தமாயும், துக்கமாயும், ஏமாற்றமாயும் எத்தனையோ அர்த்தங்களில் என் நிலைக்கேற்பவும் அர்த்தமாகிறது.

‘க்கீ க்கீ க்க்கீ க்க்கீ க்க்க்கீ…….’என்று துரித கதியில் ஒலிக்குங் கால் காலம் கடந்து கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கிறது.

விட்டு விட்டு ஒலிக்கும் அது ஒலிக்காத இடை வெளிகளில் நான் கவனிக்கத் தவறி நழுவிய காலத்தையும் குறிக்கிறது.

ஒலித்த பின் தேய்ந்து கொண்டே இருக்கும் ஒலியைத் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கும் என் மனத்தை ஒரு முடிவில்லா மெளனப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்கிறது.

பறவையின் ஒலித்தலில் விடுதலையின் குரலை மனம் கண்டு கொண்டாலும் என்ன செய்ய விட்டுப் பறக்க முடியாமல் உயர்ந்து பறவையாகி.

கு.அழகர்சாமி

Series Navigationசிமோனிலா கிரஸ்த்ராவிசுவப்ப நாயக்கரின் மகள்