பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி

Spread the love

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். என் பெயர் சு.துரைக்குமரன். இணையத்தமிழ் இதழ்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அது தங்களுக்குத் தெரிந்ததே. ஆய்வு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. திண்ணையின் புதிய வடிவமைப்பு மிக அருமை. புதிய வண்ணத்தில் புதிய வசதிகளுடன் கண்களுக்குக் குளுமையாக உள்ளது. ஆனால் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் மாற்றியுள்ளது வியப்பாக உள்ளது. பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி விளக்க வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆய்வுக்குறிப்பில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி. பதிலை எதிர்பார்த்து…

சு.துரைக்குமரன்.

 

அன்புள்ள துரைக்குமரன்

பழைய கட்டுரைகள் திண்ணை இதழில் இருக்கின்றன. அவற்றுக்கான இணைப்பு விரைவில் சரி செய்யப்படும்

http://thinnai.com/index.php இடத்தில் பழைய இதழ்களை பார்க்கலாம். இணைப்புகளில் thinnai.com/?module என்று இருக்கும் இடத்தில் thinnai.com/index.php?module என்று மாற்றிகொண்டால் அந்த கட்டுரைகளை பார்க்கலாம்.

இவற்றை இணையப்பக்கத்திலேயே சரி செய்ய முயன்றுகொண்டிருக்கிறோம்

 

 

Series Navigationஉலரும் பருக்கைகள்…இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?