பாகற்காய் விற்க வந்த சிறுமிகள்

Spread the love
ஹிந்தியில் :  ஏகாந்த் ஸ்ரீவஸ்தவ்
தமிழில் : வசந்ததீபன்
 
____________________________________________
 
 
பழைய பாழடைந்த வீடுகளில்
வயல் _ மைதானங்களில்
புகைவண்டியின் தண்டவாளங்களின் ஓரங்கள்
சாலையோரங்கள் 
குப்பை குவியல்களில்  
காட்டுப் பாகற்காய்களின் 
அந்தக் கொடிகள் வளர்ந்திருக்கின்றன
அங்கிருந்து பறித்து கொண்டு வருகிறார்கள் மூன்று சிறுமிகள்
சின்னச் சின்ன அடர் பச்சை
கொஞ்சம் பாசி போன்ற நிறங்களில்
மற்றும் விலை பேரத்திற்குப் பிறகு மூன்று ரூபாய்களில்
விற்கிறார்கள்
அந்த மூன்று ரூபாய்களை அவர்கள் தங்களுக்குள் பங்கு பிரித்துக் கொள்கிறார்கள்
அப்போது அவர்களுக்கு ஒரு _ ஒரு ரூபாய் கிடைக்கிறது
பாகற்காய் கொடிகளை தேடுவதில்
மற்றும் அவற்றை பறித்து விற்பதில்
அவர்களுக்கு ஆகிறது அரை நாள் 
அதனால் இந்த ஒரு ரூபாய்
அவர்களின் அரை நாளின் கூலியாக இருக்கிறது
என்னுடைய பாதி நாளின் சம்பளத்தை விட
எவ்வளவு குறைவு
மற்றும் அவர்களின் பாதி நாளின் உழைப்பு
எவ்வளவு அதிகம் என்னுடைய பாதி நாளின் உழைப்பை விட
பாகற்காய்கள் விற்கப்படுகின்றன
ஆனால் அவர்களின் கசப்பு போகிறது திரும்பி
அந்த சிறுமிகளோடு
அவர்களின் வாழ்வில். 
 
🦀
ஹிந்தியில் :  ஏகாந்த் ஸ்ரீவஸ்தவ்
தமிழில் : வசந்ததீபன்
Series Navigationதூங்காமல் தூங்கி…ஏப்பம்