பாடம்

Spread the love

 

 

 

ஆ. ஸ்டாலின் சகாயராஜ்

முறுக்கு மூக்கங்கயிறு

    துளைக்காத காளை

அடக்கம் அதை மறந்து

    குதிக்கும் காலால்

பிடித்து அடக்குபவரை

   உதைத்து தாக்குகிறது

கொம்பை முறைத்து காட்டுகிறது

     கோவம் தலைக்கேறுகிறது

பாவம், அடக்கி ஆள்பவனோ

     கயிற்றின் பிடியை விட்டு விட்டான்

குதித்தெழுந்து புறப்பட்டதோ

    கொதிக்கும் எண்ணையில் விழுந்த

வேகம்

 

சட சட வென விரைந்த கால்கள்

 விடு விடு வென

ஊக்கம் இழந்து

வதங்கிப் போன செடியாய்

துவண்டு நின்றது

மகிழ்ந்து கொண்டான்

கோவம் கொண்டவன்

அயர்ந்து நின்ற காளை கண்டு

அடுத்த நாளே

அதற்கு வேலி 

இழுத்துப்பூட்டினான்

சுவாச துளையில் 

 

விருப்பம் மரத்தினை

   வளர்க்க விடாமல்

நெருக்கும் பொறுப்பையெல்லாம்

சில கயிற்றுகளின்

  எண்ணம் வளைத்து பிடிக்க

நம்மால் பணிக்கு செல்கிறது

    இநத அடக்கும் கையிறை கண்டு

அவன் அடையாளம் கண்டுக்கொண்டான்

  

Series Navigationபுதிய வாழ்க்கையில் புதிய தலைமுறை – அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல்துருக்கி நாட்டில் நடந்த ரஸ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட நகர்வு  என்ன?