பாராட்ட வருகிறார்கள்

Spread the love

பாராட்ட வருகிறார்கள்

அவசரமாய்
ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை!
சம்பிரதாய வாழ்த்து ,
அழுத்தும் கைகுலுக்கல்,
பொய்யெனப் புரியும்
புனைந்துரைகள்
எல்லாவற்றுக்கும்
முகநூலின்
ஒற்றை விருப்பச் சொடுக்காக
புன்னகைக்கலாமா?
பல்….?
தலையசைப்பு
சம்மதமாகவா ?மறுப்பாகவா?
மையமாகவா?
கண் பணித்துவிடுமோ…
சீரான சுவாசத்தோடு
வெற்றுப்பார்வை தோதாகுமா?
பெருமிதம்?கூச்சம்?
”எவ்வளவோ பாத்துட்டோம்..?
இதற்குத் தானே ஆசைப்பட்டாய்….?
எது பொருந்தும்….?
அவசரமாய் ஒரு கண்ணாடி ,
அல்லது
ஒத்திகைக்கு ஒரு நல்ல துணை!
-உமாமோகன்

Series Navigationகவிதைகள்பஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்